எடப்பாடி VS ஓபிஎஸ்.. டர்னிங் பாயிண்டாக அமையப்போகும் முடிவு.. “அப்பவே கடுமையாக விமர்சித்தாரே.. இனி?”
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனு அளித்துள்ள நிலையில், வேறு அமர்வுக்கு மாற்றப்படுமா அல்லது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே மீண்டும் விசாரிப்பாரா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது, வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த விசாரணையின்போதே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கடுமையாகச் சாடி கருத்து தெரிவித்திருந்தார் கிருஷ்ணன் ராமசாமி. எனவே, நீதிபதி மாற்றம் இந்த வழக்கில் முக்கியமான திருப்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உச்சநீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்திருப்பதால் அதனை மீற முடியாது, சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் பதிலடி
இதனையடுத்து ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பொதுக்குழுவே செல்லாது என்றும், தன்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி அறிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டில்
இதையடுத்து, அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால், பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார் ஓபிஎஸ்.

உச்ச நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர். மேலும், ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் தவறாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்.

நீதிபதியை மாற்ற கோரிக்கை
இந்நிலையில் இந்த வழக்குகளை நாளை முதல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க உள்ளார். இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு, தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கக் கூடாது என்றும் வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துகள்
மேலும் அந்த மனுவில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கனவே பிறப்பித்து உத்தரவில், கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாகவும், மனுதாரர் நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கிறார் என்றும் வழக்கிற்கு சம்மந்தமில்லாத கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஓபிஎஸ் தரப்பும் முறையீடு
இந்த விவகாரம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி முறையீடு செய்தார். அதனை கேட்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, வழக்கை ஒரு நீதிபதியிடம் இருந்து மற்றொரு நீதிபதிக்கு மாற்றுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இருவரின் கடிதங்களையும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் ஆலோசித்து, அவரது கருத்தையும் அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல்
ஒருவேளை, சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதியை மாற்றவில்லை என்றால், அதுவே ஓ.பி.எஸ் தரப்புக்கு பெரிய பின்னடைவாக இருக்கக்கூடும். ஏனெனில், கடந்த முறை விசாரணை நடைபெற்றபோதே, மனுதாரர் தரப்பை கடுமையாகச் சாடிக் கருத்து தெரிவித்திருந்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி. மீண்டும் அவரே விசாரிக்கும் பட்சத்தில், அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நீதிமன்றத்தை வைத்து சாதிக்க முயற்சி
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர்கள், உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் நடந்து, உறுப்பினர்களை நம்பிக்கை பெறுவதை விடுத்து, மாற்றி மாற்றி நீதிமன்றத்தை நாடுகிறார், நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி. இதன் காரணமாகவே, நீதிபதி மாற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.

திருப்பம் ஏற்படுமா?
அதே நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் ஓபிஎஸ் தரப்பு முன்வைக்கும் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்றும் மிகப்பெரிய கேள்வி உள்ளது. இந்த வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டால், அது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்றும் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன. எப்படியாகினும், நாளை நடைபெறும் விசாரணையின் போக்கே இவற்றைத் தீர்மானிக்கும். பார்க்கலாம்..!
-
ரொம்ப ஓவரா போறீங்கடா.. எடப்பாடி பழனிசாமிக்கு உம்மா கொடுத்த அதிமுக வேட்பாளர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன












Click it and Unblock the Notifications