தர்மசங்கடம் முதல்வருக்கு.. "அவர்" மீது ஏன் நடவடிக்கை இல்லை.. திமுகவுக்கு செக் வைக்கும் கட்சிகள்
ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஏன் நடவடிக்கை இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது
சென்னை: ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கையை முதல்வர் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். அதேபோல, ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை விரைவில் எடுப்பார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்..
சர்ச்சை வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திடீரென மாற்றப்பட்டார்...
அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது... பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கரிடம் போக்குவரத்துத் துறையும் உடனடியாக ஒதுக்கப்பட்டது...

முனுசாமி
ஆனால், சாதியை சொல்லி திட்டியதற்கு, இலாகாவை மாற்றம் செய்தால் மட்டும் போதுமா? இந்நேரம் திமுக அரசு வழக்கு பதிந்து இருக்க வேண்டாமா? என்று அதிமுகவின் மூத்த தலைவர் கேபி முனுசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.. கிட்டத்தட்ட இதே போன்ற கோரிக்கையைதான் கூட்டணி கட்சிகளும் எதிர்பார்த்து வருகின்றன. இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் இதை வலியுறுத்தினார்.

துபாய் பணம்
"யாராக இருந்தாலும் ஒருவரின் ஜாதியை சொல்லி திட்டுவது, இழிவாக பேசுவதை இந்திய கம்யூனிஸ்ட் ஒரு போதும் ஏற்காது... அமைச்சர் ராஜகண்ணப்பனின் துறையை மாற்றிய முதல்வர் ஸ்டாலின் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளம்பரத்திற்காக ஸ்டாலின் துபாயில் ரூ.5 ஆயிரம் கோடியை பதுக்கியதாக சொல்கிறார்..

பிரதமர் மோடி பயணம்
முதல்வர் ஒரு நாட்டிற்கு சென்றால் பணத்தை பதுக்க என்று கூறினால், பிரதமர் மோடி எல்லா நாடுகளுக்கும் சென்று வருவதை எப்படி சொல்வது? என்று கேள்வி எழுப்பினார். அதேபோல, ராஜகண்ணப்பன் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்..

வன்கொடுமை
அதில், அமைச்சர் ராஜகண்ணப்பன் பிடிஓவை பார்த்து சாதி குறித்து பேசி உள்ளார். உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்தது பாராட்டுதலுக்குரியது. அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய வேண்டாமா?.. பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு நிலைமை என்ன?" என்று கேட்டுள்ளார்.. ஆக மொத்தம் கூட்டணி கட்சியே என்றாலும், அமைச்சர் மீதான நடவடிக்கையை எடுக்க சொல்லும் வலியுறுத்தல் தொடர்கின்றன..!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications