கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன், கல்வி கடன் ரத்தா? ரூ 5000 போல் சிக்ஸர் அடிக்க போகும் ஸ்டாலின்?
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் தங்க நகை கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு இருக்க வாய்ப்பிருப்பது போல் விவசாயக் கடனும், கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 4530 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் 180 தொடக்க நிலை ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொதுமக்கள் தங்கள் தங்க நகைகளை குறைந்த வட்டிக்கு அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.

இன்று தங்கம் விற்கும் விலைக்கு அன்று குறைந்த விலைக்கு அடகு வைத்துவிட்டு இன்று அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே போவதால் பொதுமக்களால் அதை மீட்க முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 5 பவுன் வரையில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளுக்கான கடன்கள் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
தங்க நகைக் கடன் தள்ளுபடி
இதற்காக ரூ 4,094 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் ஏராளமான ஏழை எளியவர்கள் பயனடைந்தனர். அது போல் இந்த முறையும் நகைக் கடன் ரத்து செய்யப்படும் என சொல்லப்படுகிறது. அரசும் நகைக் கடன் குறித்த லிஸ்ட்டை எடுத்து வருவதாகவும் தெரிகிறது.
இந்த நகைக் கடனை போல் விவசாயக் கடன், கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிராமப்புறங்களில் வேளாண் மற்றும் வேளாண் சாரா கடன்களை வழங்குவதே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் முக்கிய நோக்கமாகும்.
உழவர் கடன் அட்டை
உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் குறுகிய கால வேளாண்மைக் கடன்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள் வாங்குதல், நுண் நீர்ப்பாசனம், கறவை மாடுகள் வாங்குதல் போன்ற வேளாண் சார்ந்த பணிகளுக்காக வழங்கப்படும் கடன்கள் வேளாண் கடன்களாகும்.
விவசாயக் கடன்
வீட்டுக்கடன், சுய உதவி குழுக்களின் வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் கடன்கள் மற்றும் இதர பண்ணை சாராக் கடன்கள் போன்றவை வேளாண்சாரா கடன்களாகும். இச்சங்கங்கள் விவசாய இடுபொருட்களான உரம், விதைகள் மற்றும் சிறு வேளாண் கருவிகள் விற்பனையையும் மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் வேளாண் கடன் ரூ 46 ஆயிரம் கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாம்.
இந்த விவசாயக் கடன் தள்ளுபடி செய்தால், இயற்கை சீற்றங்கள், பருவமழை பொய்த்தல் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற கஷ்டங்களை அனுபவித்து வரும் நாட்டின் முதுகெலும்பாக விவசாயிளுக்கு பேருதவியாக இருக்கும்.
கல்விக் கடன்
அது போல் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்விக் கடன் ரத்து அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவை குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்குகின்றன. இந்தியாவில் படிக்க ரூ 10 லட்சம் வரையும் வெளிநாட்டில் படிக்க ரூ 20- 30 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் தொழில்முறை படிப்புகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். ரூ 4 லட்சம் வரை கடனுக்கு பிணையம் (collateral) தேவையில்லை. அதற்கு மேல் பெறும் கடன்களுக்கு பிணையம் தேவைப்படும். குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த கல்விக் கடனும் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இடைக்கால பட்ஜெட்
இடைக்கால பட்ஜெட்டில் இந்த கடன் ரத்துகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்குள்ளோ அல்லது திமுகவின் தேர்தல் அறிக்கையிலோ இந்த கடன் ரத்து குறித்து அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ 3000 + கோடைக்கால தொகுப்பு ரூ 2000 சேர்த்து ரூ 5000-த்தை பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியதால் ஒவ்வொரு வீடுகளிலும் அண்ணனாக தம்பியாக ஸ்டாலின் இருந்து வருகிறார் என பெண்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications