சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவுக்கு கிடுக்கிப் பிடி செக் வைக்கும் கமல்.. என்ன நடக்கப் போகிறது??

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரசை வைத்து திமுகவிற்கு எதிராக களம் காணும் கமல்- வீடியோ

    சென்னை: திமுக கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சுற்றி வளைத்து வியூகம் வகுத்து வருகிறது. இதிலிருந்து திமுக எப்படி மீளும் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதமாக மாறியுள்ளது.

    காங்கிரஸை மையமாக வைத்து இந்த விளையாட்டு தொடங்கியுள்ளது. காங்கிரஸின் நிலைப்பாடு என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காரணம், காங்கிரஸும் கூட இந்த விளையாட்டை வைத்து தானும் தன் பங்குக்கு விளையாட முடிவு செய்துள்ளதால்.

    வழக்கமாக திமுக அல்லது அதிமுக என்ற இரண்டு புள்ளிகளைச் சுற்றித்தான் எந்த தேர்தலாக இருந்தாலும் காரியங்கள் நடைபெறும். ஆனால் இந்த முறை இந்த இருவரையும் ஒதுக்கி வைத்து விட்டு புதிய பாதை போட சிலர் முயன்று வருகின்றனர். இந்த விளையாட்டில் வெல்லப் போவது யார் என்பதுதான் இப்போது பரபரப்பான எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

    நாங்க இருக்கோம்.. சசிகலா அணிக்கு திடீர் தூது விடும் பாஜக.. தமிழக அரசியலில் பரபரப்பு நாங்க இருக்கோம்.. சசிகலா அணிக்கு திடீர் தூது விடும் பாஜக.. தமிழக அரசியலில் பரபரப்பு

    திருவிழா வருகிறது

    திருவிழா வருகிறது

    தேர்தல் திருவிழா விரைவில் தொடங்கவுள்ளது. லோக்சபாவுக்கு மட்டும் நடக்குமா அல்லது சட்டசபைக்கும் சேர்த்து நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இதுவரை பார்த்திராத வகையில் அதிரடியான, அதி பரபரப்பான தேர்தலாக நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், இதுவரை தமிழகத்தை வியாபித்திருந்த இரு பெரும் தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இதனால் புதிய விளையாட்டு தொடங்கியுள்ளது.

    திமுக, அதிமுகவை ஓரம் கட்ட முயற்சி

    திமுக, அதிமுகவை ஓரம் கட்ட முயற்சி

    தமிழகத் தேர்தல்களிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் மையப் புள்ளிகளாக இருப்பவை திமுக அதிமுக மட்டுமே. இதில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. மக்களும் மாற்றத்தைத் தரத் தயாராகவில்லை. ஆனால் இந்த முறை அதை மாற்றும் முயற்சிகள் ரகசியமாகவும், பகிரங்கமாகவும் நடந்து வருகின்றன.

    கமல் போடும் புதிய விதை

    கமல் போடும் புதிய விதை

    கமல்ஹாசன் இதில் முனைப்புடன் உள்ளதாக சொல்கிறார்கள். அதாவது திமுக, அதிமுகவைத் தவிர்த்து புதிய கூட்டணியை உருவாக்க கமல் முயல்கிறார். இதில் வலுவான கட்சிகளை இணைத்து திமுக, அதிமுகவை காலி செய்ய அவர் முயல்கிறார் என்பதே அது. அதாவது புதிய விதையை விதைக்க முயல்கிறார் கமல்.

    புத்தம் புது கூட்டணி

    புத்தம் புது கூட்டணி

    தனது கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை இடம் பெறச் செய்ய கமல் திட்டமிடுவதாக தெரிகிறது. ஆனால் எதுவும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் படு சாலிடான கூட்டணிக்கு கமல் முயற்சிப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

    நடக்கப் போவது என்ன

    நடக்கப் போவது என்ன

    காங்கிரஸ் கட்சிக்கு டபுள் டிஜிட்டில் சீட் தருவதாக கமல் தரப்பில் தகவல் போயுள்ளதாம். திமுக தரப்பு ஒற்றை இலக்கத்தில்தான் சீட் தர தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதியைத் தருவதாக கமல் தரப்பு கூறுவதாக கேள்வி. மேலும் மற்றவர்களைப் போல நாங்கள் சீட் கொடுத்து காலையும் வாரி விட மாட்டோம். வெற்றிக்காக இணைந்து உழைப்போம் என்ற உறுதிமொழியும் காங்கிரஸ் தரப்புக்குப் போயுள்ளதாம்.

    அடடே ஆச்சரியம்

    அடடே ஆச்சரியம்

    கமல் தரப்பிலிருந்து வந்த தகவல் காங்கிரஸுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அது வேறு ஒரு கேம் ஆட முடிவு செய்துள்ளதாம். அதாவது கமல் தருவதாக கூறும் தொகுதிகளை அப்படியே திமுகவிடம் கேட்கப் போகிறதாம். அதாவது கமல் டீலை வைத்து திமுகவிடம் பேரம் பேச காங்கிரஸ் முயல்வதாக சொல்கிறார்கள். இதில் எது படிகிறதோ அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வாய்ப்புள்ளதாம்.

    திமுக முறியடிக்குமா

    திமுக முறியடிக்குமா

    ஒருவேளை கமல் தரப்பு கூட்டணி உறுதியாகி விட்டால், காங்கிரஸ் கமலுடன் போய் விட்டால், கடைசி நேரத்தில் ரஜினியும் ஓடி வந்து அரசியலில் குதித்து விட்டால், திமுகவுக்கு அது பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பார்க்கலாம், திமுகவின் சாணக்கியத்தனம் இந்த முயற்சிகளை எப்படி முறிக்கப் போகிறது என்பதை.

    English summary
    Tamil Nadu politics is all set to see new style of alliance formation in the coming LS polls soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X