Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் ஸ்டேசனுக்குள் நுழைய மக்கள் பயப்படுவது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிமன்றங்கள் அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்வதில் தயக்கம் காட்டாத மக்கள் காவல் நிலையங்களுக்குள் செல்ல ஏன் பயப்படுகிறார்கள் என்று மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இன்று கேள்வி எழுப்பினார். காவல் துறையினர் முறையாக நடந்து கொள்ளவும், புகார் கொடுப்பவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டும் என்றார்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் உத்தரவுகளை ரத்து செய்யக்கோரும் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கலாமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா பதிலளிக்குமாறு அறிவுறித்தியிருந்தனர்.

high court police

இதனையடுத்து, ஆஜராகி பதிலளித்த அசன் முகமது ஜின்னா, இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும் ஆனால் ஒவ்வொரு வழக்கக்கும் இது மாறுபடும் எனவும் கூறினார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், தேவையில்லாமல் குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடலாமா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அசன் முகமது ஜின்னா, அவ்வாறு எதுவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டமென கோரிக்கை விடுத்தார். மேலும், தேவையில்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதாகவும் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறினார்.

இதனையடுத்து, குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டுமென தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறுவுறுத்தினர். மேலும், பொது மக்கள் அச்சமின்றி காவல் நிலையத்தை அணுகும் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், நீதிமன்றங்கள் அல்லது மருத்துவமனைகளுக்குச் செல்வதில் தயக்கம் காட்டாத மக்கள் காவல் நிலையங்களுக்குள் செல்ல ஏன் பயப்படுகிறார்கள். காவல் துறைக்கு தன்னை மக்களின் நண்பன் என்று அழைப்பதை காட்டிலும் அங்கு மிகப் பெரிய சீர்திருத்தங்கள் தேவையாகும். காவல் துறையினர் முறையாக நடந்து கொள்ள வேண்டும், புகார் கொடுப்பவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டும் என்றார்.

பொதுமக்கள் போலீஸ் ஸ்டேசனுக்குள் செல்ல எந்தத் தயக்கமும் இல்லாத நாளில்தான் காவல் துறையில் உண்மையான சீர்திருத்தங்கள் ஏற்படும். மூத்த காவல்துறை அதிகாரிகள் கூட தங்கள் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு சன்கிளாஸ் ஸ்கீரின்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு இதுநாள் வரை கீழ்ப்படியவில்லை.

எந்தவொரு விசாரணையும் அல்லது தண்டனையும் இல்லாமல் தனிநபர்களை ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை சிறையில் வைத்திருக்க எளிதான வழியாக தடுப்புக் காவல் சட்டங்கள் பல வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபர் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டால், பொது ஒழுங்கை மீறும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பக்கூடிய சந்தர்ப்பங்களில் மட்டுமே தடுப்புக்காவல் சட்டத்தை மிக குறைவாகவே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் மாறாக, காவல்துறை எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துகிறது.

கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு நபர் மற்றொரு நபரை கொலை செய்த வழக்கை சில மணி நேரங்களுக்கு முன்பு எங்கள் பெஞ்ச் விசாரித்தது. அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. எனினும் போலீசார் அவரை 'குண்டர்' என்று முத்திரை குத்தி தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளார். அத இது ஒரு நொடியில் நடந்த குற்றம். அவர் கில் ஜாமீன் பெற்றாலும், குண்டர் சட்டத்தைப் பிரயோகித்து, அந்த நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தைக் கெடுப்பது எவ்வளவு நியாயம். தடுப்புக் காவலில் வைப்பது மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கினாலும் குண்டர் என்று முத்திரை குத்துவது களங்கத்தை ஏற்படுத்தும். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபர்,தனது வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை இழக்கிறார். அதன் விளைவாக, அவரது வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பமும் நலிவடைந்துள்ளது.

ஒரு தனிநபரின் தனிப்பட்ட சுதந்திரத்தை முரட்டுத்தனமான முறையில் குறைக்க முடியாது . அதற்கு பதிலாக, காவல் துறை அதன் கண்காணிப்பு அமைப்பை பலப்படுத்தலாம் . அதேபோல் பிரச்சனை செய்வார்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்காணிக்கலாம்" என்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கருத்து தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+