திடீர் திடீர்ன்னு சாயுதே.. பாஜகவிற்கு ஜாக்பாட்.. இந்தியா கூட்டணியில் பெரிய விரிசல்.. மீண்டும் மோடி?
சென்னை: இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பிளவுகள் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவிற்கு சாதகமாக திரும்பும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டணியில் சமீப காலமாகவே மோதல்கள் வெடிக்க தொடங்கி உள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்று மட்டுமே ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி சீட் ஷேரிங், கூட்டணியின் கொள்கை, பிரதமர் வேட்பாளர் என்று எதுவும் அறிவிக்கப்படுவது இல்லை.
மம்தா ஷாக் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான், தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நிதிஷ் - ஸ்டாலின் உரசல்.. இப்போது மம்தா - காங்கிரஸ் உரசல் ஏற்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து நடந்து வரும் மோதல்கள் காரணமாக.. லோக்சபா தேர்தல் 2024 வரை இந்தியா கூட்டணி தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இருப்பதால் இந்த கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியில் பேசிய நிதிஷ்குமார்: இந்தியில் நிதிஷ்குமார் பேசிய போது, இந்தி தெரியாத தலைவர்கள் இங்கு இருப்பதால், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று டி.ஆர்.பாலு சொல்லிய நிலையில், இந்தி தேசிய மொழி ; அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபமாக நிதிஷ் சொல்ல, அது சர்ச்சையானது.
என்ன நடந்தது: இந்த கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முழுக்க முழுக்க இந்தியில் பேசி இருக்கிறார். இதற்கு மொழிபெயர்ப்பு கேட்டதற்கு நிதிஷ் குமார்.. பொழிபெயர்ப்பை நிறுத்த சொன்னதாகவும்.. ஆங்கில - பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து வெளியேறுங்கள். இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கொடுக்க கூடாது என்று வெடுக்கென்று பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசியதாக தெரிகிறது. இந்திய கூட்டணியில் இது பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. கடுமையான மனக்கசப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இது திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இந்திய கூட்டணியில் இனி திமுக என்ன செய்யும்.. திமுகவிற்கான மரியாதை அங்கே கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிதிஷ் குமார் பதவி: இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்கவில்லை என்றதும்.. அவர் கூட்டணியை உடைக்க இப்படி எல்லாம் பேசுகிறார் என்று செய்திகள் வந்தன.
இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் மட்டுமின்றி மமதா பானர்ஜியும் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் இந்தியா கூட்டணி அப்படி பொதுவாக ஒரு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் அவரும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி: இதேபோல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.
இந்த தொடர் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பிளவுகள் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவிற்கு சாதகமாக திரும்பும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருந்தால் மட்டுமே பாஜகவை எதிர்கொள்ள முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் ஒரு குடைக்கு கீழே வருவதற்கு விரும்பவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வட மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் பிளவு பாஜகவிற்கு சாதகமாக மாறி.. மீண்டும் பாஜக வெற்றிபெறும், மோடி வருவார் என்று சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications