Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கே வழிகாட்டும் 'புதுமைப் பெண்' திட்டம்! - கெஜ்ரிவால் பேச்சு உணர்த்தும் உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை:'புதுமைப் பெண்' திட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஒரு மாணவியின் பேச்சு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில்கூட 'பெண்கள் ஏன் படிக்க வேண்டும்? வேலைக்குப் போகவேண்டும்?' எனக் கேட்கின்றவர்கள் இருக்கிறார்கள்.

அப்படியென்றால், நூறு ஆண்டுகளுக்கு முன் பெண்களின் சுதந்திரம் எப்படி இருந்திருக்கும்?

அதனால்தான் அன்றே பெரியார், 'பெண் ஏன் அடிமையானால்?' எனப் புத்தகம் எழுதினார். அவர் வகுத்துக் கொடுத்த வழித்தடத்தில் பயணிக்கும் 'திராவிட மாடல்' ஆட்சி, பெண் கல்வியில் கவனம் செலுத்தாமல் இருக்குமா என்ன?

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

மு.க.ஸ்டாலினை கண்டு நெகிழ்ந்த கெஜ்ரிவால்

டெல்லிக்கு கடந்த மார்ச் மாதம் விசிட் அடித்த ஸ்டாலின், அங்குள்ள உயர்தரமான அரசுப் பள்ளிகளைப் பார்வையிட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? 'அரசியல்வாதிகள் பலர் தங்களின் நேரத்தை அரசியல் செய்வதற்கே அதிகம் செலவழிக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் அப்படியில்லை. அவர் மக்கள் நலனுக்காகச் செலவழிக்கிறார்' என்றார்.

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

'புதுமைப் பெண்' விழாவில் கெஜ்ரிவால் ஏன்?

இப்போது புரிகிறதா? 'புதுமைப் பெண்' விழாவுக்கு கெஜ்ரிவால் ஏன் அழைக்கப்பட்டார் என்று. பலரும் ஏதோ 'அரசியல் கணக்கு' எனச் சொல்கின்றனர். அது உண்மையில்லை. அதற்கு கெஜ்ரிவால் சொன்ன, 'அதிக நேரத்தை ஸ்டாலின் மக்கள் நலனுக்காகச் செலவிடுகிறார்' என்ற வாசகமே சான்று.

சென்னையில் நடந்த 'புதுமைப் பெண்' விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 'இந்தியாவில் 27 கோடி பிள்ளைகள் படிக்கிறார்கள். அதில் 18 கோடி பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இன்னும் அதிகமான பெண்கள் படிக்க விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர்களின் பொருளாதார சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடிவதில்லை. நல்ல கல்வியை ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை.

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

இந்தியா முழுவதுமே புரட்சி

பெண் கல்வி உயர்ந்தால்தான் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசக் கல்வி கிடைக்க வேண்டும். பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். எனவேதான் உயர்கல்வி படிப்பதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் பல பெண்களின் வாழ்க்கையை மட்டுமல்ல; நாட்டையே மாற்றப்போகிறது. இந்த 'புதுமைப்பெண்' திட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமே புரட்சியை உண்டாக்கப் போகிறது' என நெகிழ்ந்தார்.

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

ஒரு மாநில முதல்வர் இன்னொரு மாநில முதல்வரை இப்படி மனதார பாராட்டுவது என்பது அபூர்வம். மக்கள் நலனுக்காகவும் எதிர்கால தலைமுறையின் நலனுக்காகவும் சேர்ந்து ஒரே கோட்டில் சிந்திப்பவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள். அதை உணர்ந்துதான் ஸ்டாலின் டெல்லி சென்று கெஜ்ரிவால் உருவாக்கிய பள்ளிகளைப் பார்வையிட்டார். 'புதுமைப் பெண்' திட்டத்தின் சிறப்பை அறிந்து இங்கு வந்து கெஜ்ரிவாலும் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

ஒரு லட்சம் மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ்

கெஜ்ரிவால் கூறிய அனைத்தும் உண்மைதான். அரசுப் பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த ஒரு லட்சம் பயனாளர்கள் கண்டறியப்பட்டு, இந்தத் திட்டம் செயலுக்கு வந்த அன்றே அனைவருக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி செயல்வடிவம் பெறச் செய்துள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின்.

அதன் அடையாளமாக, விழாவில் பங்குபெற்ற பயனாளியான கல்லூரி மாணவி பரகத் நிஷா, விழிப்புணர்வுமிக்க வரிகளை உச்சரித்தார். அந்தப் பேச்சைத்தான் நாம் தொடக்கத்தில் வைரல் எனக் குறிப்பிட்டிருந்தோம்.

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

மாணவியின் வைரல் பேச்சு

'தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றிவிட்டார்களே என யாரும் பிற்போக்காக நினைக்க வேண்டாம். ஒரு பெண்ணுக்குப் பல கோடிகள் செலவு செய்து நடத்தி வைக்கும் திருமணத்தால் கிடைக்கும் கணவன்கூட கைவிட்டதாக வரலாறு உண்டு. ஆனால் சில ஆயிரங்கள் செலவு செய்து கற்கும் கல்வி ஒரு பெண்ணை கைவிட்டதாக வரலாறு இல்லை' என்றார், மாணவி பரகத் நிஷா.

இந்த மாணவிக்குத் தந்தை இல்லை. 'தாயின் நிழலில் வாழும் தன்னால்தான் அதைச் சொல்ல முடியும்' என்றார் அவர்.

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

அதை உணர்ந்ததால்தான் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்தத் திட்டத்தால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு என நான் சொல்ல மாட்டேன். இது ஒருவகையில் பெண்களின் முன்னேற்றத்துக்கு அரசு செய்யும் முதலீடு' என்றார்.

சொல்லப்போனால் வெறும் கல்விக்காக மட்டுமல்ல; அறிவின் இன்னொரு வடிவமாக உள்ள நூலகங்களை அமைப்பதிலும் திமுக அரசு தொடர்ந்து தனித்துவத்தைக் கட்டி வருகிறது. அதற்குச் சான்றாக உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கூறலாம்.

அண்ணா நூலகம் - இந்தியாவின் பெருமை

'புதுமைப் பெண்' திட்டத்தின் தொடக்கவிழா முடிந்ததும் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்து சென்றது அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குத்தான். அந்தப் பிரமாண்ட நூலகத்தை முழுமையாகப் பார்வையிட்ட அவர், 'அண்ணா நூற்றாண்டு நூலகம், இந்தியாவின் பெருமை' என்று அங்கே உள்ள பதிவேட்டில் எழுதினார்.

மேலும், 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்டதில் மகிழ்ச்சி. இங்கு எண்ணில் அடங்காத ஓலைச்சுவடிகளும் புத்தகங்களும் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி தொடர வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.

 Why did Stalin like Delhi Model School? - Do you know the truth?

புத்தகமும் கல்வியும்தான் ஒரு மனிதனை மேம்படுத்தும். இவைதான் அறிவின் அடையாளங்கள். ஆகவேதான், கல்வியை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இதை உணராமல் 'இலவசம் ஊரைக் கெடுக்கிறது. மக்களைச் சோம்பேறிகளாக்குகிறது' என மேதாவித்தனமாக சிலர் பொருளாதாரம் பேசி வருகின்றனர். பொருளாதாரம் என்பது அரசு சேமித்து வைக்கும் வைப்புநிதி அல்ல. அது தன்னிடமுள்ள பணத்தைச் சமூகநீதியோடு பகிர்ந்து கொடுப்பதில்தான் அடங்கியுள்ளது. அதை 'திராவிட மாடல்' அரசு சிறப்பாகவே செய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+