சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனி சம்பவம்.! ஓபிஎஸ் சொந்த மாவட்டத்தில்.. "அவரை" களமிறக்கிய எடப்பாடி! அதிர்ச்சியில் பன்னீர்செல்வம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில், ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அவருக்கு ஷாக் கொடுத்து உள்ளது எடப்பாடி தரப்பு.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓபிஎஸ்- எடப்பாடி ஆகியோரின் இரட்டை தலைமையின் கீழ் சென்ற அதிமுகவில் இப்போது மீண்டும் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

இரட்டை தலைமையின் கீழ் தொடர்ந்து, அதிமுக பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வந்தது. அப்போதே ஓபிஎஸ்- எடப்பாடி இருந்து வந்தாலும் அது பெரியளவில் பேசுபொருள் ஆகவில்லை.

”ஒரே கல்லில் இரு மாங்காய்” மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டம்.. களமிறங்கும் இபிஎஸ்! ”ஒரே கல்லில் இரு மாங்காய்” மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டம்.. களமிறங்கும் இபிஎஸ்!

 அதிமுக

அதிமுக

இந்தச் சூழலில் தான் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று கடந்த மே மாதம் பேச்சு எழுந்தது. அதன் பின்னர் மெல்ல எடப்பாடிக்குக் கீழ் ஒரு அணியும், ஓபிஎஸ் கீழ் ஒரு அணியும் உருவானது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர்.

 ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

இந்த பொதுக்குழுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலும் கூட எடப்பாடிக்குச் சாதகமான தீர்பையே சென்னை ஐகோர்ட் அளித்து உள்ளது. அது மட்டுமின்றி அதிமுக தலைமை அலுவலக சாவியும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட் வரை சென்று மேல்முறையீடு செய்து பார்த்தார். இருப்பினும், அங்கும் கூட அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 தலைமை அலுவலகம்

தலைமை அலுவலகம்

மேலும், எடப்பாடி தனது பலத்தைக் காட்டும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் சமீபத்தில் சென்று இருந்தார். பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக அவர் தேர்வான பின்னர், எடப்பாடி அதிமுக தலைமை அலுவலகம் சென்றது அதுவே முதல்முறை. அப்போது ஒரு சில மூத்த நிர்வாகிகளைத் தவிர அனைவரும் அங்கு ஆஜராகி இருந்தனர்.

 சொந்த மாவட்டம்

சொந்த மாவட்டம்

இதனால் உற்சாகத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் தனது செல்வாக்கைக் அதிகரிக்கப் பல நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார். தொடர்ந்து மாநிலத்தில் பல இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஓபிஎஸ் தரப்பைக் கடுமையாகச் சாடி வருகிறார். இந்தச் சூழலில் ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனியிலேயே அவருக்கு எதிராகச் சம்பவத்தை நடத்தியுள்ளார் எடப்பாடி!

 ஓபிஎஸ் இல்லை

ஓபிஎஸ் இல்லை

ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் மிஸ்ஸிங். பொதுவாகத் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் ஓபிஎஸ் கலந்து கொள்வார். ஆனால், அவர் இல்லாமல் எடப்பாடி தரப்பு இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

 அவரை களமிறக்கிய எடப்பாடி

அவரை களமிறக்கிய எடப்பாடி

ஓபிஎஸுக்கு செக் வைக்கும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை எடப்பாடி தரப்பு நடத்தி உள்ளது. இதற்காக அதிமுகவின் அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை எடப்பாடி களமிறக்கினார். அவர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் சொந்த மாவட்டத்திலேயே அவர் இல்லாமல் நடந்து கூட்டத்தில், இத்தனை நிர்வாகிகளை வர வைத்துள்ளது எடப்பாடி தரப்பு.

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி ஆதரவாளர்கள், " குடும்ப அரசியல் தலையீடு இல்லாமல் முதல்முறையாகச் சுதந்திரமாகத் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அதிமுக கூட்டம் இது. திமுக அரசின் மக்கள் விரோத போக்கால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எப்பாடி பழனிசாமி உத்தரவின்படி பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் நாளை தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது" என்றனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டதால், உற்சாகத்தில் உள்ளது எடப்பாடி தரப்பு.. அடுத்து வரும் நாட்களில் சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸுக்கு அழுத்தம் தரும் வகையிலான நடவடிக்கையில் எடப்பாடி தரப்பு இறங்கும் எனக் கூறப்படுகிறது.

English summary
Edappadi palanisamy makes Jakkaiyan to conduct impt meeting in theni without OPS: Theni ADMK party person attedened EPS supporters meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X