“விளையாட்டு முக்கியம் பிகிலு”.. அரசு பள்ளிகளில் 1,625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், 297 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: கடந்த 2023-2024 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது,'உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன் விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு கலைத் திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Physical Education

இந்த அறிவிப்பில், 'உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து அரசு பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்' என்ற பகுதியை செயல்படுத்தப்படும் பொருட்டு பள்ளிக் கல்வி இயக்குநரின் தொகுப்பிலிருந்து 275 பட்டதாரி ஆசிரியர், 34 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 555 பட்டதாரி ஆசிரியர், 800 தூய்மைப் பணியாளர் பணியிடங்களை அரசு சரண் செய்து அப்பணியிடங்களுக்கு ஈடாக அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும், 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்க முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் டிஆர்பி அறிவிக்கும்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமன முறையிலும், 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களை பதவி உயர்வு மூலமாகவும் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

உடற்கல்வி ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

கல்வித்தகுதி

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1 பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆசிரியர் பணி நியமன விதிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் அரசிதழில் வெளியிட்ட அரசாணைகளின்படி, உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு உடற்கல்வியில் 2 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு (சிபிஎட்) அல்லது டிப்ளமோ (டிபிஎட்) அல்லது ஹையர் கிரேடு பெற்றிருக்க வேண்டும்.

முன்பு நடைமுறையில் இருந்து வந்ததைப் போல, பிபிஎட் மற்றும் பிபிஎஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு இனிமேல் விண்ணப்பிக்க இயலாது. எனவே, உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களை 100 சதவீதம் பதவி உயர்வு மூலமாக நிரப்புவதற்குப் பதிலாக 50 சதவீத இடங்களை மட்டும் பதவி உயர்வு வாயிலாகவும், எஞ்சிய 50 சதவீத பணியிடங்களை பிபிஎட், பிபிஎஸ் பட்டதாரிகளைக் கொண்டு நேரடி நியமன முறையிலும் நிரப்ப வேண்டும் என்று பிபிஎட், பிபிஎஸ் பட்டதாரிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிக்கு எம்பிஎட் பட்டப்படிப்பு வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+