சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

27, 28, 29, 30 தேதிகளில் நனைகிறது தமிழகம்.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எங்கேன்னு பாருங்க

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள பல ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கான அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்தவகையில், நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையில், "தமிழகத்திற்கு மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு! பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!

 அரியலூர்

அரியலூர்

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்யும் வாய்ப்பு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருக்கிறது. சுற்றியுள்ள இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அறிவித்திருந்தது.

 27, 28, 29, 30 தேதிகள்

27, 28, 29, 30 தேதிகள்

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மற்றொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

27-ம் தேதி அதாவது இன்றிலிருந்து, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், நாளை 28-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 சென்னை

சென்னை

நாளை மறுநாள் 29-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 30-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மீனம்பாக்கம்

மீனம்பாக்கம்

இதனிடையே நேற்று முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.. எழும்பூர், சென்ட்ரல், கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை பெரம்பூர், மீனம்பாக்கம்,சௌகாரபேட்டை, கொரட்டூர், அம்பத்தூர், அனகாபுத்துர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.. கடந்த 3 நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் தமிழக அணைகள் மளமளவென நிரம்பி வருகின்றன.. அந்தவகையில், கிருஷ்ணகிரி-மாவட்டத்தில் கடந்த, 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

English summary
Widespread rain in various parts of Chennai and rain chance in tamilnadu next four days தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X