சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜானகியம்மா".. அப்படியே ஜெ ஸ்டைலில் வாலை சுழற்றிய எடப்பாடி! திடீரென திமுக அட்டாக் ஏன்? "சைக்காலஜி"

Google Oneindia Tamil News

சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென திமுகவை கடுமையாக விமர்சித்து நேற்று பேசினார். அவரின் பேச்சுக்கு பின் வேறு சைக்காலஜி இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    அதிமுகவை வழி நடத்தும் திறன் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது - மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்

    அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் உச்சத்தில் உள்ளது. பொதுச்செயலாளர் பதவியைப் எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.

    ஒரு பக்கம் அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு, பொதுக்குழு மீண்டும் நடப்பதற்கு எதிராக எதிராக வழக்கு என்று பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கண்டிப்பாக ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை நடத்த முடியும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

     ஓபிஎஸ் பினாமி முதலீடு.. ஈபிஎஸ் ஆதரவாளர் கிலோ கணக்கில் தங்கம்.. பகீர் குற்றச்சாட்டுகள்- பரபர அதிமுக! ஓபிஎஸ் பினாமி முதலீடு.. ஈபிஎஸ் ஆதரவாளர் கிலோ கணக்கில் தங்கம்.. பகீர் குற்றச்சாட்டுகள்- பரபர அதிமுக!

    என்ன?

    என்ன?

    இந்த நிலையில்தான் நேற்று பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்திருந்தார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டு கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக முர்மு நேற்று சென்னை வந்து இருந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இதற்காக பாஜக சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    விழா

    விழா

    இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதில் பேசிய எடப்பாடி, திரெளபதி கண்டிப்பாக வெற்றிபெறுவார். பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆவது நம்மைக்குத்தான் பெருமை. அவர் உழைப்பால் முன்னேறி இருக்கிறார். அவருக்கு பெரிய குடும்ப பின்னணி இல்லை. இருப்பினும் தனது கடும் போராட்டத்தால், முயற்சியால் அவர் இந்த உயரத்தை அடைந்து இருக்கிறார். அவருக்கு எங்களின் முழு ஆதரவு.

     சமூக நீதி

    சமூக நீதி

    திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் ஆவதுதான் உண்மையான சமூக நீதி. சமூக நீதி பேசும் கட்சிகள் இவரை ஆதரிக்க வேண்டும். திரெளபதி முர்முவை ஏன் திமுக ஆதரிக்கவில்லை. திமுக சமூக நீதி, திராவிடம் எல்லாம் பேசுகிறது. ஏன் திரெளபதி முர்முவை ஆதரிக்கவில்லை. இதுதான் உங்கள் சமூக நீதியா? என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். அந்த மேடையில் யாரும் திமுகவை நேரடியாக அட்டாக் செய்யாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இப்படி நேரடியாக திமுகவை தாக்கி பேசினார்.

     காரணம் என்ன?

    காரணம் என்ன?

    எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு பின் மிகப்பெரிய சைக்காலஜி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்த தகவலில், எடப்பாடி பழனிசாமி திமுகவை எதிர்த்தது பாராட்டுக்குரியது. தான்தான் திமுகவிற்கு எதிரி என்பதை காட்டும் விதமாக அவர் பேசி உள்ளார். அதிமுக தொண்டர்களுக்கு.. எத்தனை கட்சி வந்தாலும் திமுகதான் ஒரே எதிர்க்கட்சி.

    திமுக

    திமுக

    அப்படி இருக்கும் போது திமுகவை எதிர்க்கும் நபரைத்தான் தங்கள் தலைவராக தொண்டர்கள் கருதுவார்கள். எடப்பாடி அந்த சைக்காலஜியை புரிந்து கொண்டு திமுகவை எதிர்க்கிறார். எம்ஜிஆர் மரணத்திற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது ஜானகியம்மா டீம் கொஞ்சம் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தது. ஒரு விழாவில் கூட கருணாநிதி - ஜானகி அருகருகே அமர்ந்து இருந்தனர்.

    பிடிக்கவில்லை

    பிடிக்கவில்லை

    இதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. தொண்டர்கள் பலர் ஜெயலலிதா பக்கம் செல்ல இதுவும் காரணமாக இருந்தது. இப்போதும் அதுதான் நடக்கிறது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். அதாவது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்பின் ஓபிஎஸ் சார்பாக பொதுக்குழுவை நிறுத்த போலீசிடம் மனு கொடுக்கப்பட்டது. இதெல்லாம் அவர் திமுகவுடன் நட்பாக இருப்பதை காட்டுகிறது.

     திமுக

    திமுக

    திமுக உதவியை அவர் பெற முயற்சிக்கிறார். இதை அதிமுக தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களை பொறுத்தவரை திமுகதான் முதல் எதிரி. அதை ஓபிஎஸ் உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால் எடப்பாடி உணர்ந்து கொண்டார். அதனால்தான் அவர் நேற்று திமுகவை அப்படி தாக்கி பேசினார் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். தொண்டர்களை தன் பக்கம் இழுக்க எடப்பாடி கையில் எடுத்த சைக்காலஜி அஸ்திரம் இது என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

    English summary
    Why does Edappadi Palanisamy talk against DMK suddenly amid tussle in AIADMK? அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் உச்சத்தில் உள்ளது. பொதுச்செயலாளர் பதவியைப் எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X