சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினுக்கே ஷாக் தந்த திருமாவளவன்.. உருக்கமான கோரிக்கை.. கனிவாக நிராகரித்த சீனியர் "தலை"..!

மேயர் பதவிக்கு குறி வைத்து திருமாவளவன் காய் நகர்த்துகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: மேயர் பதவியை குறி வைத்து விசிக காய் நகர்த்தி வருவதும், இதை கேட்டு காங்கிரசும் பதிலுக்கு பதவிகளை கேட்டு வருவதும் என திமுக கூட்டணியே கலகலத்து காணப்படுகிறது.
இந்த முறை மட்டுமல்ல, கடந்த சட்டசபை தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது விசிக, அதிலும் திருமாவளவனின் பேச்சு பலத்தை கூட்டியது என்பதை மறுக்க முடியாது.

எங்கு சென்றாலும் திமுகவின் செயல்பாடுகளை திருமா பெரிதாக பேசப்பட்டார்.. அதேபோல விசிகவின் சாதனைகளையும் பெரிதாக பேச மாட்டார்.. ஆனால் பாஜகவை மட்டும் கிழித்து தொங்கவிடுவார்.

அப்படியே துணை மேயர் பதவியும் கொடுத்தா..? திடீர் கோரிக்கை வைக்கும் தோழர்கள்.. தர்மசங்கடத்தில் திமுக.! அப்படியே துணை மேயர் பதவியும் கொடுத்தா..? திடீர் கோரிக்கை வைக்கும் தோழர்கள்.. தர்மசங்கடத்தில் திமுக.!

விசிக

விசிக

இப்படி பாஜகவையும், அதன் சித்தாந்தத்தையும், விமர்சிப்பதன் மூலம் திமுக, விசிக மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் தானாகவே மக்களுக்கு தெரியவந்துவிடும்.. இதுதான் திருமாவளவன் பிரச்சாரத்தின் பலமே-. அந்த வகையில், இப்போதும் கூட்டணியில் உள்ள விசிக சிறப்பான வெற்றியை வெற்றுள்ளது.. திமுக மட்டும் தனித்து 60 சதவீத வாக்குகளை பெற்று, 21 மாநகராட்சியையும் கைப்பற்றியுள்ளது.

 திருமாவளவன்

திருமாவளவன்

விரைவில் மேயர் பதவி நடக்க உள்ளநிலையில், தங்கள் கட்சிக்கும் மேயர் பதவி வேண்டும் என்று திருமாவளவன் திமுக மேலிடத்தில் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, கட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களை கையோடு அழைத்து சென்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளை, முதல்வரிடமே கேட்டுள்ளதாக தெரிகிறது... குறிப்பாக, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு துணை மேயர் பதவிகளை தங்களுக்கு வழங்குமாறு கேட்டாராம்.

பேரூராட்சி

பேரூராட்சி

ஏற்கனவே பதவிக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் திமுக கவுன்சிலர்களும், நிர்வாகிகளும் இதனால் கடுமையான அதிர்ச்சியில் உள்ளாகிவிட்டதாக தெரிகிறது.. பேரூராட்சியை வேண்டுமென்றால் தந்துவிட்டு போகட்டும், மாநகராட்சியிலும் ஒதுக்கினால் எப்படி என்ற அதிருப்தி நிலவி கொண்டிருப்பதாக செய்திகள் கசிந்து வருககின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சென்னை மேயர் பதவியையும் தங்கள் கட்சிக்கே வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியதாகவும், அதை கேட்டு கட்சி மேலிடமே அதிர்ச்சி அடைந்ததாம்.

விசிக

விசிக

சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியில் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.. இதில் சாந்தி என்பவருக்கு மேயர் பொறுப்பு தந்தால் நன்றாக இருக்கும் என்று திருமா உருக்கத்துடன கேட்டுக் கொண்டாராம்.. ஆனால், சேகர்பாபு போன்ற சீனியர் அமைச்சர்களோ, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.. சென்னை மாநகராட்சியை பட்டியலின பெண்களுக்கு கொடுத்ததே திமுகவின் வரலாற்று புரட்சியாகும்..

 திமுக மேயர்

திமுக மேயர்

அப்படி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டு, திமுக மேயரை நியமித்துதானே அந்த பதவியை செயல்படுத்த வேண்டும்? என்று எடுத்து சொல்லி சமாதானம் செய்தாராம்.. அநேகமாக இந்த நியாயமான முடிவுக்கு திருமாவும் ஓகே சொன்னதாக தெரிகிறது.. ஆனால் அதேசமயம், அதற்கு பதிலாக, வேறு முக்கிய இடத்தை திருமா கேட்கக்கூடும் எதுவானாலும் இன்னும் 4 நாட்களுக்குள் முடிவு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
why did dmk refuse to give chennai mayor post to alliance and Thirumavalana will do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X