பழசை மறக்காதீங்க! முக்கிய பைல்களோடு.. டெல்லிக்கு விரைந்த நம்பிக்கையான "டீம்"! ஓபிஎஸ் திட்டம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் அவருக்கு நம்பகமான அணி ஒன்றும் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளது. இந்த அணி டெல்லி சென்றதற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று நடந்த பொதுக்குழுவில் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டார். ஓபிஎஸ் மேடை மீது ஏறிய போதே.. அவரை கீழே இறங்குயா என்று கூறி கடுமையான வசை வார்த்தைகள் மூலம் எடப்பாடி ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்தனர்.

அதோடு அவரின் வண்டியை பஞ்சர் செய்து.. அவர் வெளியே செல்லும் போது அவரின் மீது வாட்டர் பாட்டில்களையும் வீசி அவமதிப்பு செய்துள்ளனர்.

சோகம்

சோகம்

இதையடுத்து சோகமான முகத்துடன் ஓபிஎஸ் நேற்று வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் சில நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுத்தவர் பின்னர் டெல்லிக்கு விமானம் ஏறினார். பிரதமர் மோடியை சந்திக்கும் விதமாக ஓபிஎஸ் டெல்லி சென்றதாக கூறப்பட்டது. அதிமுகவில் உள்ள பிளவை சரி செய்யும் வகையிலும், ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்காத வகையிலும் சில முக்கியமான மூவ்களை ஓ பன்னீர்செல்வம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இது தொடர்பாக பல கூட்டங்களை அவர் நடத்த இருக்கிறார்.

 மோடி

மோடி

அதோடு பிரதமர் மோடியையும் அவர் சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க அவர் நேரம் கேட்டு இருக்கிறார் என்கிறார்கள். இன்று மாலைக்குள் எப்படியாவது பிரதமர் மோடியை சந்தித்து, அதிமுக விவகாரங்கள் பற்றி பேச அவர் திட்டமிட்டு இருக்கிறாராம். அதேபோல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பது தொடர்பாகவும் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் பேசுவார் என்று கூறப்படுகிறது.

டெல்லி

டெல்லி

இந்த நிலையில்தான் ஓபிஎஸ்ஸுக்கு நம்பகமான டீம் ஒன்றும் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளது. மனோஜ் பாண்டியன், பிரபாகர் உள்ளிட்டோர் அடங்கிய டீம் ஒன்று இன்று டெல்லிக்கு செல்கிறது. இதற்கு பின் முக்கியமான காரணங்கள் இருக்கிறதாம். ஓபிஎஸ் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மேடையில் ஓ பன்னீர்செல்வத்தை வைத்துக்கொண்டே தமிழ் மகன் உசேன் பொதுக்குழு கூடும் என்று அறிவித்தார். அதாவது ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து இல்லாமலே பொதுக்குழு கூடுவதாக தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் சார்பாக அதிமுக பொதுக்குழு கூட்ட அறிவிப்பிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

 மனு

மனு

ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இன்றி பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது. இது அதிமுக கட்சி விதிகளுக்கு எதிரானது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திலேயே முறையிட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளாராம். இதற்காக ஓபிஎஸ் தரப்பில் முக்கியமான சில ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதற்காகவே ஓபிஎஸ் டீம் முக்கியமான ஆவணங்களோடு டெல்லிக்கு விரைந்து இருக்கிறதாம்.

 பழசை மறக்காதீங்க

பழசை மறக்காதீங்க

இது தொடர்பாக ஓபிஎஸ் நிர்வாகிகள் பேசுகையில்.. ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே இரட்டை இலையை அதிமுக மீட்க முக்கிய காரணமாக இருந்தார். சட்ட ரீதியாக அவர் பல ஆலோசனைகளை பெற்று, காய்களை நகர்த்தினார். பழசை எல்லாம் மறக்க வேண்டாம். அதேபோல் இந்த பொதுக்குழு விவகாரத்திலும் ஓபிஎஸ் வெல்வார். அதற்காகத்தான் இப்போது ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+