ரூட் மாறுதே.. "அந்த" அமைச்சர்களுக்கு ரிஸ்க்காம்.. எடப்பாடியாருக்கு அமோக வெற்றி உறுதியாம்.. பரபர களம்
சென்னை: வரும் தேர்தலில் அதிமுக, திமுக என இரு கட்சிகளின் நிலவரமும் நாளுக்கு நாள் வேறு வேறு மாதிரியாக வந்து கொண்டிருக்கிறது.
நெருங்கும் தேர்தலில் 5 முனை போட்டி நடக்கிறது.. இருந்தாலும் திமுகவும், அதிமுகவும் மட்டுமே பிரதானமாக பார்க்கப்பட்டு வருகின்றன.
இரு கட்சிகளில் யார் ஆட்சியை பிடிப்பது என்ற எதிர்பார்ப்பு எழுந்து கொண்டே இருக்கிறது.. இரு கட்சிகளின் சார்பாகவும் பிரச்சாரங்கள் சூடுபிடித்தாலும், எதையும் இதுவரை உறுதியாக சொல்ல முடியவில்லை.

அரசியல் நோக்கர்கள்
அந்த வகையில் அதிமுகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சில கணிப்புகள் கூறின.. அதேபோல ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார் என்று பல கணிப்புகள் கூறின.. எனவே அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.. பொதுவான களம் எப்படி இருக்கிறது? யாருக்கு சாதகமாக இருக்கிறது என்ற கேள்வியையும் முன்வைத்தோம். அவர்கள் அனுமானத்தில் சொன்ன தகவல் இதுதான்:

அதிமுக
"எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, இந்த 4 ஆண்டு கால சாதனைகளில் சிலவற்றை மறக்க முடியாது.. அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய தவறு என்று ஒன்றும் நடந்துவிடவில்லை.. பெரிய குற்றமும் செய்துவிடவில்லை.. அந்த வகையில் பரவலான நல்ல பெயர் அதிமுகவுக்கு இப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

மைனஸ்
ஆனால், அதிமுக என்ற ஆலமரமே சற்று வலிமையற்று போய் உள்ளது மைனஸாக பார்க்கப்படுகிறது.. கடந்த 2016 தேர்தலில்கூட பெரும்பாலான அமைச்சர்கள் தோற்று போனார்கள்.. கோகுலஇந்திரா, வளர்மதி போன்றோருக்கு சீட் தந்தும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.. அப்போது அவர்கள் மீது என்ன அதிருப்தியால் மக்கள் ஆதரவு தரவில்லையோ, அதே காரணம்தான் இப்போதும் தொடரலாம் என தெரிகிறது.. இவர்களுக்கு எல்லாம் மறுபடியும் சீட் கிடைத்துள்ளது.. இந்த 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த அமைச்சர்களுக்கே பல தொகுதிகளில் சிக்கல் உள்ள நிலையில், இந்த வேட்பாளர்கள் எல்லாம் சற்று சந்தேகம்தான்.

சமாளிப்பு
அதிலும் சில முக்கிய அமைச்சர்களே தொகுதிக்குள் தாராளத்தை காட்டி வருவதாக தெரிகிறது.. உண்மை நிலவரம் பார்த்தால், இவர்களுக்கு டெபாசிட்டே கிடைக்காது என்றுதான் பேசி கொள்கிறார்கள்.. அதனால்தான் தாராளமாக செலவு செய்யும் நிலைமைக்கே வந்துள்ளனர்.. இன்னொரு விஷயம், இவர்களுடன் திமுகவே நேரடியாக மோதுகிறது.. ஒருவேளை திமுகவின் கூட்டணி கட்சியினர் போட்டியிட்டால் அவர்களை அதிமுக சமாளித்துவிடுவார்கள்.. ஆனால், நேரடியாக திமுக மோதுவதுதான் இப்போது சில அமைச்சர்களுக்கு சிக்கல் தந்து வருகிறது.

கொங்கு மண்டலம்
கொங்குமண்டல அமைச்சர்களில் சிலர் திமுகவிடம் தங்கள் வெற்றியை பறிகொடுக்கும் நிலைமைக்கும் வரலாம்.. ஏனெனில் கொங்குவில் திமுக ஸ்டிராங்காக இருக்கிறது. இதற்கு இன்னொரு காரணமும உண்டு.. அமமுகவே அதிமுகவின் வாக்குகளை பிரித்துவிடும்.. அமமுகவுக்கு தென்மண்டலத்தில் ஏராளமான செல்வாக்கு இருந்தாலும் ஓரளவு கொங்குவில் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு காரணம் திமுக ஸ்டிராங்க உள்ளது. திமுக வெல்லும்.. அமமுகத அதிமுகவை பிரித்துவிடும்.

அதிருப்தி
வடமாவட்டத்தை எடுத்து கொண்டால், அந்த அளவுக்கு அதிமுக கூட்டணி ஆஹா ஓஹோ அளவுக்கு இல்லை.. வன்னியர் இடஒதுக்கீட்டு விஷயத்தில், பிற சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர்.. ஆனால், வன்னியர் ஓட்டு விழும் என்ற மனக்கணக்கு போட்டுதான் பாமக - அதிமுக இடஒதுக்கீட்டு முடிவை எடுத்துள்ளது.. இதிலும் அவர்களுக்கு மைனஸ்தான்.. ஏனென்றால், இடஒதுக்கீடு கிடைத்துவிட்டதாலேயே, எல்லா வன்னியர்களும் அதிமுக கூட்டணி பக்கம் வந்துவிட மாட்டார்கள்.. இதில் தீவிர திமுக தொண்டர்களும் உண்டு, தேமுதிக தொண்டர்களும் உண்டு, எனவே, இடஒதுக்கீடு விஷயம் அதிமுகவுக்கு மைனஸ்தான்.

சென்னை கோட்டை
எல்லாவற்றையும்விட, சென்னையை எடுத்து கொண்டால் திமுகவே ஜெயிக்கும் என்று தெரிகிறது.. இந்த முறை சென்னை கோட்டையை யாருக்கும் விட்டு தருவதில்லை என்ற முடிவில்தான் திமுக களம் இறங்கி உள்ளது.. ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கியதாக தெரிகிறதே தவிர, சென்னை நிச்சயம் திமுகவின் பிடியில் வந்து சேரும்.

எடப்பாடி பழனிசாமி
ஆக மொத்தம், இப்போதைய கணக்குப்படி பார்த்தால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே அமோக வெற்றியை பெறுவார்கள் .. இதில் ஓபிஎஸ்கூட சந்தேகம்தான்.. எடப்பாடியார் செய்த நல்லாட்சியும், அவரது அணுகுமுறையும், மக்களிடம் உள்ள நல்ல பெயரும் அவரை நிச்சயம் மெகா வெற்றி பெற வைக்கும்.. மற்றபடி பெருவாரியான தொகுதிகளை அதிமுக வெல்லும் என்று சொல்வதற்கில்லை.. அடுத்து வரும் சில நாட்களில் இந்த கணிப்பும் மாறலாம்.. அதிமுகவுக்கு சாதமாகவும் வரலாம்.. மற்றபடி இப்போதைக்கு திமுகவே தராசில் உயர்ந்து நிற்கிறது" என்றனர்.