சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் முடியும் வரைதான் திமுகவுக்கு சாய்ஸ்.. மே 23க்கு பிறகு அதிமுக கை ஓங்கும்?.. பரபரக்கும் களம்

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள அதிமுக சில ஆப்ஷன்களை கையில் எடுக்கும் என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக ஆட்சிக்கு ஆபத்தா?.. திமுகவின் திட்டம் என்ன?- வீடியோ

    சென்னை: போற போக்கை பார்த்தால் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்றே தெரியவில்லை. அவ்வளவு வேலைகள் ஜரூராக திமுக பக்கம் நடந்து வருகிறது.

    ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையில் திமுக முழு வீச்சில் இறங்கிவிட்டதாகவும், இதற்காக கிட்டத்தட்ட 7 எம்எல்ஏக்களை விலை பேசிவிட்டதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

    ஆனால் அதிமுகவுக்கு இப்போதைக்கு கையில் உள்ள ஒரே அஸ்திரம் ஆட்சிதான்! இதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது!

    என்ன இருந்தாலும் ஜோயல்ராஜுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.. போஸ்ட் ஆபீஸையே சூறையாடிய பயங்கரம்! என்ன இருந்தாலும் ஜோயல்ராஜுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.. போஸ்ட் ஆபீஸையே சூறையாடிய பயங்கரம்!

    ஆட்சி தப்பும்

    ஆட்சி தப்பும்

    22 தொகுதி இடைத்தேர்தலின் முடிவு அதிமுகவுக்கு நல்லதாக அமைந்துவிட்டால் பிரச்சனையே இல்லை. ஒருவேளை பாதகமாக வந்துவிட்டால்??? அதனால் தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே 3 பேர் தகுதி நீக்கத்தை கையில் எடுத்தது. அப்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்தால் ஓரளவு ஆட்சி தப்பும்... கொஞ்ச காலம் நீடிக்கும்!

    குட்கா விவகாரம்

    குட்கா விவகாரம்

    இரண்டாவதாக, திமுகவின் 21 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய அதிமுக நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்றே தெரிகிறது. இதற்காக குட்கா வழக்கை தூசி தட்டி எடுக்கிறது.. குட்கா பொட்டலங்களை பேரவையில் பிரித்து காட்டிய திமுக எம்எல்ஏக்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்தால் அதிமுக அரசு இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று கணக்கு போடுகிறது.

    கருணாஸ்

    கருணாஸ்

    அதேபோல அதிமுக வசம் இன்னொரு துருப்பு சீட்டும் உள்ளது. அதுதான் கருணாஸ்! இவர் அரசுக்கு ஆதரவாக இருந்தாலும் கூட அரசுக்கு எதிர்பக்கம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருவதாக கூறப்படுகிறது. தினகரன் தரப்புடன் நெருக்கம் பாராட்டி வருவது ஒருபக்கம், திமுக பக்கம் போவது இன்னொரு பக்கம் என அரசுடன் இருப்பதாக காட்டிக் கொண்டே எல்லா பக்கமும் போய் வருபவர் கருணாஸ். தேவைப்பட்டால் இவரையும் தகுதி நீக்கம் செய்ய எடப்பாடி அரசு தயங்காது என்றே தெரிகிறது.

    பாஜக

    பாஜக

    எப்படி எப்படியோ, பாடுபட்டு திமுக முயற்சி செய்து, பெரும்பான்மையை நிரூபிக்க முயலுவதாகவே இருந்தாலும், இந்த விஷயத்தில் ஆளுநர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை. இதுவரை அவரிடம் இருந்து ஒரு சத்தத்தையும் காணோம்.

    ஆளுநர்

    ஆளுநர்

    அப்படி ஆளும் தரப்புக்கு ஆபத்து என்றால், அதை கண்டிப்பாக ஆளுநர் அதாவது பாஜக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது, ஏதாவது செய்து திமுகவின் திட்டத்தை முறியடிக்கும் என்றே தெரிகிறது. அதனால் இப்போதைக்கு மாநில அரசு கொஞ்சம் தெம்பாகத்தான் உள்ளது!

    English summary
    What are the options that CM Edapadi Palanisamy takes to protect the AIADMK Govt
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X