நேரடியாக இறங்கிய முதல்வர்! “தந்திரம்”.. பதிலடி! மரபை மீறியது அவர்தானா? ஆளுநர் vs திமுக மோதல் உச்சம்!
சென்னை : இந்த உரையை வாசிக்க மாட்டேன், மாற்றுங்கள் என மாநில அரசிடம் சொல்ல ஆளுநருக்கு உரிமை இருக்கிறது ஆனால், அந்த உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதன்படி படிக்காமல் சட்டப்பேரவையில் வந்து மாற்றிப் படிப்பது, படிக்காமல் விடுவது என்பதெல்லாம் தந்திரமாகச் செய்யும் அயோக்கியத்தனம் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது பெயர்களை தவிர்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது, அவர் ஒப்புதல் அளித்து அச்சடிக்கப்பட்ட உரையையே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் வாசித்துக் கொண்டிருந்தபோது அவையில் இருந்து பாதியிலே ஆளுநர் வெளியேறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் தனது உரையில் சில வார்த்தைகளை வாசிக்காமல் விட்டது பற்றியும், பாதியிலேயே அவையில் இருந்து வெளியேறியது பற்றியும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டி வருமாறு:

ஆளுநர் செயல்பாடுகளின் தொடர்ச்சி
கேள்வி : மாநிலத்தின் ஆளுநர் சட்டமன்றத்தை புறக்கணித்துவிட்டுச் செல்லும் அபூர்வமான நிகழ்வு தற்போது நடைபெற்றுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : சட்டமன்றத்தில் இப்போது நடந்த நிகழ்வுகளை தனியாகப் பார்க்க முடியாது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆளுநரின் செயல்பாடுகளின் தொடர்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டும். ஆளுநர் ரவி சமீபகாலமாக சஎச்சைக்குரிய பல விஷயங்களைப் பேசி வருகிறார். இந்தியா ஒரே மதத்தைச் சார்ந்தது, திராவிடம் என்ற சொல் ஆங்கிலேயர்களால் வந்தது, திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி, ஜி.யு.போப் திருக்குறளை சரியாக மொழிபெயர்க்கவில்லை, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியானது, திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என இப்படி பல விஷயங்களை பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி. அதன் தொடர்ச்சியாகவே சட்டமன்றத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது மரபு. அவர் பேசுவது அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தப்பட்டது. அரசு வழங்கும் உரையைத்தான் ஆளுநர்கள் படிப்பார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும், மத்திய அரசு தயார் செய்யும் உரையையே குடியரசுத் தலைவர் படிப்பார். அதை மாற்றினால் சிக்கல் ஏற்படும்.

திராவிட கசப்பு - 7ஆம் தேதியே ஒப்புதல்
கேள்வி : ஆளுநர் ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. முதல் முறையாக பேரவைக்குள் மோதல் வெடித்திருக்கிறது. சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில் அரசு வழங்கிய உரையில் வார்த்தைகளை நீக்கி இருக்கும் ஆளுநரின் போக்கை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : ஆளுநர் ரவிக்கு அடிப்படையிலேயே திராவிட இயக்கங்களைப் பிடிக்கவில்லை. பெரியார், அண்ணா என்ற பெயர்கள் கசப்பாக இருக்கிறது. திமுக ஆட்சியும், அவர்கள் சொல்லும் திராவிட மாடலும் ஆளுநருக்கு கசப்பாக இருக்கிறது. அதைப் பற்றி வெளிப்படையாக வெளி நிகழ்ச்சிகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநருக்கு அரசு, ஆளுநர் உரையை தயார் செய்து 5ஆம் தேதியே அனுப்பி இருக்கிறது, 7ஆம் தேதி அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகுதான் அது அச்சடிக்கப்பட்டு, டிஜிட்டலாகவும் பதிவேற்றப்பட்டுள்ளது. உண்மையிலேயே, ஆளுநருக்கு பிடிக்காத விஷயங்கள் இந்த உரையில் இருக்கிறது என்று நினைத்தார் என்றால் அதற்கு அப்போதே ஒப்புதல் அளித்திருக்கக் கூடாது. இந்த உரையை ஏற்றுக் கொள்ள மாட்டேன், இதையெல்லாம் மாற்றுங்கள் என்று சொல்லி இருக்கலாம். ஆனால், அப்படி சொன்னதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. தமிழக அரசு தரப்பும் ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவே கூறியுள்ளது. இனி ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் வந்தாலும் வரலாம்.

ஆளுநரின் சுயரூபம்
உரைக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, சட்டப்பேரவையில் படிக்கும்போது அண்ணா, பெரியார் உள்ளிட்டோரின் பெயர்களையும், திராவிட மாடல் என்பதையும் வாசிக்காமல் விட்டுள்ளார். அயலக தமிழர்களின் நாளை விவேகானந்தரின் பிறந்தநாளோடு லிங்க் செய்கிறார். ஆனால், இதெல்லாம் அரசு தயார் செய்து அனுப்பிய உரையில் இல்லவே இல்லை. ஆளுநருக்கு பிடிக்காத விஷயங்களை விட்டுவிட்டு, தனக்கு தோதான விஷயங்களை சேர்த்திருக்கிறார். இப்போதுதான் உங்கள் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. திமுக அரசு செய்யும் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை என நேரடியான மோதலுக்கு ஆளுநர் தயார் ஆவதைத்தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இதுவரை வெளியில் கருத்துகளைத் தெரிவித்து வந்த ஆளுநர், இப்போது சட்டமன்றத்தில் நேரடியான மோதலுக்கு தயாராகிவிட்டார். அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் போன்ற மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கிறார், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததோடு ஆன்லைன் ரம்மி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்துப் பேசுகிறார். அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்.

அயோக்கியத்தனம்
கேள்வி : ஆளுநர் உரையை தயார் செய்வது அரசாக இருந்தாலும், அதைத்தான் வாசிக்க வேண்டும் என்று விதி ஏதும் இல்லையே.. பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மரபு அவ்வளவுதானே..
பதில் : இதைத்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கிடையாது, மரபு. ஜனநாயக ஆட்சி முறையில் மரபுகள், புரோட்டோகால்கள் முக்கியமாக கடைபிடிக்கப்பட வேண்டியவை. இதையெல்லாம் உரையாற்ற மாட்டேன் என்றால் அப்போதே நீக்குமாறு சொல்லியிருக்கலாமே. அந்த உரைக்கு ஏன் ஒப்புதல் அளித்தார்? வரைவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு, அதைப் படிக்காமல் போவது ஏமாற்றும் வேலை. திமுக அரசை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றும் செயல். ஒப்புதல் அளிப்பது போல் ஒப்புதல் அளித்துவிட்டு, அவையில் வந்து மாற்றிப் படிப்பது, படிக்காமல் விடுவது என்பதெல்லாம் தந்திரமாகச் செய்யும் அயோக்கியத்தனமான வேலை. இதுபோல நேர்மையற்ற ஒருவர் அரசியல் சாசன பொறுப்பில் இருக்கவே கூடாது. நேர்மையாக இருந்திருந்தால் இந்த உரையை நான் படிக்கமாட்டேன் எனச் சொல்லிவிட்டுப் போகலாம். அதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒப்புதலும் அளித்துவிட்டு, அதனை சட்டப்பேரவையில் வாசிக்க மாட்டேன் என்றால் யாரை ஏமாற்றுகிறீர்கள்? நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு இது அழகா?

முதல்வரின் கடமை
முதலமைச்சருக்கு வேறு வழியில்லை. ஆளுநர் இருக்கும்போதே வருத்தம் தெரிவித்து ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார். எதை ஆளுநர் ஒப்புதல் செய்தாரோ அந்த உரை தான் அவைக்குறிப்பில் ஏறும் என்று சொல்கிறார். அப்போதே ஆளுநர் எழுந்து வெளிநடப்பு செய்கிறார். இதுபோன்ற வரலாறே கிடையாது. தேசிய கீதம் பாடிய பிறகுதான் செல்ல வேண்டும். கட்சிகள் வெளிநடப்பு செய்வதைப் பார்த்திருக்கிறோம். இன்று ஆளுநரே வெளிநடப்பு செய்திருக்கிறார். நீங்கள் செய்த காரியத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் எதிர்வினை ஆற்ற வேண்டியது அவரது கடமை. அவர் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள். ஆளுநர் மரபை மீறி நடந்திருக்கிறார், முதல்வர் பார்த்துக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார், பாஜகவோடு கூட்டணி சேர்ந்துவிட்டார் எனப் பேசத் தொடங்கி விடுவார்கள். அதனால் தான் உடனடியாக கண்டிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ஸ்டாலின் கெத்து
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பேசினார்கள். ஆனால், அதெல்லாம் சட்டப்பேரவைக்கு வெளியே நடந்தது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை, அப்படி இதுவரை பேசவில்லை. ஆனால், ஆளுநர் சட்டப்பேரவைக்குள்ளேயே இப்படி நடந்துகொள்ளும்போது, முதலமைச்சர் இதற்கு பதில் கொடுக்காமல் இருந்தால் அது அவர் பலவீனமாக இருப்பதாகவே கருதப்படும், மரபுக்கு மீறிய செயலை செய்த ஆளுநரை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாகி விடும். அதனால், ஆளுநர் வாசித்த உரைக்கு எதிராக தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதை விரும்பாமல் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். வெளிநடப்பு செய்ததன் மூலமாக தேசிய கீதத்தை அவமதித்துள்ளார். ஆளுநர் வெளிநடப்பு செய்துவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலின் கெத்து காட்டிவிட்டார்.

பாஜக vs திமுக
கேள்வி : இதுவரை வெளியில் இருந்து வந்த மோதல், சட்டப்பேரவைக்குள்ளேயே வெளிப்படையாக வெடித்திருக்கிறது. ஆளுநர் vs தமிழ்நாடு அரசு மோதல் என எடுத்துக் கொள்ளலாமா, அல்லது ஆளுநர் பாஜகவின் பிரதிநிதி என விமர்சிக்கப்படுவதால், பாஜக vs திமுக மோதல் என்று எடுத்துக் கொள்ளலாமா? ஏனெனில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ஆளுநர், வாரிசு அரசியல் பற்றியெல்லாம் பேசிவிடக் கூடாது என்பதற்காக திமுக அரசு ஆளுநரை அவமதித்துவிட்டது என்று பேசி இருக்கிறார்..
பதில் : சட்டப்பேரவைக்குள் வந்த பிறகு, அரசியல் சாசன பதவி வகிப்பவர், கட்சியை விமர்சித்துப் பேசுவதெல்லாம் கூடாது. அதையெல்லாம் ஆளுநர் பேசமுடியாது, எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். பாஜக Proxy மூலமாக திமுக அரசு மோதுகிறது. கிட்டத்தட்ட இந்த மோதல் எல்லை வகுக்கப்பட்டது. முன்பு, முதலமைச்சர் நேரடியாக ஆளுநரை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால், இப்போது முதலமைச்சரே நேரடியாக களத்திற்குள் வந்துவிட்டார். மரபை மீறி ஆளுநர், அரசின் உரையை சின்னாபின்னப்படுத்தும்போது முதல்வர் தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். ஆளுநர் மரபை மீறுவதால், முதலமைச்சரும், மரபை மீறும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார். இவ்வளவு நாள் ஆளுநர் வெளியில் திமுகவின் கொள்கைகளுக்கு எதிராக என்னவெல்லாமோ பேசி இருக்கிறார்கள். அதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றவில்லையே.. கட்சி சார்பாக நிர்வாகிகள் எதிர்வினை ஆற்றி இருக்கிறார்கள்.

நேரடி மோதல்?
ஆனால், இப்போது சட்டமன்றத்திலேயே செய்யும்போது அதனை பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் சும்மா இருக்க முடியாது. ஆளுநர் முதலில் மரபை மீறியதால், முதல்வரும் மரபை மீறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு, தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். திமுக அரசை சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்று இதுவரை வெளியில் இருந்து பேசிக் கொண்டிருந்தார். இப்போது சபைக்குள்ளேயே வந்து பேசிவிட்டார். இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் நேரடியான ஒரு மோதல் வந்துவிட்டது. மத்தியில் ஆளும் பாஜக, நேரடியாக வந்து திமுகவோடு மோதுவதற்குப் பதிலாக, ஆளுநர் மூலமாக ஒரு மோதலை உருவாக்கி இருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications