சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'கல்வான் மோதலில்.. எனது கணவர் உயிரிழந்த போது ரொம்ப பயமாக இருந்தது. ஆனால்.. ' நெகிழ்ந்த மனைவி வானதி

Google Oneindia Tamil News

சென்னை: கல்வான் மோதலில் தனது கணவர் வீர மரணம் அடைந்த போது மிகவும் பயந்ததாகக் குறிப்பிட்ட அவரது மனைவி வானதி, அதன் பிறகு பொதுமக்கள் தனக்கு அளித்த ஆதரவு மிகப் பெரிய நம்பிக்கை அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு முதலே எல்லையில் தொடர்ந்து மோதல் போக்கி நிலவி வருகிறது. முதலில் எல்லையில் சீனா வீரர்களைக் குவிக்கத் தொடங்கியது.

புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது வீரர்களைக் குவித்தன. இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான ஒரு சூழல் உருவானது.

கல்வான் மோதல்

கல்வான் மோதல்

இந்தச் சூழலில் தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சீனா அமைந்திருந்த கூடாரத்தை அகற்றும்போது இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல சீனாவை சேர்ந்த 10 வீரர்கள் வரை இதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக வீரர் வீர மரணம்

தமிழக வீரர் வீர மரணம்

இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி என்பவரும் வீரமரணம் அடைந்திருந்தார். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கணபதி சுப்பிரமணியம் என்பவர் வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினருக்கு ஒரு கிரவுண்ட் வீட்டுமனையை வழங்கினார். தமிழக பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் உயிரிழந்த ஹவில்தார் பழனியின் மனைவி வானதியிடம் வீட்டுமனை வழங்கப்பட்டது.

சிலை வைக்கக் கோரிக்கை

சிலை வைக்கக் கோரிக்கை

இந்த நிகழ்ச்சியில் பேசிய வானதி தனது கணவர் பழனியின் உருவச்சிலையைச் சீதக்காதி ஸ்டேடியத்தில் வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் உட்புகுத்தாமல் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் வீரமரணம் அடைந்த பழனியின் உருவச்சிலையைச் சீதக்காதி ஸ்டேடியத்தில் வைக்காமல் ஓய மாட்டோம் என உறுதி அளித்தார்.

அப்போது பயந்தேன்

அப்போது பயந்தேன்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவி வானதி, "மோதலில் வீர மரணம் அடைந்த எனது கணவர் என்னை ஒன்றும் தனியாக விட்டுச் செல்லவில்லை. எனக்கு ஆதரவாக இப்போது பலரும் உள்ளனர். முன்பின் தெரியாத ஒருவர் சொந்த அப்பாவாகவும், அம்மாவாகவும் உடன் இருந்து ஆதரவு தருவது எல்லாம் மிகப் பெரிய செயல். முதலில் அவர் உயிரிழந்த போது, இந்த சமூகத்தில் தொடர்ந்து வாழ முடியுமா என்று எனக்குக் கேள்வி எழுந்தது. இதை நினைத்து நாம் ரொம்ப பயந்து போனேன். ஆனால் அதன் பிறகு எனக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பல்வேறு நல்ல விஷயங்களை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

மனைவி நெகிழ்ச்சி

மனைவி நெகிழ்ச்சி

ஆட்டோகாரர் கூட பழனி அண்ணன் குடும்பமாக நீங் காசு எதுவும் வேண்டாமென்று இலவசமாக இறக்கி விடுகிறார்கள். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் எனது கணவர் இருந்தால் என்ன பாதுகாப்பு, அரவணைப்பு கொடுப்பாரோ அதையே இந்த மக்கள் இப்போது எங்களுக்கு அளிக்கிறார்கள் இந்த நேரத்தில் வீட்டுமனை அளித்து எங்களுக்கு உதவியுள்ள கணபதி சுப்பிரமணியம் அப்பாவிற்கு ரொம்ப நன்றி கடன்பட்டிருக்கிறேன். இது நான் என் கணவருக்குக் கிடைத்த பெரிய மரியாதை. எனது மகன் இப்போதே ராணுவத்திற்குச் செல்ல வேண்டும் என ஆர்வமாக இருக்கிறான். இதேபோல தமிழ்நாட்டில் இருந்து பலரும் ராணுவத்திற்குச் செல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Tamil Nadu soldiers were killed in Galwan clash. latest updates of Galwan clash.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X