ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து.. யார் இந்த ஆர்த்தி! அவரது அம்மா பற்றி தெரியுமா.. முழு பின்னணி
சென்னை: கடந்த சில மாதங்களாகவே நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விட்டுப் பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வந்த நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வமாக ஜெயம் ரவி இப்போது அறிவித்துள்ளார். இதன் மூலம் ஜெயம் ரவியின் 15 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. அவரது மனைவி ஆர்த்தி யார்.. அவரது பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. பேமலி ஆடியன்ஸ் அதிகம் கொண்ட ஜெயம் ரவிக்கு எப்போதும் நம்ம வீட்டுப் பையன் இமேஜ் இருந்து வந்துள்ளது.

பரவிய தகவல்: இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதி பிரிய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. ஒரு கட்டத்தில் ஆர்த்தி தனது சோஷியல் மீடியாவில் ஜெயம் ரவி உடன் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் டெலிட் செய்தார். இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல் பரவியது. இருப்பினும், அதை இத்தனை காலம் இரு தரப்பும் உறுதி செய்யவில்லை.
இதற்கிடையே இன்றைய தினம் இது குறித்த அறிவிப்பை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். சுமார் 15 ஆண்டுகள் நீடித்த ஜெயம் ரவி- ஆர்த்தி திருமண வாழ்க்கை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்த க்யூட்டான ஜோடியாக ஜெயம் ரவி- ஆர்த்தி பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் பிரிந்தது பலருக்கும் இங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ஆர்த்தி: இருவருக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு அயன் மற்றும் ஆரவ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த ஜோடி இப்போது பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் இப்போது வலைத்தளங்களில் ஆர்த்தியை தேடி வருகிறார்கள். யார் இந்த ஆர்த்தி.. இவரது பின்னணி என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
பெற்றோர்: பிரபல டிவி பிரொடியூசர் சுஜாதா மற்றும் தொழிலதிபர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் ஆர்த்தி. சுஜாதா பல டிவி தொடர்களைத் தயாரித்துள்ள நிலையில், சில படங்களையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்த்தி ஸ்காட்லாந்து நாட்டில் வைத்துத் தான் முதல்முறையாக ஜெயம் ரவியை சந்தித்துள்ளார். இருவருக்கும் கொஞ்சக் காலத்திலேயே காதல் மலர்ந்தது. ஜெயம் ரவி தான் இரு வீட்டிலும் பேசி சம்மதிக்க வைத்தாராம். அதைத் தொடர்ந்தே 2009இல் திருமணம் நடந்துள்ளது.
சிறு தொழில் ஒன்றையும் கவனித்து வரும் ஆர்த்தி, சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான பலோயர்கள் உள்ளனர். அவரது பேஷன் ஆடைகளுக்கும் சோஷியல் மீடியாவில் தனி ரசிகர்கள் உள்ளனர்.
கொரோனா சமயத்தில் செய்த செயல்: உலகமே கொரோனாவால் முடங்கிய போது சிறுதொழில்களை நடத்தும் பெண்கள் ஆர்த்திக்கு மெசேஜ் செய்துள்ளனர். கொரோனாவால் தங்கள் தொழில் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டது என்பதை வேதனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விளம்பர தூதர்: அப்போதுதான் ஆர்த்தி தனது சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் சிறு தொழில்கள், குறிப்பாகப் பெண்கள் நடத்தும் சின்ன சின்ன பிஸ்னஸ்களை தனது சோஷியல் மீடியாவில் பிரோமோட் செய்ய முடிவெடுத்துள்ளார். அப்போது முதலே அவர் தொடர்ச்சியாக இதைச் செய்து வருகிறது. அவரது இந்த முயற்சியைப் பலரும் பாராட்டினர். மேலும், Rise4Girl என்ற அமைப்பின் விளம்பர தூதராகவும் ஆர்த்தி உள்ளார். இந்த அமைப்பு ஏழ்மை நிலையில் உள்ள பெண்கள் கல்வி கற்க உதவி வருகிறது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications