வீரமணி வாக்குமூலத்தை ஒருவரி விடாமல் கேட்ட விஜய்.. உடனே தந்த ரியாக்சன்.. களமிறங்கிய போலீஸ்
சென்னை: தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போக்சோ வழக்கில் தொடர் புடைய அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜை நேரில் அழைத்து உத்தரவிட்டார் முதல்வர் விஜய்.
வீரமணி கொடுத்த வாக்குமூலத்தை ஒரு வரி விடாமல் முதல்வரிடம் ஒப்புவித்தார் அமல்ராஜ். அதனைக் கேட்டுத்தான், யாரும் தப்பி விடக்கூடாது; எல்லோரையும் சட்டத்தின் மின் நிறுத்துங்கள் என்று உத்தர விட்டார் விஜய்.

மேலும், இதில் சட்டத்திற்கு புறம்பாக நடந்த பண பரிவர்த் தனையை முழுமையாக கொண்டுவர தனிக்குழு அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம்.
இந்த வழக்கினை கடந்த திமுக ஆட்சியில் மூடி மறைக்க நடந்த பேரங்களில் சில பத்திரிகையாளர்களும் சம்மந்தப்பட்டிருப் பதாக சொல்லப்படுவதால் அவர்களுக்கும் சம்மன் அனுப்ப போலீஸ் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. பத்திரிகையாளர்களு க்கு சம்மன் அனுப்பப்பட்டால், அந்த விவகராம் இந்த வழக்கில் பல அதிர்ச்சிகளை வெளியே கொண்டு வரும் என்றும் போலீஸ் தரப்பில் பரவியு ள்ளது.
இது ஒருபுறமிருக்க, வீரமணியின் சென்னையிலுள்ள 120 கோடி சொத்து மற்றும் ஊட்டியில் உள்ள 10 கோடி மதிப்பிலான சொத்து ஆகியவைகளை மிரட்டி வாங்கிய விவகாரத்தில் தெற்கு ரயில்வே சங்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரின் மகன் சம்மந்தப்பட்டிருப்பதால் அந்த பிரமுகரின் மகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது போலீஸ்.
ஆனால், வீரமணி கைது செய்யப்பட்டு விவகாரம் பூதாகரமானதுமே அந்த பிரமுகரின் மகன், வெளி நாட்டுக்கு சென்று தலைமறைவாகியிருக்கிறார். அதனால் அவருக்கு நேரடியாக சம்மன் அனுப்ப முடியாமல் இருக்கும் போலீசார், சங்கத்தின் தலைவரை அழைத்து விசாரிக்கலாமா? என்று போலீசார் ஆலோசித்து வருவதாகவும் சென்னை மாநகர போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வீரமணிக்கு எதிரான போக்சே வழக்கில் நடந்துள்ள பல வில்லங்க சம்பவங்களுக்கான பல ஆதாரங்கள் போலிசிடம் சிக்கியுள்ளன என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யவதற்கு முன்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதற்காகத்தான் சம்மன் அனுப்பி விசாரணையை போலீசார் நடத்துவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், விரைவில் சில அதிரடி கைதுகள் நடக்கும் என பரபரப்பு நிலவுகிறது.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பின்னணி என்ன?
சென்னையைச் சேர்ந்த 84 வயதான ஆர். வீரமணி, இந்தியாவில் உள்ள முன்னணி கிரானைட் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். பல தொழில்களை நடத்தி வந்த இவர், வர்த்தக ரீதியாக மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்தார்.
ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மீது பதிவான ஒரு போக்சோ வழக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.
புகாரும் கைது நடவடிக்கையும்: கடந்த 2025-ஆம் ஆண்டு, சிறுமி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ ஆதாரம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு: முதலில் போதிய ஆதாரங்கள் இல்லை என இந்த வழக்கை முடிக்க காவல்துறை முயன்றது. ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்கக் கடுமையான உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், வீடியோவில் இருப்பது வீரமணிதான் என்பது உறுதி செய்யப்பட்டு, அவர் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 8க்கும் மேற்பட்ட சிறுமிகள் இவர் மீது புகார் அளித்துள்ளனர்.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
