சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா? தேர்தல் ஆணையம் அதிரடி பதில்

Google Oneindia Tamil News

சென்னை: முன்கூட்டியே தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக ஏப்ரல் 3வது வாரத்தில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை வைத்திருந்தது. அத்துடன் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி உமேஷ் சின்ஹா தலைமையில் சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் சந்தேகம்.. தமிழகத்தில் 1088 பேர் தீவிர கண்காணிப்பு.. விஜயபாஸ்கர் தகவல்புதிய வகை கொரோனா வைரஸ் சந்தேகம்.. தமிழகத்தில் 1088 பேர் தீவிர கண்காணிப்பு.. விஜயபாஸ்கர் தகவல்

சட்டசபை தேர்தல்

சட்டசபை தேர்தல்

இந்த கூட்டத்தில் தமிழத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடந்தது. ஆலோசனைக்கு பின்னர் லோக்சபா தேர்தல், வாக்குப் பதிவு விவரங்கள் உள்ளிட்டவை அடங்கிய குறிப்பேடு வெளியிடப்பட்டது.

தேர்தல் அதிகாரி பதில்

தேர்தல் அதிகாரி பதில்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறுகையில், முன்கூட்டியே தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறுமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது. 80 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிக்கலாம்.

சாய்தள வசதி உறுதி

சாய்தள வசதி உறுதி

ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 பேருக்கு மேல் இல்லாதவாறு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடியில் சாய்வு தளம், கழிவறை மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்படுவார்கள்:

தீவிரமாக கண்காணிப்போம்

தீவிரமாக கண்காணிப்போம்

அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மரபுப்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும்: தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும்" என்று தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா கூறினார்.

English summary
Tamil Nadu Chief Electoral Officer Umesh Sinha has said that it is not possible to say at this time whether there will be an early assembly election in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X