சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மாட்டிக்கிச்சே".. தொக்கா சிக்கிய புள்ளி.. திமுகவுக்கு குஷி போல.. நழுவவிடும் அதிமுக.. சக்சஸ் சசிகலா?

வைத்திலிங்கம் விரைவில் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் ஒரு முக்கியமான விஷயம் புகைந்து கொண்டிருக்கிறது.. ஏற்கனவே அதிமுகவில் உட்கட்சி விவகாரம் தலைதூக்கி வரும் நிலையில், இன்னொரு சம்பவம் நடந்து, மேலும் புகைச்சலை கிளப்பி விட்டு வருகிறது.

ஆர். வைத்திலிங்கம்... முன்னாள் வீட்டுவசதித்துறை அமைச்சர்.. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்.. ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்..

ஆரம்ப காலத்தில் இருந்து, சசிகலாவால் அரசியலில் வளர்க்கப்பட்டவர்... சசிகலா சமூகத்தை சேர்ந்தவர்.. டெல்டாவை சேர்ந்தவர்.. சிறைக்குச் செல்லும் வரை, அவரின் குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர்..

அவர் கையெழுத்து இல்லையே.. அப்போ அந்த பிரச்சனை தானா? எடப்பாடி ஓகே சொல்லல.. ஓபிஎஸ் தனியா - அதிமுக பரபர அவர் கையெழுத்து இல்லையே.. அப்போ அந்த பிரச்சனை தானா? எடப்பாடி ஓகே சொல்லல.. ஓபிஎஸ் தனியா - அதிமுக பரபர

 டாப் 5 தலைவர்கள்

டாப் 5 தலைவர்கள்

ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவில் முக்கி தளபதியாக திகழ்ந்தவர்.. அதிமுகவின் 7 மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர்.. அதாவது ஜெ. அமைச்சரவையில் அன்றைய டாப் 5 முக்கிய தலைவர்களில் 3வது இடத்தில் இருந்தவர் வைத்திலிங்கம்.. எடப்பாடி பழனிசாமியே, இவருக்கு அடுத்த இடத்தில்தான் இருந்தார்.. ஆனால், 2016 தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வி அடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.

டெல்டா

டெல்டா

ஜெயலலிதா மறைவு, சசிகலா ஜெயில், ஓபிஎஸ் இரட்டை தலைமை விவகாரம் என அதிமுக பரபரத்தபோது, வைத்திலிங்கம் நிலைமை என்னாக போகிறதோ என்று டெல்டா அதிமுக கவலைப்பட்டது.. ஆனாலும், ஓபிஎஸ் இவரை கைவிடவில்லை.. கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்து, டெல்டா அதிமுகவை நிமிர வைத்தார்.. அதேபோல, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எப்படியும் எம்பி பதவி கிடைக்கும் என்று கனவு கண்டார்.. ஆனால், ஓபிஎஸ் மகனுக்கு அந்த வாய்ப்பு சென்றுவிடவும் அப்செட் ஆகிவிட்டார்..

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

அதுமட்டுமல்லாமல், தென்மண்டங்களைவிட, கொங்கு மண்டலத்தையே எடப்பாடி அரசு தூக்கி வளர்த்ததும், வைத்திலிங்கத்தின் அதிருப்திக்கு இன்னொரு காரணமானது. எனவே, வைத்திலிங்கம் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்று கிசுகிசுக்கப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊழல் புகார் ஒன்று இவர் மீது வெடித்தது.. தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கட்டிட அனுமதி வழங்குவதற்காக ரூ. 27.9 கோடி லஞ்சம் பெற்றதாக ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் இந்த ஊழல் குற்றச்சாட்டை அம்பலப்படுத்தி இருந்தது.

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இதற்கு வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்திருந்தார் என்றாலும், அந்த வழக்கை அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. மற்றொரு பக்கம், எந்தவித அறிகுறியுமின்றி, வைத்திலிங்கம் மீது திடீரென புகார் எழுவதற்கு என்ன காரணம்? சந்தேகம் சொந்த கட்சிக்குள்ளேயே வலுத்தது... இதற்கு பின்னணியில், கொங்குவில் உள்ள சில அதிமுக தலைகளே இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது..

 கடுப்பில் சீனியர்

கடுப்பில் சீனியர்

காரணம், சமீபத்தில் தஞ்சை மண்டலத்தில் உட்கட்சி தேர்தலில் வைத்திலிங்கம் அபார வெற்றி பெற்றிருந்ததால், கொங்குவிலும் வைத்திலிங்கம் ஆதிக்கம் செலுத்த முற்பட்டது, கொங்குவில் உள்ள மாஜிக்கு கடுப்பை தந்துவிட்டதால்தான், எக்காரணம் கொண்டும் வைத்திலிங்கம் என்ட்ரி தந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி சிக்க வைத்திருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இப்போது இன்னொரு விஷயம் அதிமுக கூடாரத்துக்குள் வெடித்து வருகிறது..

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

சமீபத்தில், ஒரத்தநாடு பகுதியில், வைத்திலிங்கம் தலைமையில் ஒரு திருமணம் நடக்க இருந்ததாக தெரிகிறது.. ஆனால், வைத்திலிங்கமோ, ஓபிஎஸ்ஸை அழைத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்க சொன்னாராம்.. அதன்படியே அந்த திருமணமும் ஓபிஎஸ் தலைமையில்தான் நடந்துள்ளது.. ஏற்கனவே சசிகலா ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டு வரும் நிலையில், எந்நேரத்திலும் இவர் சசிகலா பக்கம் தாவிவிடக்கூடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தன் ஆதரவை ஓபிஎஸ்-க்கு அளித்துள்ளார்.. அத்துடன், எடப்பாடி மீதான தன்னுடைய அதிருப்தியையும் இதன்மூலம் மீண்டும் நிரூபித்துள்ளதாகவே தெரிகிறது.

 விக்கெட் விழுமா?

விக்கெட் விழுமா?

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு தென்மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்று வெளிப்படையாக கருத்துச் சொன்னவர் வைத்திலிங்கம்... சிவி சண்முகம் உள்ளிட்ட எடப்பாடி தரப்பின் ஏகோபித்த எதிர்ப்பை வைத்திலிங்கம் சம்பாதிக்க இதுவும் ஒரு காரணமாக இருந்த பட்சத்தில், இப்போது இந்த விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.. எனினும் இவரை எடப்பாடி தரப்பு சமாதானம் செய்து ஏற்று கொள்ளுமா? அல்லது சசிகலா பக்கம் தாவி செல்ல கைநழுவி விட்டுவிடுமா என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

English summary
Who is that former minister and will ex admk minister vaithilingam join with sasikala வைத்திலிங்கம் விரைவில் சசிகலா பக்கம் தாவக்கூடும் என்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X