100 பெண்களிடம் அத்துமீறல்.. டைரக்டர் என கூறி சீரழித்தார்.. கணவன் மீது மனைவி போலீசில் பரபரப்பு புகார்
டைரக்டர் என்று சொல்லி, பல பெண்களை சீரழித்த நபர் மீது அவர் மனைவி புகார் தந்துள்ளார்
சென்னை: டைரக்டர் என்று சொல்லிக் கொண்டு, சினிமாவில் சான்ஸ் தருகிறேன் என்றும் சொல்லி, 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்துள்ளதாக நபர் மீது புகார் எழுந்துள்ளது.. இப்படி ஒரு புகாரை தந்தது, சம்பந்தப்பட்டவரின் மனைவியே ஆவார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்தவர் அந்த பெண்.. பெயர் நந்தினி.. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தன்னுடைய கணவர் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்... அந்த புகாரில் உள்ள சுருக்கம் இதுதான்:

இன்ஸ்டாகிராம்
"மோனேஷ் பாபு என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.. கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.. அதற்கு பிறகு நாங்கள் இருவரும் மதுரை திருமங்கலத்தில் தனியாக வசித்து வந்தோம். சிறிது நாட்களிலேயே மோனேஷ் பாபு, என்னிடம் இருந்த 52 சவரன் நகை, பணத்தை பறித்துக் கொண்டு தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்தி வந்தார்.. இதுதொடர்பாக மதுரை திருமங்கலம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தந்தேன். இது தொடர்பாக போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.

சில்மிஷம் - பாலியல் உறவு
மோனேஷ் பாபு குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்குகளை மட்டுமே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்... இதையடுத்து பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில், மதுரை மாவட்ட புறநகர் செயலாளராக இருப்பதாக கூறி, செல்வாக்கை பயன்படுத்தி உடனடியாக வழக்கிலிருந்து மோனேஷ் பாபு வெளியே வந்துவிட்டார்... இந்நிலையில், திரைப்பட இயக்குனர் என கூறி பல பெண்களிடம் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி பாலியல் உறவு கொண்டார்.. அவர் மீது நடவடிக்கை வேண்டும்" என்று மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.

காஸ்டிங் ஏஜென்சி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நந்தினி, "சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பல பெண்களை மோனேஷ் பாபு ஏமாற்றியுள்ளார்... காஸ்டிங் ஏஜென்சி வைத்துள்ளார்.. அதன் மூலம் வேலை வாங்கித் தருவதாக சொல்லி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களையும் ஏமாற்றியிருக்கிறார்.. எங்களுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது... இதுவரை எங்கேயும் என்னை வெளியே அழைத்து சென்றது கிடையாது... ஒருநாள் யதேச்சையாக இவருடைய லேப்டாப் மற்றும் மொபைல் போனை பார்த்தேன்.

ஆபாச வீடியோ
அப்போதுதான், இவருடைய உண்மையான சுயரூபம் தெரிந்தது.. நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பெண்கள் இவரிடம் சிக்கி இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.. அம்மா, அப்பா இல்லாத பெண்களை குறி வைத்து, அவர்களுக்கு வேலைவாங்கித் தருவதாகவும், சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை சொல்லியே, அவர்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.. இதற்கு பிறகு தான் எனக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.. அதனால் மோனேஷ் பாபு கொடூரமாக என்னை தாக்க ஆரம்பித்தார்.. அந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.. ஆனால், இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆதாரம்
என்னை கல்யாணம் செய்து கொண்ட பிறகு, இன்னொரு பெண்ணிடமும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. அந்த ஆடியோ பதிவும் என்னிடம் உள்ளது.. அனால், மோனேஷ் பாபுவை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.. அப்போதுதான், பல பெண்கள் இவர் மீது புகார் கொடுப்பார்கள்.. மேலும் மற்ற பெண்கள் இவரிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள்" என்று கண்ணீர் மல்க கூறினார் நந்தினி.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications