விநாயகர் சிலை ஊர்வலம்.. எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
சென்னை: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் நேற்று டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தார்.
நீட் தேர்வு விவகாரம், எய்ம்ஸ் மருத்துவமனை, கூடுதல் தடுப்பூசி உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் அவர் வலியுறுத்தினார். தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

ஒத்துழைக்க வேண்டும்
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்பதை விட்டு விட்டு நீட் தேர்வை நடத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:- தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நீட் தேர்வு விலக்கு உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதி
தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு நடக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வந்தார். தேர்தல் வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனாலும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் எதிரானது கிடையாது. 10 நாளில் நடக்க உள்ள நீட் தேர்வில் நல்ல முறையில் நடத்தி மாணவர்களுக்கு சோதனை போன்ற பிரச்சனை தராமல் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த தமிழக அரசு துணை நிற்க வேண்டும்.

நிலைப்பாட்டில் தெளிவு
விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைப்பது தொடர்பாக பா.ஜ.க நிலைப்பாடு தெளிவாக உள்ளது கொரோனா சூழல் காரணமாக கட்டுப்பாடுகளை போடுவதற்கு தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழகத்தில் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது. மூன்றாவதாக அலைக்கு எந்த சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை
Recommended Video

ஏற்புடையது அல்ல
இப்படி இருக்கும் பட்சத்தில் விநாயகசதுர்த்திக்கு அனுமதிக்க மாட்டேன் எனக் கூறுவது ஏற்புடையது கிடையாது. கட்டுப்பாடுகளை மீறினால் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். மகாராஷ்டிராவில் தமிழகத்தை விட கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் அங்கு கட்டுப்பாட்டை போட்டு அனுமதி அளிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. இன்னும் காலம் இருக்கிறது. இதனை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications