சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆடியோ, வீடியோவை வெளியிட அண்ணாமலை ஏன் ஓகே சொன்னார்? பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் - காயத்ரி ரகுராம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் ஒப்புக் கொண்டார் என பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக நிர்வாகி டெய்சி சரண், முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே வெளியான செல்போன் உரையாடல் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அதில் டெய்சியை சூர்யா சிவா அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி கொலை மிரட்டலையும் விடுத்தார்.

அப்போ 5000 கேட்டீங்களே.. இப்போ 1000 தானா? திமுக அரசின் பொங்கல் ’பொய்’ தொகுப்பு! அண்ணாமலை காட்டம்! அப்போ 5000 கேட்டீங்களே.. இப்போ 1000 தானா? திமுக அரசின் பொங்கல் ’பொய்’ தொகுப்பு! அண்ணாமலை காட்டம்!

பாஜக நிர்வாகி

பாஜக நிர்வாகி

மேலும் தமிழக பாஜக சிறுபான்மையின மாநில தலைவராக டெய்சிக்கு பொறுப்பு கிடைத்தது எப்படி என்பதை மிகவும் கொச்சையான வார்த்தைகளை கொண்டு தெரிவித்துள்ளார். இதில் டெய்சியும் பதிலும் சூர்யா சிவாவின் வீட்டுப் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

சில நிமிடங்கள்

சில நிமிடங்கள்

சுமார் சில நிமிடங்கள் மட்டுமே வெளியான இந்த ஆடியோ உரையாடல் முழுவதையும் கேட்டால் அதில் டெய்சியும் சூர்யா சிவா குறித்து மிகவும் மோசமான கருத்துகளை பேசியுள்ளதாக சூர்யா பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யா பாஜகவிலிருந்து விலகிய நிலையில் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு அவர் பேட்டி அளித்து வருகிறார்.

ஆடியோ விவகாரம்

ஆடியோ விவகாரம்

இந்த ஆடியோ விவகாரத்தில் காயத்ரி ரகுராம் சூர்யாவை கடுமையாக விமர்சித்து அவரை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் காயத்ரி ரகுராம் இன்றைய தினம் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் மதன் மீது ஏன் புகார் இல்லை? ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட அண்ணாமலை ஜி ஏன் ஒப்புக்கொண்டார்? இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்னும் வீடியோக்கள் ஆடியோவை அப்படியே வைத்திருக்க வேண்டும், ஏன் அழிக்கக்கூடாது?

ஆடியோ வெளியிடுவது வேலையா

ஆடியோ வெளியிடுவது வேலையா

ஆடியோ வீடியோ வெளியிடுவது வேலையா? புகார் செய்தாலும், அத்தகைய விசாரணை இல்லை. நாங்கள் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறோம். இது நீடித்தால் பாஜக பெயரை கெடுக்கும். பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தேசிய பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவரே பலரின் முன்னிலையில் ஒரு பெண்ணை மரியாதை இல்லாமல் குற்றம் சாட்டி, மோசமாகப் பேசுகிறார் (துபாய் குற்றச்சாட்டுகள்). அழகு இதுவா?

பொறுமைக்கும் எல்லை உண்டு

பொறுமைக்கும் எல்லை உண்டு

பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன். இப்போது எங்கள் பாஜக கட்சிக்கு களங்கம் கொண்டு வருவது யார்? உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும். ஆனால் ஏன் எங்களை தரம் தாழ்ந்து அடிக்க வேண்டும் மற்றும் எங்களை பற்றி பேச வேண்டும்?

திமுக ஸ்லீப்பர் செல்

திமுக ஸ்லீப்பர் செல்

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களை திமுக ஸ்லீப்பர்செல் என்று அழைப்பது ஒரு உத்தி. மீண்டும், கட்சியில் பெண்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கிறேன். பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். போலீஸ் அதிகாரியாக இருப்பதால் அவருக்கு மற்ற கட்சி உறுப்பினர்களை அணுக முடியாது என்பது பொய். அண்ணாமலை ஜி உட்பட அனைவருக்கும் திமுக மற்றும் காங்கிரஸை அணுகலாம் மேலும் அவர்கள் அவர்களை தொடர்பு கொள்கிறார்கள். இந்த பழி விளையாட்டு தேவையில்லை. இவ்வாறு பல விஷயங்களை தனது தொடர் ட்வீட்டுகள் மூலம் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த நிர்வாகியாக இருந்த கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ பதிவை யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தவர் மதன் ரவிச்சந்திரன். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து மதன் ரவிச்சந்திரன் கடந்த ஆண்டு பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP Gayathri Raghuram asks Why Annamalai give consent to release the audio and video?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X