சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்?.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மத்திய உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கு மதம் மாறச் சொன்னதும் அதிக வரதட்சிணை கேட்டதும்தான் காரணம் என பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளார்கள்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்குமார் (30). அதே பகுதியை சேர்ந்தவர் நிகிதா. இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன் திருமணமானது. ஹரீஷ்குமார் மத்திய உளவுத் துறையில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு இடமாறுதல் கிடைத்தது. இதனால் சென்னை பெசன்ட் நகரில் இருவரும் குடிபெயர்ந்தனர். ஹரீஷ் ராஜாஜி பவனில் பணியாற்றி வந்தார்.

நரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு வைக்கவில்லை.. மதுரை ஷாக்!நரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு வைக்கவில்லை.. மதுரை ஷாக்!

கடிதம்

கடிதம்

இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி நிகிதா தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரது அருகே ஒரு கடிதமும் சிக்கியது. அதில் இதற்கு மேல் என்னால் வாழ முடியாது. எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது என ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்த போது ஹரீஷும், அவரது தாயும் வீட்டில் இருந்துள்ளனர்.

பிடெக் பட்டதாரி

பிடெக் பட்டதாரி

நிகிகா பிடெக் பட்டதாரி, இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இருவரது திருமணமும் பெரியோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். மத்திய அரசு பணி என்பதால் நிகிதாவின் பெற்றோர் ரூ 20 லட்சம் வரதட்சிணையாக கொடுத்து ஹரீஷுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணத்தன்று 17 லட்சம் பணம் மணமகன் வீட்டாரிட்ம கொடுக்கப்பட்டது.

மீதம் 3 லட்சம்

மீதம் 3 லட்சம்

மீதமுள்ள 3 லட்சம் பணத்தை கொடுக்காததால் கணவர் வீட்டார் நிகிதாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் நிகிதாவை இந்து மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிகிதா பெற்றோருடன் தான் வசித்து வந்தாராம்.

தற்கொலை

தற்கொலை

இதையடுத்து கடந்த மாதம் நிகிதாவின் பெற்றோர் ஹரீஷ் வீட்டாரிடம் பேசி பேச்சுவார்த்தை நடத்தி நிகிதாவை விட்டுச் சென்றனர். இந்த நிலையில் மகனை பார்க்க அவரது தாய் வந்துள்ள நிலையில் நிகிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் வரதட்சிணை கொடுமை செய்ததால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

English summary
Why did Central Intelligence officer's wife committed suicide in Chennai? Here are the complaints given the girl's parents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X