சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அடிமடியிலே".. அவர் மீதே "கை" வைக்கிறதா திமுக?.. தலைவருக்கு நெருக்கடி?.. அங்கே 2 சிக்கல் இருக்காமே

அண்ணாமலை மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: போகிற போக்கை பார்த்தால் திமுக Vs பாஜக என்றே தமிழக களம் உருமாறி நிற்கும் என்று தெரிகிறது.. இது தொடர்பான தகவல் ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களை நிலைநாட்டிக் கொள்ளவே ஆர்வம் அதிகமாக காட்டி கொண்டு வருகிறது தமிழக பாஜக..

சமீபகால மாநில தலைவர் அண்ணாமலையின் நடவடிக்கைகளே இதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கின்றன.. போராட்டம் அறிவிப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது, மிரட்டுவது, சவால் விடுவது, என பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறார்.

இந்து என்பது ஒரு மதமே இல்லை.. மதவாதிகள் யார்? திருமாவளவன் இதை புரிஞ்சிக்கணும்.. பாஜக அட்டாக் இந்து என்பது ஒரு மதமே இல்லை.. மதவாதிகள் யார்? திருமாவளவன் இதை புரிஞ்சிக்கணும்.. பாஜக அட்டாக்

 சீக்ரெட் மூவ்கள்

சீக்ரெட் மூவ்கள்

வழக்கமாக, இதையெல்லாம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் செய்ய வேண்டும் என்றாலும், ஒருசில "திரைமறைவு" மற்றும் அடக்கிவாசிக்க வேண்டிய சூழல்களால், திமுகவை நேரடியாகவே எதிர்க்க முடியாத உள்ளதாக சொல்லப்படுகிறது.. மறைமுகமான வேலைகளை திமுகவுக்கு எதிராக காய் நகர்த்தியும் வருவதுடன், ஆளும் தரப்பை தினமும் விமர்சித்து கொண்டும், அறிக்கைகள் மூலமாக கண்டனம் தெரிவித்து கொண்டும் இருந்தாலும், பாஜகவின் அதிரடிகள் முன்பு அவை மக்களிடம் எடுபடாமல் போய் கொண்டிருக்கிறது.

 எரிச்சல், கொந்தளிப்பு

எரிச்சல், கொந்தளிப்பு

ஒருகட்டத்தில் பாஜகவின் எல்லைமீறல், திமுகவுக்கு எரிச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதான எதிர்கட்சி என்பதாலும், மத்தியில் ஆளும் தரப்பில் உள்ளதாலும், எந்தவிதமான கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில், கையை பிசைந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அண்ணாமலை இழிவாக பேசியதாக சர்ச்சை கிளம்பியது.. இது தொடர்பாக திமுக, விசிக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் புகார்களை கொடுத்து வருகிறார்கள்.

 எஸ்.சி., எஸ்.டி. புகார்

எஸ்.சி., எஸ்.டி. புகார்

இந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், எஸ்சி, எஸ்டி வழக்குகளின் கீழ் அண்ணாமலை கைதாக வாய்ப்புள்ளதா என்றும் சட்டரீதியாக யோசிக்கப்பட்டு வருகிறதாம்.. எதுவானாலும் சட்டத்துக்கு உட்பட்டே அரசு இந்த விஷயத்தில் அணுகும் என்றபோதிலும், அண்ணாமலை மீது கையை வைப்பது அவ்வளவு எளிது கிடையாது என்றும் திமுக அறியாமல் இல்லை.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.

 மோடிக்கு நெருக்கமானவர்

மோடிக்கு நெருக்கமானவர்

ஒன்று, அண்ணாமலை ஒரு கட்சியின் தலைவர்.. மாநில அளவில் பொறுப்பில் உள்ளவர்.. பிரதமர் மோடிக்கு நம்பகமானவர்.. நேரடியாகவே போனை போட்டு பேசக்கூடியவர்.. எனவே, மத்திய அரசின் எதிர்வினையை சந்திக்க வேண்டியிருக்கும்.. சட்டரீதியாக நடவடிக்கையே எடுத்தாலும்கூட, வேண்டுமென்றே அண்ணமலையை"பழிவாங்கும்" படலமாகவே எதிர்க்கட்சிகள் அதை திரித்துவிடக்கூடும் என்று திமுக தரப்பு யோசிக்கிறதாம்.

 முத்திரை பாஜக

முத்திரை பாஜக

மற்றொன்று, அண்ணாமலையை கைது செய்து, தேவையில்லாமல் அவரை பெரிய நபராக வளர்த்துவிடக்கூடாது என்றும் நினைக்கிறதாம்.. திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்று ஏற்கனவே அவர் சொல்லிவரும் நிலையில், அப்படி கைது செய்துவிட்டால், திமுகவுக்கு நேர் எதிரி பாஜக என்றே முத்திரை குத்தப்பட்டுவிடும் என்றும் திமுக தயங்குகிறதாம்.. அதுமட்டுமல்ல, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை, தவறாக பயன்படுத்த அரசே ஊக்குவிக்கிறது என்ற தேவையில்லாத பெயரையும் பரப்பிவிட்டு விடுவார்களே என்றும் தயங்குகிறது.

 வில்லங்கம் இருக்கா?

வில்லங்கம் இருக்கா?

ஏற்கனவே இப்படித்தான், அண்ணாமலைக்கு செக் வைக்க திமுக அரசு முயன்றதாம்.. அதாவது, அண்ணாமலை, ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய கர்நாடகாவில் அவருக்கு எதிராக ஏதாவது சிக்குமா என்று திமுக தரப்பில் ஆராயப்பட்டிருக்கிறது.. அம்மாநில முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள், முக்கிய அதிகாரிகளிடம் இதற்காக உதவியும் கோரினார்களாம்.. ஆனால், அண்ணாமலையை சிக்க வைக்கும் அளவுக்கு, வில்லங்கம் எதுவும் இல்லை என்று அவர்கள் சொல்லிவிடவும்தான், இப்போது இந்த வழக்கு சிக்கி உள்ளது.

 குழம்பும் மேலிடம்

குழம்பும் மேலிடம்

வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய கிடைத்த வாய்ப்பை தவற விடக் கூடாது என்று ஒரு தரப்பு திமுகவை நெருக்கி வருகிறார்கள்.. இன்னொரு தரப்போ, கை வைத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும், பார்த்து கொள்ளுங்கள் என்று இன்னொரு தரப்பும் அறிவுறுத்தி வருகிறார்களாம்.. இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல், திமுக மேலிடம் கையை பிசைந்து குழம்பி வருவதாகவும், தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், கூட்டணி கட்சி தலைவர்களிடம் இது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது...!

English summary
Will mk stalin take action against tn bjp president annamalai under sc st act and what will happen in bjp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X