எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டது ஏன்?
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக. மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட உள்ளது . இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உலகதரத்திற்கு மாறுகிறது. நூறு ஆண்டு பாரம்பரியமிக்க எழும்பூர் ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் நவீன கட்டிடக்கலை வடிவமைப்புடன் மாற்றப்பட்டு வருகிறது . இதற்காக மத்திய அரசு ரூ.842 கோடி ஒதுக்கியுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பல்வேறு அதிநவீன வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக ரயில் நிலையத்தில் புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு மற்றும் பிற அதிநவீன வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஒவ்வொரு ரயில் தண்டவாளங்களிலும் வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடைமேம்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. .

முதல் கட்டமாக நடைமேடை 1 முதல் 5 வரையில் 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சில தாம்பரம் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
எனவே சென்னை எழும்பூரில் உள்ள நேற்று முதல் நடைமேடை 1 முதல் 5 வரையில் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த ரயில்வே மேம்பாட்டு பணிகள் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், 'மறுசீரமைப்பு பணி காரணமாக தற்போது நடைமேடை 1 முதல் 5-வரை உள்ள தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் பயணிகள் கவனிக்க வேண்டியவை. இன்று, எக்ஸ்பிரஸ் ரயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகிறது. மின்சார ரயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படுகிறது. எனவே மின்சார ரயில் தொடர்பான பிரச்சனைகள் இந்த முறை இருக்காது.
இப்போது நடந்து வரும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். அப்போது சில ரயில் சேவைகள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. அப்போது 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்வோம் . அந்த நேரத்தில் மட்டும் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும்' என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
