திமுக, அதிமுகவை விடுங்க! ரிசல்ட் வர நேரத்தில் திடீரென நாம் தமிழர் மீது திரும்பிய போகஸ்! ஆஹா சீமானா?
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் அடுத்த வாரம் வர உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி மீதான கவனம் அதிகரித்துள்ளது. இதற்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளது.
கரும்பு விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த சின்னம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலை அந்த சின்னத்தின் கீழ்தான் நாம் தமிழர் கட்சி எதிர்கொண்டது. நாம், தமிழர் கட்சியின் நிரந்தர சின்னம் ஆகிவிடும் என்றெல்லாம் கட்சி நிர்வாகிகள் நினைத்தனர்.

ஆனால் அந்த சின்னத்தை லோக்சபா தேர்தலுக்கு முன் நாம் தமிழர் இழந்தது. போதுமான வாக்கு சதவிகிதம் இல்லை . தேர்தலுக்கு முன்பே சின்னத்தை கேட்கவில்லை. முதல் ஆளாக சின்னத்தை கேட்டு விண்ணப்பம் செய்யவில்லை என்பதே காரணம்.
இதை காலம் காலமாக இருக்கும் விதிகள். நாம் தமிழர் கட்சி இதை தவறவிட்டது பெரிய அளவில் அந்த கட்சிக்கு எதிராக மாறியது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னம் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு கொடுக்கப்பட்டது.
அந்த சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி தமிழகத்தில் 17 தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது. இதில் சில இடங்களில் அவர்களின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. கிட்டத்தட்ட 15 இடங்களில் அவர்கள் போட்டியிட, மற்ற இடங்களில் அந்த சின்னம் சுயேட்சை சின்னம் ஆனது.
சீமான் புகார்: இந்த சின்னத்தை பெற சீமான் உச்ச நீதிமன்றத்திற்கு எல்லாம் சென்று போராடினார். ஆனால் சின்னம் கிடைக்கவில்லை. ஏதாவது செய்து சின்னத்தை பெற படாதபாடு பட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகதான் சின்னத்தை இழக்க காரணம் என்று சீமான் கூறினார்.
போகஸ்: சின்னம் மாறி.. மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. இந்த நிலையில்தான் பாஜக தனியாக எடுக்கும் வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி அதிக வாக்கு சதவிகிதத்தை எடுக்கும். அப்படி எடுக்கவில்லை என்றால் கட்சியை கலைத்துவிடுவேன் என்று சீமான் சவால் விடும் அளவிற்கு நாம் தமிழர் கட்சி நம்பிக்கையாக உள்ளது.இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் தமிழர் கட்சி மீது போகஸ் சென்றுள்ளதாம். அதன்படி,
1. நாம் தமிழர் எத்தனையாவது இடம் பிடிக்கும் என்ற கவனம் ஏற்பட்டு உள்ளது.
2. அந்த கட்சி சின்னம் மாறிய பின் எவ்வளவு வாக்குகளை பெறும் என்பதை பொறுத்து அவர்களின் organisational பலம் பற்றிய கணிப்பை மேற்கொள்ள முடியும்.
3. அதிமுகவில் இரட்டை தலைமை பிரிவு, மோதலுக்கு பின் அவர்களின் வாக்கு வங்கியில் குறிப்பிட்ட சதவிகிதத்தை நாம் தமிழர் எடுத்துவிட்டதாக ஒரு வாதம் உள்ளது. இந்த வாதம் உண்மையா என்று தெரிந்துவிடும்.
4. நாம் தமிழர் கட்சி தங்களை தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சி என்று கூறும் நிலையில், அந்த வாதம் உண்மையாகுமா என்று இந்த தேர்தலில் தெரிந்துவிடும்.
ரிப்போர்ட்: ஏற்கனவே 2024 லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி குறித்த ரிப்போர்ட் ஒன்று மேலிடத்திற்கு சென்றுள்ளதாம். லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு ரிப்போர்டுகள் அரசுக்கு சென்று கொண்டு இருக்கிறதாம்.
அதாவது தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. யாருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளது. யார் எங்கே வெற்றிபெறுவார்.. எவ்வளவு வாக்கு வித்தியாசம் உள்ளது என்றெல்லாம் ரிப்போர்ட் சென்று கொண்டு இருக்கிறதாம்.
பொதுவாக லோக்சபா தேர்தல் முடிந்தால் கட்சிகளுக்கு மாவட்ட செயலர்கள் கொடுக்கும் இது போன்ற ரிப்போர்டுகள் செல்வது வழக்கம். அதுவே ஆளும் கட்சி என்றால் மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி உளவுத்துறை கொடுக்கும் ரிப்போர்ட்டும் கூடுதலாக செல்லும், உளவுத்துறை பொதுவாக ஆளும் கட்சிக்கு எத்தனை இடங்கள் சாதகமாக இருக்கும், எத்தனை இடங்கள் எதிராக செல்லுங்கள், எங்கெல்லாம் அளவும் கட்சி வெல்ல வாய்ப்பு உள்ளது, எங்கெல்லாம் ஆளும் கட்சி சறுக்க வாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்துவிடும். அதேபோல் எந்த இடங்களில் எல்லாம் இழுபறி நீடிக்கும் என்றும் ரிப்போர்ட் சென்றுவிடும்.
ரிப்போர்ட் சொலவ்து என்ன?: இப்படிப்பட்ட நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியமான ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது. அதன்படி தேர்தல் தொடர்பாக வந்த முக்கோண ரிப்போர்ட் அது என்கிறார்கள். பென் என்ற திமுகவிற்கு நெருக்கமான அமைப்பு நடத்திய சர்வே + உளவுத்துறை சர்வே + மாவட்ட நிர்வாகிகள் எடுத்த சர்வே.
திமுக தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 40ல் வெல்லும். கோவையில் திமுகவே வெல்லும். அங்கே இரண்டாம் இடம் அதிமுகவிற்கு கிடைக்கும். வட மாவட்டங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும். திருச்சி, பொள்ளாச்சி, ஈரோடுகளில் லேசான இழுபறி இருந்தாலும் திமுகவே வெல்லும். ஆனால் தென் மாவட்டங்களில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லாது. காரணம் அங்கே வாக்குகள் கடுமையாக பிரிந்துள்ளது என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
இந்த ரிப்போர்ட் மொத்தமாக திமுகவிற்கு ஆதரவாகவே சென்றுள்ளதாம்.
மாற்று கட்சிகள்: அதே சமயம் மாற்று கட்சிகள் பற்றிய ரிப்போர்டும் சென்றுள்ளதாம். அதில் அதிமுக இரண்டாவது பெரிய கட்சியாக நீடிக்கும். தென் மாவட்டங்களில் இடங்களில் பாஜக இரண்டாம் இடம் வரலாம். நாம் தமிழர் கட்சி தென் மாவட்டங்களில் முன்பு எடுத்ததை விட குறைவாக வாக்கு சதவிகிதம் எடுக்கும்.
கரும்பு விவசாயி சின்னம் இழந்தது அந்த கட்சிக்கு சிக்கலாகி உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆட்டோவை வைத்து தெரு தெருவாக சின்னத்தை கொண்டு செல்ல பணிகளை செய்தது. இதனால் சென்னையில் மைக் சின்னம் சென்று சேர்ந்துள்ளது.
சென்னையில் ஆட்டோ மூலம் செய்த பிரச்சாரம் மைக் சின்னத்தை பிரபலப்படுத்தி உள்ளது. அதனால் அங்கே நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி கிடைக்கும். மற்றபடி வட மாவட்டங்களில் பெரிதாக கிடைக்காது என்று ரிப்போர்ட் சென்றுள்ளதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications