"வாடகை தாய்.." நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சிக்கல்? விளக்கம் கேட்டு நோட்டீஸ்- அமைச்சர் தகவல்
சென்னை: வாடகை தாய் மூலம் விதிமுறைகளின் படி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தை பெற்றார்களா என விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையான நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 4 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்ததாக ட்விட்டரில் அறிவித்தனர்.
இது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதன்பின்னர் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டது தெரிய வந்தது. வாடகை தாய் முறை என்பது நயன்தாரா வயிற்றில் கரு வளராமல், வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்ந்து, இவர்கள் குழந்தை பெற்றுள்ளனர்.

வாடகை தாய் மூலம் குழந்தை
இதனை பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஷாரூக் கான் - கவுரி கான் ஜோடி, நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், சன்னி லியோன் - டேனியல் வெபர் என ஏராளமானோர் இப்படி வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் முதல்முறையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுள்ளனர்.

வாடகை தாய் விவாதம்
இதனால் ரசிகர்கள் வாடகை தாய் விதிமுறைகள் சரியா என்பது உள்ளிட்ட தேவையில்லாத விவாதங்களையும் பேசி வருகின்றனர். அதேபோல் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த காரணங்களுக்காகவும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் அமலில் உள்ளதாகவும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், 21-36 வயதுடையவர்களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். அதற்கு திருமணமாகி, கணவரின் ஒப்புதல் இருக்கவேண்டும்.

விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஃபெர்டிலிட்டி மையங்களுக்கு ஏற்கனவே விதிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விதிமுறைகளை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றாரா என்பது பார்க்கப்படும். பொது சுகாதாரத்துறையின் மூலம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொண்டார்களா என்று விளக்கம் கோரப்படும் என்று தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications