பயமுறுத்தும் ‘ப்ளூ’ காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!
சென்னை : தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்திருக்கிறார்.
"போதை இல்லா பாதை" என்கிற இயக்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பயணம் நடைபெற இருக்கிறது.
இதற்கான பதாகை (போஸ்டர்) வெளியீட்டு நிகழ்வு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு பதாகைகளை வெளியிட்டார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," போதையில்லா தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்வர் எடுக்கின்ற முயற்சிக்கு இது போன்ற இயக்கங்கள் நடத்துகின்ற விழிப்புணர்வு முதல்வருக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் முதல்வர் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சிக்கும் இது போன்ற இயக்கங்கள் துணையாக இருக்க வேண்டும். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று இந்த விழிப்புணர்வு பிராச்சாரம் தொடங்குகிறது என கூறிய அவர் போதை பழக்கம் என்பது ஒரு குற்றம் அல்ல இது ஒரு நோய் இதை சரி செய்ய வேண்டியது சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய கடமை

மேனேஜ்மென்ட் கமிட்டி
கடந்த பத்து வருடமாக அதிமுக என்ன செய்தது என்பது அவசியம் இல்லை. இனி திமுக ஆட்சி காலத்தில் இது போன்ற எதுவும் இருக்க கூடாது என்று முதல்வர் பல்வேறு விஷயங்களை செயல்படுத்தி வருகிறார். ஸ்கூல் மேனேஜ்மென்ட் கமிட்டி தொடங்கப்பட்டதற்கான காரணம் பள்ளிக்கூடம் தன்னிறைவு அடைவதற்காக மட்டுமல்ல,பள்ளிக்கூட வளாகத்தை சுற்றி என்ன பிரச்சனைகள் நடைபெறுகிறது. அதை உள்வாங்கிக் கொண்டு சரி செய்வதற்காகவும் தான் என்று அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோரே அதில் உறுப்பினராக இருப்பார்கள்

ஜாதி பாகுபாடு
பள்ளிகளில் ஜாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது என்ற கேள்விக்கு, அதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் . 14417 (Child abuse) டோல் ஃப்ரீ எண்கள் இன்னும் உபயோகத்தில் தான் உள்ளது அந்த எண்களை தொடர்பு கொண்டு இதுபோன்ற ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் புகார் அளிக்கலாம் பெரும்பான்மையானோர் 100 எனும் எண்ணிற்கு தான் தொடர்பு கொண்டு புகார் அளிக்கின்றார்கள், எனவே நாங்கள் காவல்துறையினர் இடத்திலும் புகார்கள் வந்தால் அது தொடர்பான விவரங்களை சமந்தப்பட்ட துறைக்கு தெரிவித்து அதன் தகவல்களை பகிர உத்தரவிட்டுள்ளோம்

பள்ளிகளுக்கு விடுமுறை
கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டியில் எஸ்சி எஸ்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அதற்கு உண்டான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார துறை அதிகாரிகளின் குழு கலந்தாலோசித்து அதற்கான முடிவுகளை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications