கொடநாடு வழக்கில் மேல்விசாரணை ஏன் தேவை?.. அதிமுகவின் இன்பதுரை கூறும் வழக்கே சாட்சி.. கேசி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடநாடு வழக்கில் ஏன் மேல் விசாரணை வேண்டும் என்பதற்கு அதிமுகவின் இன்பதுரை கூறும் வழக்கே சாட்சி என முன்னாள் எம்பி கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரது மறைவுக்கு பின்னர் நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சிலரிடம் மேல் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார். மேலும் அத்தனை விசாரணைகளும் முடிவடைந்த இந்த வழக்கில் எதற்கு மேல் விசாரணை என்றும் தன்னை வேண்டுமென்றே சிக்க வைக்க சதி நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் புகார் மனுவையும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அளித்தனர்.

கொள்ளை நடந்த காலம்

கொள்ளை நடந்த காலம்

இந்த மேல்விசாரணையில் கொள்ளை நடந்த காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியையும் சசிகலாவையும், இளவரசி, சுதாகரன் ஆகியோரையும் விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையில் காணாமல் போன பொருட்கள் எவை எவை என்பது குறித்து சசிகலா, இளவரசி ஆகியோருக்குத்தான் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விவகாரத்தில் தொடர்பு

விவகாரத்தில் தொடர்பு

அது போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு என அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் வாக்குமூலம் அளித்துள்ளதால் அவரையும் விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவினர் எடப்பாடியை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பொதுவாக ஒரு வழக்கு விசாரணை முடிந்திருந்தாலும் அதை மேல்விசாரணை செய்வதில் தவறில்லை என்பதை உணர்த்தும் ஒரு எடுத்துக்காட்டை முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஏன் மேல் விசாரணை

ஏன் மேல் விசாரணை

"கொடநாடு வழக்கு! ஏன் மேல் விசாரணை வேண்டுமென்பதெற்கு இன்பதுரை கூறும் வழக்கே சாட்சி என கூறியுள்ள கே சி பழனிச்சாமி ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் 2003 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு 2006 ஆம் ஆண்டு ஒரு தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என இறந்தவரின் மனைவி கோரியிருந்தார்.

முக்கிய சாட்சியங்கள்

முக்கிய சாட்சியங்கள்

அந்த வழக்கில் அவரை கைது செய்ய போகும் போது மாடியிலிருந்து குதித்துவிட்டார். அந்த வழக்கில் அவரை கைது செய்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் தீர்ப்பை எடுத்து படித்து பார்த்தால் அதில் அரசு தரப்பு சாட்சியாக இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் சாட்சி அளித்துள்ளார். அதில் இரு முக்கிய சாட்சிகளை நான் விசாரிக்கவே இல்லை என சொல்கிறார். இறந்து போன பாண்டியனுக்கும் விஐபியின் மனைவிக்கும் ஒரே லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரை அவரிடம் சொல்லாமல் இந்த விஐபியின் மனைவி எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டார். எனவே இந்த வழக்கில் அந்த மனைவியையும் பேங்கரையும் விசாரித்திருக்க வேண்டுமா இல்லையா. இவ்வாறு முக்கிய சாட்சிகளை விசாரிக்கப்படாததுதான் இந்த வழக்கை கடுமையாக பாதித்துவிட்டதாக சொல்லி சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளிப்பதாக கூறி விடுதலை செய்துவிட்டார்கள் என்கிறார் இன்பதுரை.

Recommended Video

    மீண்டும் சூடு பிடிக்கும் Kodanadu விவகாரம்.. என்ன காரணம்? | Explained
    மேல்விசாரணை வேண்டுமா வேண்டாமா

    மேல்விசாரணை வேண்டுமா வேண்டாமா

    இதுகுறித்து கே சி பழனிசாமி ஒரு விவாதத்தில் கூறுகையில் இந்த கொடநாடு வழக்கில் மேல்விசாரணை வேண்டுமா வேண்டாமா என்றால் அந்த பங்களாவின் உரிமையாளர்களுள் ஒருவரிடம் சாட்சியமும் விசாரணையும் நடத்தப்படவில்லை. இது நிச்சயமாக சட்டப்படி செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும் போது இந்த வழக்கில் சசிகலாவின் சாட்சியங்களை எடுத்தீர்களா என கேட்கும் போது எடுக்கப்படவில்லை என சொல்ல முடியுமா. ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் அந்த பங்களாவில் என்ன இருந்தது , தற்போது என்ன காணாமல் போயுள்ளது என்பது சசிகலாவுக்குத்தான் தெரியும். எனவே இந்த வழக்கில் மேல் விசாரணை தேவை என்றார் கேசி பழனிசாமி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+