திடீரென முடிவை சொன்ன சண்முக சுந்தரம்.. மாற்றாக ஸ்டாலின் இறக்க போகும் "பி.எஸ் ராமன்".. யார் இவர்?
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மிகவும் இக்கட்டான நேரத்தில் ராஜினாமா செய்துள்ளார். ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவரின் ராஜினாமா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவரின் பதவிக்கு வரப்போகும் வழக்கறிஞர் யார் என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகி உள்ளன.
ஆளும் திமுக அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து சிறைக்கு செல்ல தொடங்கி உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கிறார். அதேபோல் அமைச்சர் பொன்முடிக்கு தற்போது 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது.

இது போக அமைச்சர் ஏ வ வேலு, தங்கம் தென்னரசு என்று பல அமைச்சர்களுக்கு எதிராக முக்கிய வழக்குகள் இருக்கின்றன.
சொத்து குவிப்பு குற்றவாளி: சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
வழக்கு பின்னணி; இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவர் மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் தண்டனை விவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தீர்ப்பு என்ன: அப்போது பொன்முடி தரப்பில் ஆஜராக இருந்த மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, இருவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருவரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். மருத்துவ அறிக்கை ஆய்வு செய்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்தடுத்த வழக்குகள்: சூமோட்டோ வழக்குகள் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. தினசரி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, அமைச்சர் பதவியிழந்த பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குகள் பிப்ரவரி மாதம் முழுக்க நடத்தப்பட உள்ளது. இதைதான் ஸ்டாலின் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜினாமா: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் மிகவும் இக்கட்டான நேரத்தில் ராஜினாமா செய்துள்ளார். பொதுவாக அரசு வழக்கறிஞர்தான் இதில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக ஆஜராக வேண்டும். இந்த நிலையில் தற்போது சண்முக சுந்தரம் ராஜினாமா செய்துள்ளார்.
அவருக்கு பதிலாக பி எஸ் ராமன் என்ற மூத்த வழக்கறிஞர் அந்த பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. மூத்த வழக்கறிஞரான இவர் பல வழக்குகளில் ஆஜரான அனுபவம் கொண்டவர். சண்முக சுந்தரம் தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் மூத்த வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் ஆவார். இவர் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் திமுக அரசியல்வாதியுமான வி.பி.ராமனின் இளைய மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர் பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகர் மோகன் வி. ராம் ஆவார்.
ராமன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்து, செப்டம்பர் 2004 இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 11 ஜூன் 2006 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்குப் பதிலாக ராமன் கூடுதல் அட்வகேட்-ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 29 ஜூலை 2009 அன்று தமிழ்நாடு வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ராஜினாமா செய்தபோது ராமன் அட்வகேட் ஜெனரலாக அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆனார்
அதன்பின் தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக பதவி ஏற்க உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications