சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜய் மக்கள் இயக்கம் கேட்ட ஆட்டோ சின்னம்.. பின்னணி என்ன?.. இதுதான் வியூகமா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோ சின்னத்தை கேட்டதன் பின்னணி என்ன தெரியுமா?

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியோ வைரஸ் பற்றி பீதி வேண்டாம்.. மக்களே பாதுகாப்பாக இருக்க இதை மட்டும் செய்யுங்கள்- மா.சுப்பிரமணியன்.

மறைமுக தேர்தல்

மறைமுக தேர்தல்

பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு உறுப்பினர்கள் மேயர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்ய உள்ளனர்.

129 இடங்களில் வெற்றி

129 இடங்களில் வெற்றி

கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் 129 பேர் வென்றனர். அதே போல் இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடவுள்ளார்கள். இந்த தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநில தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

தேர்தல் ஆணையத்தில் மறுப்பு

தேர்தல் ஆணையத்தில் மறுப்பு

எனினும் கட்சியோ அமைப்போ தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் ஆட்டோ சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் ஆட்டோ சின்னத்தை விஜய் ரசிகர்கள் விரும்பியதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று ஆட்டோ பேமஸானது, இன்னொன்று வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆட்டோ டிரைவராக நடித்தது.

பாட்ஷா படம்

பாட்ஷா படம்

பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது ஆட்டோவில் உன் வாழ்க்கை உன் கையில் என எழுதியிருந்தார். இதையடுத்து அந்த படம் வெளியானதை அடுத்து இந்த வாசகத்தை ஆட்டோ ஓட்டுநர்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆட்டோவிலும் எழுதினர். இந்த திரைப்படத்தில் ஆட்டோ மிகவும் பிரபலமானது.

வாழு வாழவிடு

வாழு வாழவிடு

ரஜினி தொடங்கவிருந்த கட்சிக்கு ஆட்டோ சின்னத்தையோ அல்லது பாபா முத்திரையையோ சின்னமாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கட்சியை ரஜினி தொடங்கவில்லை. மேலும் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அவர் ஆட்டோ டிரைவராக இருந்து பெரிய ஐபிஎஸ் அதிகாரியாகும் கனவில் இருப்பார். அந்த ஆட்டோவில் வாழு வாழவிடு என எழுதியிருந்தது.

மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு

மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு

இந்த படம் வெளியானவுடன் வாழு வாழவிடு என ஆட்டோவில் ரசிகர்கள் இடம் பெற செய்தனர். எனவே ஆட்டோ சின்னத்தை வைத்தால் எளிதில் ரஜினி ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் வாழு வாழ விடு என்பதால் அஜித் ரசிகர்களையும் கவர் செய்யலாம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் கணக்கு போட்டிருந்தனர். ஆனால் அந்த கணக்கு தற்போது தப்புக் கணக்காகிவிட்டது.

English summary
Why Vijay Makkal Iyakkam is asking Auto symbol to contest in Urban local body election 2022?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X