முடித்துக்கட்ட எடப்பாடி 'சிக்னல்'.. பாஜக கோபப் பார்வை..? “ஈபிஎஸ் ஆடும் கேம்”.. குபேந்திரன் ‘பளிச்’!
சென்னை : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். அதிமுகவை சீண்டி வரும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதன் வெளிப்பாடாகவே அதிமுக தலைவர்கள் அண்ணாமலையையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்" என ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் இரு தரப்பு மோதலுக்கு மத்தியில் ஓபிஎஸ் தரப்பினர், பாஜக தலைமையோடு மிகவும் இணக்கமாக இருந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பாஜகவிற்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக விவகாரம் மற்றும், பாஜக தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் முடிவு பற்றி பத்திரிகையாளர் குபேந்திரன் நமது ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

உக்கிரமான போட்டி
அதிமுகவைக் கைப்பற்றும் போட்டியில் உக்கிரமாக ஈடுபட்டு வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் அடுத்தடுத்த நகர்வுகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம், சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி வரும் 27ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, ஓபிஎஸ், கட்சி பெயர், கொடியை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஈபிஎஸ். தேர்தல் ஆணையம், இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு செலவு அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி, அதிமுகவில் பரபரப்புகள் தொடர்ந்து வருகின்றன.

அறிவுஜீவி கொடுத்த ஐடியா
இந்நிலையில் இதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என பத்திரிகையாளர் குபேந்திரனிடம் ஒன் இந்தியா சார்பில் கேள்வியை முன்வைத்தோம். அதற்கு அவர், "ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே உச்ச நீதிமன்றத்தில் மாறி மாறி மனு தாக்கல் செய்து வந்தனர், இந்த சூழலில் யாரோ ஓர் அறிவுஜீவி ஓபிஎஸ்ஸுக்கு ஐடியா கொடுத்துள்ளார். மாறி மாறி மனு தாக்கல் செய்வதால் என்ன பலன்? ஏதாவது கூட்டம் நடத்தி, ஆவணங்களை தயார் செய்து கொள்ளுங்கள் என ஐடியா கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் தான் ஓபிஎஸ் சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். 88 மா.செக்களை நியமித்து, அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார்.

ஓபிஎஸ் நிலைமை பரிதாபம்
இதை நீதிமன்றத்தில் ஓபிஎஸ் முன்வைக்கலாம். எனது அணியில் நடந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இவ்வளவு பேர் கலந்து கொண்டிருக்கின்றனர் என ஓபிஎஸ் தரப்பு வாதாடலாம். அதற்கு பதிலடி கொடுப்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமியும் மா.செக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்சியே தனது பக்கம் இருப்பதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி இதற்கு பதற்றப்பட்டிருக்க வேண்டியதில்லை. இந்த மா.செக்கள் கூட்டத்தால் இரு தரப்புக்குமே நீதிமன்றத்தில் எந்தவொரு பெரிய பலனும் கிடைக்கப்போவதில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் தான் கட்சி இருக்கிறது. ஓபிஎஸ் நிலைமை பரிதாபம்" எனத் தெரிவித்துள்ளார்.

பின்னணியில் ஈபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி அணியில், பாஜகவை எதிர்த்து பல்வேறு குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜகவிற்கு எதிராகப் பேசி வருவதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது பற்றி ஒன் இந்தியா செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பத்திரிகையாளர் குபேந்திரன், இதற்குப் பின்னணியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக + பாஜக கூட்டணி அமையும் எனப் பேசுகிறார். மறுநாளே ஜெயக்குமார், அவர் சொன்னது சரிதான் என்பதைப் போல பேசுகிறார்.

அண்ணாமலை யார்
செல்லூர் ராஜூ, காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று பேசுகிறார். எம்.ஜி.ஆருக்கு காவி துண்டு போட்டதை கண்டித்த அவர், காவி இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும் என அழுத்திக் கூறி இருக்கிறார். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.பி திருத்தணி கோ. ஹரி, பாஜகவின் 4 எம்.எல்.ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை எனப் பேசியுள்ளார். அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், எங்கள் கட்சி தலைவர்களுக்கு ரேங்க் போடுவதற்கு இந்த அண்ணாமலை யார்? என்று பேசுகிறார்.

எடப்பாடி - பேசாத காரணம்
அதிமுகவின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் பலரும், பாஜகவுக்கு எதிராகப் பேசுகிறார்கள். இது எல்லாமே எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் பேசுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி நேரடியாக பாஜகவை விமர்சித்துப் பேசாததற்குக் காரணம் இருக்கிறது. இரண்டாம் கட்ட தலைவர்கள் பாஜகவை விமர்சிப்பதால், பாஜக கோபப்பட்டு, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளே இறக்கப்பட்டால், பாஜகவுடன் சமாதானமாகச் செல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. கட்சிக்காரர்கள் தன்னிச்சையாக அப்படி பேசிவிட்டார்கள் என சமாளிக்கலாம். ஆனால், இந்த விஷயங்களை எடப்பாடியே பேசிவிட்டால் அப்புறம், பாஜகவுடன் சமாதானத்திற்குச் செல்ல முடியாது.

ஈபிஎஸ் எடுத்த முடிவு
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். பாஜக என்ற சுமையை இறக்கி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பலரும் விரும்புகிறார்கள். பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் தங்களுக்கு வராது என்று கருதுகிறார்கள். கடந்த பல மாதங்களாகவே அதிமுகவை சீண்டி வருகிறார் அண்ணாமலை. அதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் அதிமுக தலைவர்கள் பேசி வருவது" எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications