"ஐயோ காப்பாத்துங்க".. இரவெல்லாம் கூச்சல்.. நடுங்கிய மலையடிவாரம்.. ஆசிரமத்தில் எட்டிபார்த்தால்.. ஷாக்
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தின் ஓனர் ஜூபின் பாபு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன
சென்னை: விழுப்புரம் அன்பு ஆசிரமத்தில், 16 பேர் கதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், மாயமானவர்களை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.. இதனிடையே, அன்பு ஆசிரம ஓனர் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் குண்டலபுலியூரில் இயங்கி வந்தது அன்பு ஜோதி ஆசிரமம்.. இங்கு ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் , மனநலம் குன்றியோர் என 150க்கும் மேற்பட்டோர் இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சங்கிலியால் கட்டப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

மிஸ்ஸிங்
ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து, ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜுபின், ஆசிரமம் மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உள்பட 144 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தினை முடிசீல் வைக்கவும் மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டிருக்கிறார்.-. இந்த சூழ்நிலையில்தான், ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 16 பேரை காணவில்லை என்று தகவல் பரவியதுடன், உடல் உறுப்புகளை திருடுவதற்காக அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்ற அச்சமும் எழுந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.

அட்டுக்கல்
இப்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, பெங்களூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்? இங்கேயே 2 இடங்களில் ஆசிரமம் நடத்தி வரும்போது, பெங்களூருக்கு ஏன் ஆதரவற்றவர்களை அனுப்ப என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. கோயம்புத்துார், கோட்டக்குப்பம் உட்பட 3 இடங்களில் ஆசிரமம் நடத்தி வந்துள்ளார் ஜுபின்.. கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியன்று, குண்டலப்புலியூர் ஆசிரமத்தை தொடங்கி இருக்கிறார்.. பெரிய அளவு படிக்காதவர்..

பண்ணை வீடு
கேரளாவின் ஆழக்கூடா கிராமத்தை சேர்ந்த இவர் அங்கேயே தன்னுடைய ஆரம்ப காலங்களில் ஆசிரமத்தை தொடங்கி இருக்கிறார்.. ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிப் பிடித்து அழைத்து வந்து, வைத்து பராமரித்துள்ளார்.. அதற்கு பிறகுதான் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை பலர் அழைத்து வந்து இங்கே சேர்க்க துவங்கினாராம்.. இப்படி சேர்த்துவிடும் புரோக்கர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் தந்துவந்துள்ளார்..

உறுப்புகள்
பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தை இவரது நண்பர் ஒருவர் பொறுப்பில் விட்டுள்ளாராம்.. அந்த ஆசிரமத்துக்குதான் விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து பலரை அனுப்பி வைத்ததற்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.. அந்த பெங்களூர் ஆசிரமத்தில் 15 பேரை காணோம் என்கிறார்கள்.. இவர்களை உடல் உறுப்புகளுக்காக கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.. இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், இந்த ஜூன் ஏற்கனவே ஒருமுறை கைதானவராம்.. கடந்த வருடம்தான் கைதாகி உள்ளார்..

கூச்சல் அழுகை
கோவைமாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது அட்டுக்கல்.. இங்குள்ள மலையடிவாரத்தில் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் ஜூலை 22ம் தேதி, சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து, வாகனங்களில் கொண்டு வந்து இங்கு தங்க வைத்துள்ளனர்.. மறுநாளே அதாவது 23ம் தேதி இரவு முழுதும் அந்த ஆசிரமத்தில் கூச்சல் கேட்டுள்ளது.. காப்பகத்தில் இருந்து "காப்பற்றுங்க, காப்பாற்றுங்க" என்று இரவு முழுவதும் கூச்சல் மற்றும் அழுகை சத்தம் இரவெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்ததாக அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்கள் மூலம் தகவல் பரவியிருக்கிறது.. மறுநாளே, சமூகஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் என மொத்த பேரும் திரண்டுள்ளனர்..
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications