Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித் ஷா கிட்ட அப்படியென்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்? தமிழிசையிடம் ஓடோடிய அண்ணாமலை.. இதுவா காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தராஜனை, மாநில தலைவர் அண்ணாமலை ஏன் திடீரென ஓடோடி சென்று சந்தித்தார் தெரியுமா? இதை பற்றின பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில், தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, அமித்ஷா கடிந்து கொண்ட எச்சரிக்கை சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Annamalai Amit shah Nirmala Sitharaman Tamil Nadu BJP Annamalai TN BJP Leader

கண்டிப்பு: பொது மேடையில் அமித்ஷாவின் அந்த கண்டிப்பு வெவ்வேறு கோணங்களில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. எதற்காக தமிழிசையை அவர் கண்டித்தார் என்பதற்கு நிறைய சம்பவங்களை மீடியாக்கள் சுட்டிக்காட்டியிருந்தன. அமித்ஷாவுக்கு எதிராக நாடார் அமைப்புகள் கொந்தளிக்கும் அளவுக்கு அந்த சம்பவம் மேலும் சீரியஸாகிவிட்டது.

இப்படிப்பட்ட சூழலில், உண்மையான காரணம் குறித்த முக்கியத் தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.. "தென்சென்னையில் போட்டியிட விரும்பினாராம் தமிழக பாஜக மாநில செயலாளர்களில் ஒருவர். ஆனால், வாய்ப்பை தமிழிசை தட்டிக்கொண்டுப் போய்விட்டதால் விரக்தியாகிவிட்டாராம் அந்த மாநில செயலாளர். அவருக்கும் தமிழிசைக்கும் ஏற்கனவே ஆகாது.

ரகசியம்: இந்நிலையில், அமைச்சரவையில் தமிழிசையை சேர்க்கப்படுவதாகவும், அதற்கான முயற்சியில் தமிழிசை ரகசியமாக இறங்கியிருப்பதாகவும் ஒரு தகவல் தமிழக பாஜகவில் பரவியது.

இதையறிந்த அந்த மாநில செயலாளர், நிர்மலா சீதாராமனை தொடர்புகொண்டு, "உங்களை மோசமாக விமர்சிக்கிறார் தமிழிசை. உழைக்காமல் நிர்மலா சீதாராமன் அமைச்சராகிவிட்டார், உழைத்தாலும், பிற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் தமிழிசை கவர்னர் பதவியையும் இழந்து, எம்.பி.யும் ஆக முடியாமல் தவிக்கிறார் என்ற பாணியில் உலவும் மீம்கள் பின்னணியில் தமிழிசைதான் உள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிருந்ததாகவும் அதனை நீங்கள் தான் தடுக்கிறீர்கள் என்றும் எல்லோரிடமும் தமிழிசை சொல்லி வருகிறார். உங்களை கொச்சையாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருகிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.

அமித்ஷா: இதைக்கேட்டு டென்ஷன் ஆகிவிட்ட நிர்மலா சீதாராமன், உடனே இந்த விஷயத்தை அமித்ஷாவிடம் தெரிவித்துள்ளார்.. உடனே அமித்ஷாவும் தமிழிசை மீது கோபப்பட்டுள்ளார். இந்த சூழலில்தான் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவுக்கு வந்த அமித்ஷா, தனக்கு வணக்கம் வைக்க வந்த தமிழிசையிடம் கோபத்தை கொட்டி விட்டாராம். தமிழிசை மேடைக்கு வராமல் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, அமித்ஷாவுக்கு எதிராக நாடார் சங்கத்தால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவிட்டது.. இதையும் அமித்ஷாவின் கவனத்துக்கு மத்திய உளவுத்துறையினர் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

மாநில செயலாளர்: உடனே அந்த மாநில செயலாளர் மறுபடியும் நிர்மலா சீதாராமனிடம் சென்று, "இந்த போஸ்டர் விவகாரத்தின் பின்னணியில் தமிழிசைதான் இருக்கிறார்" என்று பற்ற வைத்துவிட்டுவிட்டாராம்.

இதனால் மேலும் அப்செட்டான நிர்மலா சீதாராமன், இதையும் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.. இதைக்கேட்டு அமித்ஷா மேலும் கொந்தளித்துவிட்டாராம்.

அநாகரீகம்: "இதென்ன அநாகரீகமான அரசியலாக இருக்கிறதே" என்று ஆத்திரப்பட்ட அமித்ஷா இந்த 2 சம்பவத்தையும் விசாரிக்குமாறு உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

உளவுத்துறையும் உடனடியாக இதுகுறித்த உண்மைத்தன்மை என்னவென்று விசாரித்திருக்கிறது.. அப்போதுதான், "நிர்மலா சீதாராமனை பற்றி தமிழிசை எந்த விமர்சனத்தையும் யாரிடமும் வைக்கவில்லை. மோசமாகவும் விமர்சிக்கவில்லை. நிர்மலாவை தமிழிசை மோசமாக திட்டியதாக சொல்லப்பட்டத் தகவலும், நாடார் சங்கம் போஸ்டர் அடித்ததாக வெளியான தகவலும் பொய்யானது. அப்படி நாடார் சங்கம் போஸ்டர் ஒட்டவில்லை. யாரோ இதில் விளையாடியிருக்கிறார்கள் '" என்று ரிப்போர்ட் தந்துள்ளதாம்.

அண்ணாமலை: இதைஅறிந்து மேலும் அப்-செட்டாகி விட்டாராம் அமித்ஷா.. உளவுத்துறை தகவலை நிர்மலாவிடம் தெரிவித்த அமித்ஷா, உடனே அண்ணாமலையை தமிழிசை வீட்டுக்கு அனுப்பி சமாதானப்படுத்த சொன்னாராம்.

இதனை தமிழிசைக்கே நேரடியாகவே ஃபோன் போட்டு அமித்ஷா பேசியிருக்க முடியும் என்றாலும், அது பாஜக தலைவர்களுக்குத் தெரியாமலே போய்விடக்கூடும்.. அதை விரும்பாத அமித்ஷா, அண்ணாமலையை தமிழிசையை சந்திக்க அனுப்பி வைத்து அவர் மூலமாகவே தமிழிசையிடம் பேசி சமாதானப்படுத்தியுள்ளார்" என்று நமக்கு பிரத்யேகமாக தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.. நிர்மலா சீதாராமனை, தமிழிசை மோசமாக திட்டியதாக சொல்லப்பட்ட தகவல் மட்டுமல்ல, நாடார் சங்கம் போஸ்டர் அடித்ததாக வெளியான தகவலும் பொய்யானது என்றும் உறுதியாகியிருக்கிறது.. அப்படி நாடார் சங்கம் போஸ்டர் ஒட்டவில்லை. யாரோ இதில் விளையாடியிருக்கிறார்கள் என்று உளவுத்துறை ரிப்போர்ட் தந்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+