சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீடியோவை பார்த்தீங்களா.. கனிமொழி படிச்சு படிச்சு சொன்னாங்களே? ஸ்டாலினும் விடலையே! ப்ச் இப்ப பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோரின் உத்தரவை மீறி காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    ஊராட்சி மன்ற கட்டிடத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்..

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் பெண் கவுன்சிலர்கள் பலர் வெற்றிபெற்றனர். ஆனால் பெண் கவுன்சிலர்கள், அந்த கவுன்சிலருக்கான பணிகளை செய்யாமல், அவர்களின் வீட்டு ஆண்கள் கவுன்சிலருக்கான பணியை செய்வதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன.

    அதாவது பெண்களுக்கு என்று ஒதுக்கப்படும் தொகுதிகளில் அரசியல் ஆண் தலைவர்கள் தங்கள் மனைவிகளை தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்துள்ளனர். மற்றபடி பணிகளை எல்லாம் கணவர்கள்தான் செய்கிறார்கள்.

    மக்களுக்கு நல்லது செய்யவே எனக்கு நேரம் பத்தவில்லை! பதில் சொல்லி நேரத்தைவீணடிக்கமாட்டேன் -ஸ்டாலின்மக்களுக்கு நல்லது செய்யவே எனக்கு நேரம் பத்தவில்லை! பதில் சொல்லி நேரத்தைவீணடிக்கமாட்டேன் -ஸ்டாலின்

     புகார் மேல் புகார்

    புகார் மேல் புகார்

    சில தொகுதிகளில் அப்பாக்கள் செய்கிறார்கள் என்று புகார் எழுந்தது. பெண் கவுன்சிலர்கள் கணவர்கள்தான் கவுன்சிலர் போல செயல்படுகிறார்கள் என்று புகார்கள் வைக்கப்பட்டன. அதோடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் மனைவி வெற்றிபெற்றாலும் கணவர்தான் ஆக்டிங் ப்ரெசிடெண்ட் போல செயல் ஆடுகிறார் என்று கூறப்படுகிறது. இதை பற்றி முதல்வர் ஸ்டாலினும்,திமுக எம்பி கனிமொழியும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து இருந்தனர்.

    கனிமொழி

    கனிமொழி

    சமீபத்தில் இது பற்றி பேசிய திமுக கனிமொழி, பெண் கவுன்சிலர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும். அவர்களின் பணிகளில் குடும்பத்தினர் மூக்கை நுழைக்க கூடாது. பெண் கவுன்சிலர்களை சுயமாக பணி செய்ய விடாமல் வீட்டு ஆண்கள் தலையிட கூடாது. வீட்டில் உள்ள கணவர், அப்பா, அண்ணன் ஆகியோர் வேலைகளை பார்த்துக்கொள்வார்கள் என்று பெண் கவுன்சிலர்கள் சும்மா இருந்துவிட கூடாது. உங்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. அதை நன்றாக பயன்படுத்துங்கள், என்று கனிமொழி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

     முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    அதேபோல் கவுன்சிலர்களுக்கான பயிற்சி கூட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் இதே போன்ற எச்சரிக்கையை விடுத்து இருந்தார். பெண்கள்தான் பணிகளை செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனாலும் நான்தான் கவுன்சிலர்.. உங்களால் முடிந்ததை பார்த்துக்கோங்க என்று பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் சிலர் இடங்களில் சண்டை போடும் வீடியோக்களும் கூட வெளியாகின. இந்த தொடர் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     காட்டாங்கொளத்தூர் சம்பவம்

    காட்டாங்கொளத்தூர் சம்பவம்

    தமிழ்நாடு முதல்வர் இப்படி எச்சரித்தும், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்தான் ஆட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்று புகார் எழுந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக அங்கு திமுகவை சேர்ந்த செல்வசுந்தரிதான் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் கணவர் ராஜேந்திரன்தான் அங்கு ஊராட்சி மன்ற தலைவர் போல செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     நான்தான் ப்ரெசிடெண்ட்

    நான்தான் ப்ரெசிடெண்ட்

    எந்த நேரமும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு அனைத்து பணிகளையும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராஜேந்திரன்தான் செய்து வருகிறார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

    அதோடு ஊராட்சி மன்ற தலைவர் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் அவர், தனக்கு ஆதரவாக செயல்படும் வார்டு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அவருக்கு ஆகாத வார்டு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், கூறப்படுகிறது

     கேக் வெட்டி கொண்டாட்டம்

    கேக் வெட்டி கொண்டாட்டம்

    இந்த நிலையில், தற்போது ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரியின் கணவர் ராஜேந்திரனின் பிறந்தநாள் விழாவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அவர் எந்த ஊராட்சியோ பதவியிலும் இல்லாத நிலையில் அரசு அலுவலகத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

     ஆட்சி அதிகார துஷ்பிரயோகம்

    ஆட்சி அதிகார துஷ்பிரயோகம்

    மேலும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது பிறந்தநாள் விழாவை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அந்த விழாவிலேயே.. ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை எல்லோரும் ஊராட்சி மன்ற தலைவர் என்று அழைத்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்கள் விசாரிக்க சென்ற பொழுது, ராஜேந்திரன், என்னைக் கேட்காமல் எதுக்குடா வந்த என்று ஒருமையில் பேசியது மட்டும் இல்லாமல், நான் சொல்வதை தான் செய்ய வேண்டும் என மிரட்டியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     மக்கள் குமுறல்

    மக்கள் குமுறல்

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆதாரங்களுடன் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளாத மாவட்ட திட்ட இயக்குனர், ஊராட்சிகளின் துணை இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் மீதும் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் எச்சரித்தும் உள்ளாட்சிகளில் நடக்கும் இது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Why did the DMK panchayath president's husband's birthday ceremony create a spark in the party? முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோரின் உத்தரவை மீறி காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X