முடிவு நெருங்கிடுச்சு.. ‘கிளைமாக்ஸ் இதுதான்’ - ஓபிஎஸ் எய்த அம்புகளை சமாளித்துக் கரையேறுவாரா ஈபிஎஸ்?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையேயான அதிகார மோதலின் உச்சக்காட்சி அரங்கேறும் நேரம் வந்துவிட்டது. இரு தரப்பினருமே கட்சியைக் கைப்பற்றுவதில் பல்வேறு பகீரத பிரயத்தனங்களைச் செய்து முடித்துள்ளனர்.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி, தனியாக பொதுக்குழுவையே கூட்டி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டே தூக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை அனைத்து பதவிகளுக்கும் நியமனம் செய்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இன்னும் போட்டிப் பொதுக்குழுவை நடத்தாவிட்டாலும், ஈபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவே செல்லாது என்கிற தீர்ப்பைப் பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஈபிஎஸ் கை ஓங்கிக் காணப்பட்ட சூழலில், சில நாட்களாக ஓபிஎஸ் கையும் ஓங்கி, இப்போது கிட்டத்தட்ட யாருக்கு பலம் என்கிற சமநிலை போட்டியாக வந்து நிற்கிறது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். அதன்படி, ஈபிஎஸ் பொதுக்குழுவை நடத்தி, இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

நீதிபதி மாற்றம்
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி கிருஷணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் முறையிட்டனர்.

விசாரணை நிறைவு
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் விசாரித்தார். இரண்டு நாட்களும், இரு தரப்பும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.

வழக்கின் திசை
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கை முன்னர் விசாரித்தபோது, அவர் ஓபிஎஸ் தரப்பையே கடுமையாக சாடி கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால், நீதிபதி ஜெயச்சந்திரன் , இரண்டு நாள் விசாரணையின்போதும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிகமான கேள்விகளை எழுப்பினார். அதிமுக உட்கட்சி விதிகள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை ஈபிஎஸ் தரப்புக்கு எழுப்பியிருந்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். இதனால், இந்த வழக்கு ஓபிஎஸ் பக்கம் திரும்பியிருப்பதாக தோற்றம் காணப்பட்டது.

காலாவதி விவகாரம்
மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆனதாக ஈபிஎஸ் தரப்பினர் தெரிவித்தது தொடர்பான வாதங்களின்போது ஓபிஎஸ் தரப்பு சில அழுத்தமான பாயிண்டுகளை முன்வைத்தது. அதாவது, அதிமுகவில் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த உட்கட்சி சட்டப்படி, தலைமைப் பதவி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதிமுக தொண்டர்கள் ஏகமனதாக தேர்வு செய்த பிறகும், அதற்கு பொதுக்குழு அங்கீகாரம் வேண்டும் என்றால், எம்ஜிஆரின் அந்த நோக்கமே அடிபட்டுப் போகிறது.

ஓபிஎஸ் தரப்பு வாதம்
பொதுக்குழுவில் இருக்கும் உறுப்பினர்களும் கூட கட்சியின் தொண்டர்கள் எனும் வகைமைக்குள் தான் வருகிறார்கள். அவர்களும் சேர்ந்து ஏகமனதாக தேர்ந்தெடுத்தது தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள். அப்படி இருக்கும்போது, மீண்டும் அதற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது அடிப்படையே அற்ற வாதம் என்கிற ரீதியில் பாயிண்டை முன்வைத்தது ஓபிஎஸ் தரப்பு.

நாளை தீர்ப்பு?
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக, உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினருமே மிகுந்த எதிர்பார்ப்போடு நாளைய தினத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அதிமுக எனும் கனி, ஓபிஎஸ், ஈபிஎஸ் இவர்களில் யார் கையில் விழப்போகிறது என்பதுதான் ஒட்டுமொத்த தொண்டர்களின் எதிர்பார்ப்பும்.

யார் கையில்?
ஓபிஎஸ் எய்த கணைகளை உடைத்து, தான் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதை நிரூபிப்பாரா எடப்பாடி பழனிசாமி எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்படியும், எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும், எதிர் தரப்பு மீண்டும் முறையீடு செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் கூட நாளை வரப்போகும் தீர்ப்பு, எதிர்கால விசாரணைகளுக்கான திசைகாட்டியாக அமையும் எனக் கூறலாம்.
-
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications