வினோதமான பெயரில்.. நாடு முழுக்க 18 விமானங்களில் புக்கான "மர்ம" டிக்கெட்.. கடைசில பார்த்தா.. ட்விஸ்ட்
சென்னை: நாடு முழுக்க கடந்த 2 நாட்களாக பல்வேறு விமானங்களில் வினோதமான டிக்கெட் ஒன்று புக் செய்யப்பட்டு வருகிறது. வினோதமான பெயரில் சரியாக 1 டிக்கெட் மட்டும் புக் செய்யப்பட்டு வருகிறது. அது என்ன டிக்கெட்?
இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

என்ன நடக்கும்?
இந்த நிலையில் தேர்தலுக்காக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் டெல்லி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக வாக்களிக்கும் பெட்டி டெல்லியில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். முன்பெல்லாம் டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலங்களுக்கு காரில் இந்த வாக்கு பெட்டி கொண்டு செல்லப்படும். அதேபோல் உத்தரகாண்ட், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு காரில் இந்த வாக்கு பெட்டி கொண்டு செல்லப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு இந்த வாக்கு பெட்டியை கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகின்றன.

விமான டிக்கெட்
முன்பெல்லாம் வாக்கு பெட்டிகளை விமானத்தில் வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லும் போது அதை செக் இன் லக்கேஜ் என்று மாற்றி, விமானத்தில் ஏற்றி, லக்கேஜ் இருக்கும் பகுதியில் வைப்பார்கள். ஆனால் இந்த முறை தேர்தல் அதிகாரிகள் அதற்கு என்று தனியாக டிக்கெட் புக் செய்கிறார்கள். ஆம் நாடு முழுக்க 18 விமானங்களில் இந்த வாக்கு பெட்டிக்காக டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. முன் வரிசையில், ஜன்னல் சீட்டில் Mr Ballot Box என்ற பெயரில் டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட்
சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கவுகாத்தி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு எடுத்து செல்லப்படும் வாக்கு பெட்டிக்காக டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த சீட்டிலேயே இன்னொரு டிக்கெட் தேர்தல் அதிகாரி ஒருவருக்காக புக் செய்யப்பட்டுள்ளது. Mr Ballot Box டிக்கெட் புக்கிங் தற்போது விமான நிலைய அதிகாரிகள் இடையே மிகப்பெரிய பேச்சாக மாறி உள்ளது. அதிலும் பிஸ்னஸ் கிளாசில் முன் வரிசை என்பது மிகவும் அதிக தொகை கொண்டது ஆகும்.

அதிக தொகை
இருந்தாலும் அந்த வரிசையில் இந்த Mr Ballot Box டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. அதிலும் இது ஒன் வே டிக்கெட் இல்லை. மீண்டும் டெல்லிக்கு திரும்பி வர ரிட்டர்ன் டிக்கெட்டும் புக் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த பேட்டியில், Mr Ballot Box என்று டிக்கெட்டை நாங்கள்தான் புக் செய்து வருகிறோம். இந்தியாவின் மிக உயரிய பதவியை தேர்வு செய்வதற்கான வாக்கு பெட்டி இது.

மரியாதை
அதனால் இதற்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். மிகவும் பாதுகாப்பாக இதை எடுத்து செல்ல வேண்டும். அதனால்தான் இப்படி டிக்கெட் புக் செய்து எடுத்து செல்கிறோம். இதற்காக 1969ல் இருந்தே விமானத்துறையிடம் நாங்கள் சிறப்பு அனுமதி பெற்று இருக்கிறோம். இதனால் ஒரு பெட்டியை நாங்கள் நபர் என்று குறிப்பிட்டு டிக்கெட் புக் செய்ய முடியும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே டிக்கெட் புக் செய்து இருக்கிறோம், என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications