சிவாஜிக்கு வைக்கலாம், கருணாநிதிக்கு சிலை வைக்கக் கூடாதா? அடுக்கடுக்காக வந்து விழும் லாஜிக் கேள்விகள்
சென்னை: பேனாதான் தற்போது தமிழ்நாட்டின் பேசு பொருள். மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு 81 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவுச் சின்னம் அமைக்க உள்ளது.
அந்தச் சின்னம் கடலின் உள்ளே அமைய உள்ளதால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலைக் காரணம் காட்டி, அதை வேண்டாம் என்கிறனர். 'சுற்றுச்சூழலைக் காப்பாற்ற அரசு இருக்கிறது. அமைச்சர் இருக்கிறார். இவர்கள் யார் தடுக்க?' என்கிறார் கி.வீரமணி.

பேனா சின்னத்தால் மீனவர்களுக்குப் பாதிப்பா?
அவரைத் தொடர்ந்து அகில இந்திய மீனவ சங்கத் தலைவர் மகேஷ், சின்னம் வைப்பதை ஆதரித்துள்ளார். மகேஷிடம் நாம் பேசினோம். அவர், "கலைஞருக்கு ஒரு நினைவுத் தூண் அமைப்பதில் எங்களுக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் கிடையாது.
அதேவேளையில் இந்த நினைவுத் தூண் அமைப்பதால் மீனவ தொழில் பாதிக்கப்படுமா என்றும் நாங்கள் சில விளக்கங்களைக் கேட்டிருந்தோம். அதற்கு அரசுத் தரப்பில் அறிவியல்ரீதியான விளக்கம் கொடுக்கப்பட்டது. அதை முழுவதுமாக கேட்ட பிறகே, சின்னத்தை அமைப்பதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம்.
மீனவ மக்கள் நிரம்பிய பகுதி இந்த மெரினா கடற்கரை. அந்த மீனவ மக்களுக்குத் தொடர்பில்லாத ஒரு தலைவரைக் கொண்டுவந்து சிலையாக அமைத்தால் நாங்கள் கட்டாயம் எதிர்ப்புத் தெரிவித்திருப்போம். ஆனால், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் மீனவ மக்களைப் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்டது. அதை நிறைவேற்றித் தந்தவர் அவர்தான்.
இந்த நினைவுச் சின்னம், கடலில் பாறைகளைக் கொட்டி, தடுப்பு அமைத்து அதன் மீது அமைக்க முயன்று இருந்தால், நாங்கள் அதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டோம். இப்படித் தடுப்பு போட்டால் கடற்கரையில் புதிய மணல் பரப்பு ஏற்படும். அதே வேளையில் மற்றொரு கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கடலின் இயல்புத் தன்மை நிச்சயம் பாதிக்கப்படும்.
ஆனால், இந்த நினைவிடம் வெறும் தூண்கள் மட்டுமே அமைத்து நிறுவ உள்ளார்கள். தூண்கள் அமைப்பதால், கடலின் ஓட்டத்தை அது பாதிக்காது. மணல் அரிப்பு ஏற்படாது. துறைமுகம் அமைக்கப்பட்ட போது ஏற்பட்டது மாதிரியான பழைய பாதிப்புகள் இருக்கவே இருக்காது என அரசு விளக்கப்பட்டம் மூலம் எங்களுக்குப் புரியவைத்தது. அதை ஏற்றுக் கொண்ட பிறகே ஒப்புதல் அளித்துள்ளோம்.

தமிழ்நாடு அரசு கொடுத்த அறிவியல் விளக்கம்:
இச்சின்னம் பாலம் போன்றுதான் அமைக்கப்பட உள்ளது. 50 மீட்டர் இடைவெளிக்கு ஒரு தூண் போடப்பட்டு, அதன் மீதே பேனா நிறுவப்படுகிறது. கடல் நீர் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில்தான் சின்னம் வர உள்ளது. இதில் எந்தப் பாதிப்பும் மீனவ மக்களுக்கு இல்லை.
இந்தப் பகுதியில் ஃபைபர் படகுகளைத்தான் மீனவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே இந்தத் தூண்களால் பாதிப்பு வரவே வராது. அதை அரசு தெளிவாக விளக்கியுள்ளது.
அப்போது பாதிப்பே இல்லையா என்றால், இருக்கிறது. என்ன மாதிரியான பாதிப்பு என்றால் தற்காலிக பாதிப்புகள் வரக்கூடும். இந்தச் சின்னத்திற்காகத் தூண்கள் அமைக்கப்படும் காலத்தில் கடற்கரையில் துளைகள் போடுவார்கள். அந்தத் துளைகளால் சேறும், சகதியும் மண்டும்.
இந்த மெரினா கடற்கரை பகுதியில்தான் இறால் தனது இனப்பெருக்கத்தைச் செய்கிறது. ஏனெனில், இங்குதான் ஆற்றுநீரானது கடலுடன் கலக்கிறது. அங்குதான் இறால்கள் இனப்பெருக்கத்தைச் செய்யும். அதேபோல சில மீன் இனங்களும் செய்கின்றன. அப்படிச் செய்யும் போது கூடவே கட்டுமானமும் நடைபெறும். அதனால் சில பாதிப்புகள் வரும் எனக் கணித்துள்ளோம். அதைத் தடுக்கும் வழிமுறைகளை அரசிடம் கேட்டோம். அதற்குத் தீர்வு கூறி இருக்கிறார்கள்.

சீமானுக்குச் சவால் விடும் மீனவத் தலைவர் மகேஷ்:
மேலும் இந்த பாதிப்பு நிரந்தரம் அல்ல; தூண்கள் அமைக்கப்படும் வரை மட்டுமே. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதி சகஜமாக மாறிவிடும். மெரினா கழிமுக பகுதியில் போக்குவரத்துக்காகப் பாலம் அமைத்துள்ளோம். அப்போது சில பாதிப்புகள் இருந்தன. அந்த வேலைகள் முடிந்ததும் நிலைமை சகஜமாகி விட்டது. அதைப் போல இந்த நிலைமையும் காலப்போக்கில் சீராகிவிடும்.
அதேபோல அரசிடம் நாங்கள் இந்தச் சின்னம் நிறுவப்பட்டால், அப்பகுதியில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கக் கூடாது என வாக்குறுதி அளிக்குமாறு கேட்டோம். அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். கட்டாயம் அந்தப் பகுதியில் வழக்கம் போல மீன் பிடிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
இந்தக் கடல் பகுதியைப் பற்றி அதிகம் அறிந்தவர்கள் மீனவ மக்களான நாங்கள்தான். எங்களுக்குத் தெரியாமல், சீமான் இந்தப் பகுதியில் பவளப் பாறைகள் இருக்கின்றன என்கிறார். நாங்கள் அரசுடன் கலந்துரையாடிய பின்னால்தான் திட்டத்தை அனுமதித்திருக்கிறோம். ஆனால், யாரையும் சந்திக்காமல், கலந்துரையாடாமல் சீமான் தவறான தகவலைப் பரப்புகிறார்.
இந்தக் கடல் பகுதியில் பவளப் பாறைகள் எங்கே இருக்கிறது என்று அவர் காட்ட வேண்டும். முதலில் இந்தக் கடலில் பாறைகளாவது இருக்கிறதா எனச் சீமான் விளக்க வேண்டும். இங்குப் பவளப்பாறைகள் இருப்பதைச் சீமான், நிரூபிக்க வேண்டும். சவால் விட்டு சொல்கிறேன் அவர் நிரூபிக்க முடியுமா? ஒரு இடத்தில் மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா?" என்கிறார் மகேஷ்.

சிங்காரவேலனுக்கு அரசு சார்பில் புதிய சிலை:
இந்தக் கடற்கரை பகுதியானது மீனவர்களுக்குச் சொந்தமானது. அந்த மீனவ மக்களின் தலைவராக விளங்கிய சிங்கார வேலர் வாழ்ந்த பகுதிதான் இப்போது உள்ள விவேகானந்தர் நினைவு இல்லம் உள்ள பகுதி. அதை ஒட்டிய பகுதியில்தான் சிங்காரவேலரின் மூதாதையர்களின் கல்லறை உள்ளது.
ஆகவே அதை எடுத்துக் கூறும்வகையில் இந்தப் பகுதியில் அவரது சிலையை நிறுவ வேண்டும் என்றும் இப்பகுதிக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் அரசிடம் மீனவ சங்கங்கள் சார்பில் மகேஷ் முறையிட்டுள்ளார். அதற்கு அமைச்சர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதைப்போல மீன்பிடி உரிமைக்கும் அரசாணை போட்டுத் தரக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில அடிப்படையான கோரிக்கைகள் முன்வைத்து அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்பே பேனா சின்னத்தை மீனவ மக்கள் வைக்க அனுமதித்துள்ளனர்.
கடலில் சிவாஜிக்கு மட்டும் சிலை வைத்தது ஏன்?
இவரைத் தொடர்ந்து பேனா சின்னத்தை ஆதரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அவர், "அப்படி எந்தப் பாதிப்பும் வராது. அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் கூட மும்பையில் கடல் நடுவே சிவாஜி சிலையை வைப்பதற்கான வேலைகளை மகாராஷ்டிரா அரசு மேற்கொண்டுள்ளதைப் பலரும் அறிவார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆராய்ந்து முதல் கட்ட அனுமதி கொடுக்கவேண்டிய துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆகவே கலைஞரின் பேனாவை வைக்கும் பணி முறையாக அனுமதிப் பெற்றே தொடங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படும் என்ற ஆயுதத்தைக் கலைஞருக்கு எதிராகப் பயன்படுத்துவதும் இது புதியதல்ல; ஏற்கெனவே 2 ஆயிரம் கோடி நிதியில் தொடங்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை இப்படித்தான் முடக்கினார்கள். வெறும் 23 கி.மீட்டர் பணிகள் மட்டுமே மீதம் இருந்த சமயத்தில் அது நிறுத்தப்பட்டது.

பாசாங்குத்தனமான வாதத்தில் உண்மை இல்லை:
எனது கேள்வி மிகமிக எளிதானது. சுற்றுச்சூழல் பாதிக்கும் என அரசின் திட்டங்களைத் தடுப்பவர்கள் இதுவரை சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு என்ன செய்தார்கள் என்றுதான் நான் கேட்க வருகிறேன். இவர்கள் கூறும் குற்றச்சாட்டு உள்நோக்கத்துடன் சொல்லப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற படி கலைஞரின் பேனா சிலை அமையாது. ஏனெனில், அரசாங்கத்திற்கு நம்மைவிட மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. சுற்றுச்சூழலைக் காப்பாற்றத் தனியாக ஒரு அமைச்சரே இருக்கிறார். அப்படி ஒரு பாதிப்பு வந்தால் அது அரசாங்கத்திற்குத்தான் கெட்ட பெயர். ஆகவே அரசு கவனமாகச் செயல்படும் என்பது உறுதி. எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் வாதம் பாசாங்குத்தனமானது. அதில் துளியும் உண்மை இல்லை" என்கிறார்

வீட்டின் முன்னால் பேனா சிலை வைத்த மனிதர்:
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள லியோ இல்லத்தின் உரிமையாளர் தனது சொந்த செலவில் கலைஞருக்குப் பேனா சிலை அமைத்துள்ளார். அந்தச் சிலை அருகே 'தலைவரே உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்து எழுதுகோலாய் மாறிட ஆசை' என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார். அந்தப் படம் இப்போது வைரலாக மாறி வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் லியோ கோபால்.
இது குறித்து கோபால், "கலைஞரின் பேனாவால் பலனடைந்தவர்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளனர். அந்தளவுக்குத் தமிழ்நாட்டின் நவீன சிற்பியாக இருந்து பல திட்டங்களை வடித்துக் கொடுத்துள்ளார். அவரைப் பலரும் வெவ்வேறு வகையில் பாராட்டி வருகின்றன. அதில் ஒருவகைதான் இந்தப் பேனா சின்னம்" என்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications