சந்திரயான் 3.. இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இதை கவனிச்சீங்களா? ஆஹா! இந்தியாவை வியந்து பார்த்த உலகம்!
சென்னை: சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இன்று காணப்பட்ட காட்சி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
நிலாவை ஆராய்ச்சி செய்யும் திட்டம்தான் இந்தியாவின் சந்திரயான் திட்டம். இந்த திட்டத்தின் முதல் பகுதி சந்திரயான் 1 மூலம் நிலவில் இருக்கும் நீரை இந்தியா கண்டுபிடித்தது. அதன்பின் சந்திரயான் 2 திட்டத்தை இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது.

நிலவை ஆய்வு செய்யும் பொருட்டு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. ஜூலை 22, 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன்பின்னர்தான் நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தொடர்ந்து நிலவில் ஆய்வு செய்யும் முடிவை கைவிடாமல் சந்திரயான் 3 திட்டத்தை நிலவிற்கு இந்தியா அனுப்பியது.
இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கும் 2 திட்டத்திற்கும் இடையில் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆர்பிட்டர் இல்லை: சந்திரயான்-2வில் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை இருந்தது. அதேசமயம் சந்திரயான்-3 ஆர்பிட்டர் இல்லை. இதில் ஒரு லேண்டர்(LM), ப்ராபல்ஷன் மாட்யூல் (PM) மற்றும் ஒரு ரோவர் ஆகியவை உள்ளது.
இதில் சந்திரயான் 2 ஆர்பிட்டர் என்பது நிலவை சுற்றி ஆய்வு செய்யும். ஆனால் சந்திரயான் 3ல் ப்ரோபல்ஷன் மாடுல் அப்படி இல்லை. இது சந்திராயன் ராக்கெட்டின் தலை பகுதியில் இருக்கும் மொத்த அமைப்பில் கீழ் உள்ள பகுதி ஆகும். சந்திராயன் 3 பூமி வட்டப்பாதையில் நிறுத்தப்பட்ட பின் அதை நிலவை நோக்கி கொண்டு செல்ல அவ்வப்போது பாதை மாற்ற பயன்படும் சிறிய எஞ்சின்தான் இந்த ப்ரோபல்ஷன் மாடுல்.

இணைப்பு: இப்போது சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் இன்னும் செயலில்தான் உள்ளது. 4 வருடமாக இது இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இதனுடன்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் இணைப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் இன்னும் சற்று நேரத்தில் நிலவில் தரையிறங்க உள்ளது.
இதற்கான செயல்பாடுகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் தொடங்கி உள்ளது. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இன்று காணப்பட்ட காட்சி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
அதன்படியே அறையில் அதிக அளவில் பெண் என்ஜினியர்கள் அமர்ந்து இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. சாதாரண எளிமையான புடவையில், பெரிய ஆர்ப்பாட்டம் இன்றி பெண்என்ஜினியர்கள் அமர்ந்து இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது போன்ற பெரிய மேடையில் பெண்கள் பலர் பங்கேற்று இருப்பது இந்தியாவின் பாலின சமத்துவத்துவதையும், பெண்களின் முன்னேற்றத்தையும் உலக நாடுகளுக்கு முன்னிறுத்துவதாக உள்ளது.
பாதிக்கு பாதி பெண்கள் அங்கே அமர்ந்து இருந்த காட்சி பெண்களின் அறிவியல் ரீதியான முன்னேற்றத்தை உணர்த்தும் விதமாக அமைந்து உள்ளது. முக்கியமாக உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா குறித்த புதிய இமேஜை கொடுக்கும் காட்சியாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications