சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்க போட்டியிடுங்க.. டெல்லி போட்ட உத்தரவு.. யோசித்த அண்ணாமலை! அப்படியா? இவர் என்ன இப்படி சொல்லுறாரே

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணாமலையை போட்டியிடும்படி பாஜக டெல்லி தலைமை வலியுறுத்தியதாகவும், அண்ணாமலை இதற்கு யோசித்ததாகவும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட உள்ளார். எதிர் தரப்பில் பாஜக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலையே, ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் பவர் + பண பலம் இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால், வலிமையான கட்சிதான் களமிறங்க வேண்டும். எங்கள் கூட்டணியில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான்.

நாங்கள் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்போம் என்பதை விரைவில் அறிவிப்போம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதில் முடிவு எடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவின் நிலைப்பாடு குழப்பமாக இருக்கும் நிலையில் இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

வேட்பாளர் யார்? முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்றும் ஆலோசனை.. உள்ளே நுழைந்த ஈரோடு புள்ளிகள்! வேட்பாளர் யார்? முக்கிய நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் இன்றும் ஆலோசனை.. உள்ளே நுழைந்த ஈரோடு புள்ளிகள்!

பேட்டி

பேட்டி

அவர் தனது பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக தலைமை பிரச்னையை தீர்த்து வைக்காது. அதிமுகவில் தற்போது டிடிவி தினகரன் இல்லை. மற்ற மூன்று பேர்தான் அதிமுக தலைமைக்கு போட்டியிடுகிறார்கள். இதில் சசிகலாவிற்கு சுத்தமாக ஆதரவு இல்லை. அவருக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. அதனால் ஓபிஎஸ் - எடப்பாடி இடையில்தான் மோதல் ஏற்பட்டு உள்ளது. ஓபிஎஸ் - எடப்பாடியில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதுதான் கவனம் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் இரட்டை இலை முடங்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. பி பார்மில் இரண்டு பேருமே கையெழுத்து போட வேண்டும்.

வேட்புமனு

வேட்புமனு

வேட்புமனு தாக்கலுக்கு முன் அரசியல் மாற்றங்கள் நடக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வர வேண்டும். நிறைய மாற்றங்கள் நடக்க வேண்டும். ஏதாவது பெரிதாக நடந்தால் மட்டுமே வேறுபாடு இருக்கும். மற்றபடி இப்போதைக்கு நேரம் இல்லை. இரண்டு தரப்பும் கண்டிப்பாக மோதும். அதனால் இந்த தேர்தலில் இரட்டை இலை முடங்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. வேறு வழி இருப்பதாக இப்போதைக்கு சொல்ல முடியாது. ஒருவேளை சின்னம் முடங்கினால் எடப்பாடி - ஓபிஎஸ் தனி சின்னத்தில் மோதுவார்கள். ஆனால் அந்த போட்டி கட்சியில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்காது. ஏனென்றால் இதை ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஓபிஎஸ் பெரிசா, எடப்பாடி பெருசா என்று நிரூபிக்க முடியாது. பாஜக இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு தருகிறது என்று பார்க்க வேண்டும். அண்ணாமலை இங்கே போட்டியிட விரும்பவில்லை. அதுதான் தெளிவாக இருக்கிறது. இதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த தேர்தல் மூலம் பாஜகவின் வீக்னஸ் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அண்ணாமலை பதவி ஏற்ற போது என்ன சொன்னார்.. அடுத்த தேர்தலில் 2024, 2026ல் எல்லாம் மோதல் திமுக vs பாஜக என்று ஆகிவிடும் என்று கூறினார். அதை இப்போது நிரூபித்து இருக்க வேண்டும் அல்லவா?

வெற்றி தோல்வி

வெற்றி தோல்வி

வெற்றி தோல்வியை விடுங்கள். தேர்தலில் மோதுவது தானே சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு அண்ணாமலை தேர்தலில் பின்வாங்க தொடங்கி உள்ளார். மேற்கு மண்டலத்தில் பாஜகவிற்கு ஆதரவு இருப்பதாக கருதப்படுகிறது. அண்ணாமலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர். இயற்கையே ஒரு சாதகமான சூழ்நிலையை அண்ணாமலைக்கு கொடுத்துள்ளது. ஆனால் அண்ணாமலை ஏன் போட்டியிடவில்லை. அண்ணாமலை இப்போது டெல்லிக்கு சென்று இருக்கிறார் என்று எனக்கு ஒரு தகவல் வந்தது. எனக்கு கிடைத்த தகவல்படி.. பாஜக டெல்லி தலைமை.. மாநில தலைமை அண்ணாமலையை போட்டியிட வலியுறுத்தி வருகிறதாம்.

மாநில தலைமை

மாநில தலைமை

ஆனால் மாநில தலைமை தேர்தலில் போட்டியிட அஞ்சுவதாக என்னுடைய சோர்ஸில் இருந்து தகவல்கள் வந்தன. இடைத்தேர்தலில் பைட் செய்ய வேண்டும். ஈரோட்டில் பாஜகவிற்கு ஆதரவான சூழ்நிலை இருப்பதாக சொல்கிறார்கள். உண்மையான அரசியல் தலைவர்கள் இடைத்தேர்தலை ஒரு சோதனையாக கருதுவார்கள். தங்களின் அரசியலை சரி செய்ய வாய்ப்பாக கருதுவார்கள். ஆனால் அண்ணாமலை தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட அஞ்சுவது ஏன்? தோல்வி அடைகிறோமோ, ஜெயிக்கிறோமோ முக்கியம் இல்லை. அவர் போராடினாரா இல்லையா என்பதுதான் முக்கியம்.

அண்ணாமலை

அண்ணாமலை

2 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் கூட நான் போட்டியிட்டேன் என்று சொல்ல முடியும். கொஞ்சம் கூடுதல் வாக்குகள் எடுத்தால் அதை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கேட்கவும் முடியும். அண்ணாமலையின் இந்த முடிவிற்கு காரணம் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும். அதன்படி பாஜக வெளியே பேசும் அளவிற்கு அவர்களுக்கு வளர்ச்சி இல்லை. அண்ணாமலை கொஞ்ச நஞ்ச பேச்சு பேசவில்லை. இதுவரை பாஜக தலைவர்கள் பேசாத பேச்சை அவர் பேசினார். அவ்வளவு பேச்சு பேசினார். அதை செயலில் காட்ட வேண்டிய நேரம் வரும் போது அவர் ஏன் விலகி ஓடி வருகிறார். இப்போது அவர்தான் அவரின் பலவீனத்தை வெளிக்காட்டுகிறார். அப்போ எல்லா இடைத்தேர்தலில் இப்படித்தான் செய்வீர்களா? உங்களுக்கு வளர்ச்சி ஏற்படவில்லை என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்து உள்ளார்.

English summary
Why Annamalai does not want to contest in Erode East by-poll and does Delhi push him to do?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X