திணறடிக்கும் புகழேந்தி.. அந்த இடத்துக்கு குறி.. ‘ஓகே’.. கண்ணசைத்த பன்னீர்.. எல்லாம் சரியா போகுதாம்!
சென்னை : ஓபிஎஸ் அணியில் பலருக்கும் பதவிகளை அள்ளி வழங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம், புகழேந்திக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தர திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி உடனான மோதலுக்குப் பிறகு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ்.
தனது ஆதரவாளர்கள் பலருக்கும் முக்கிய பதவிகளை அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், பெங்களூர் புகழேந்திக்கு இன்னும் பதவி எதையும் வழங்கவில்லை.
கேசிபி பழனிச்சாமிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தருவதாக ஓபிஎஸ் பேசிப் பார்த்தும் அவர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அந்த பதவி புகழேந்திக்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பெங்களூர் புகழேந்தி - ஜெயலலிதா
அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக பொறுப்பு வகித்தவர் பெங்களூரு வா.புகழேந்தி. அதிமுகவின் செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்தார். பெங்களூரில் நடந்த ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்தவர் புகழேந்தி தான். அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கைதானபோது புகழேந்தியும், அவரது குடும்பத்தினரும் தங்களது சொத்துகளை பிணையாக வழங்கி கையெழுத்திட்டனர்.

புகழேந்தி + சசிகலா
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் ஆதரவாளராக இருந்த புகழேந்தி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவரை ஆதரித்து பேசிவந்தார். சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்ட பிறகு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாளராகச் செயல்பட்டார். சசிகலாவுக்கு சிறையில் வசதிகளைச் செய்து கொடுத்த விவகாரத்தில் புகழேந்தியின் பெயரும் அப்போது அடிபட்டது.

கட்சியில் இருந்தே நீக்கம்
அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியை கடந்த ஆண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கட்சியை விட்டு நீக்கினர். அன்புமணி ராமதாஸ் பற்றி புகழேந்தி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் புகழேந்தி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் புகழேந்தி, அதன்பிறகு அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

திணறடிக்கும் புகழேந்தி
இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் ஆதரவாக நின்று வருகிறார் புகழேந்தி. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் முக்கிய நபராக மாறியிருக்கும் புகழேந்தி, ஓபிஎஸ் நடத்தும் அத்தனை ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பை திணறடித்து வருகிறார்.

ஆதரவாளர்களுக்கு பதவிகள்
எனினும், ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு முக்கிய பதவி எதையும் அளிக்கவில்லை. கட்சியில் புதிதாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தையும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை நியமித்தார். அதேபோல, தனது ஆதரவாளர்கள் பலரையும் முக்கிய பொறுப்புகளில் நியமித்துள்ளார் ஓபிஎஸ்.

முரண்டு பிடித்த கேசிபி
இதற்கிடையே, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் விமர்சித்துப் பேசி வரும், முன்னாள் எம்.பி கேசி பழனிச்சாமியை தன் பக்கம் இழுப்பதற்காக, அவருக்கு முக்கிய பதவிகளை வழங்குவதாக தனது அணியினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஓபிஎஸ். கேசி பழனிச்சாமிக்கு துணை ஒருங்கிணைப்பாளர் அல்லது கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தருவதாகவும் ஓபிஎஸ் அணியின் சீனியர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பேசிப் பார்த்தனர். எனினும், அவர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கொள்கை பரப்புச் செயலாளர்
இதையெல்லாம் அறிந்த பெங்களூரு புகழேந்தி, கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பெற அடிபோட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது ஓ.பன்னீர்செல்வம் காதுக்கும் சென்றிருப்பதால், விரைவில் புகழேந்தியை அந்தப் பதவிக்கு நியமிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தனது மகன் ஜெயபிரதீப்புக்கும் ஐடி விங் செயலாளர் பதவியை அளிக்க ஓபிஎஸ் தயாராகி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

சமீபத்தில் கூட
சமீபத்தில் கூட, புகழேந்தி ஒரு பேட்டியின்போது பேசுகையில், எனக்கு எந்தப் பதவியும் இல்லை, பதவியை எதிர்பார்த்து நான் பேசவில்லை. என்னை நீக்கிய அறிவிப்பில் ஓபிஎஸ்ஸும் தான் கையெழுத்து போட்டார். எடப்பாடி பழனிசாமி நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றுதான் அவரை எதிர்க்கிறேன். அவர் கட்சியை அழித்துவிடுவார் எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications