அடுத்தடுத்து தூக்கப்படும் தவெக தலைகள்.. தேடப்படும் புஸ்ஸி ஆனந்த்.. விஜயும் கைதாக வாய்ப்பு? பின்னணி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்பட உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மக்களிடையே கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை. அடிக்கடி டிவிகளில் பேசும் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். ராஜ்மோகன், லயோலா மணி போன்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தினர் அடுத்தடுத்து கைது
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட ஐந்து பேர் போலீசார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதியழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இணையத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பிய 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். ஏற்கனவே இவர்களுக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டு உள்ளது.
புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு
கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், "அரசியல் பலத்தை காட்டும் நோக்கில் கூட்டம் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக துவக்கப்பட்டது. தொண்டர்கள் மரங்கள் மற்றும் கடைகள் மீது ஏறி அமர்ந்தனர். இதில் மரக்கிளைகள் முறிந்து கீழே நின்றவர்கள்மீது விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாக, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இன்று கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள். கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் கைதாக வாய்ப்பா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்பட உள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மக்களிடையே கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆனால் அரசு தரப்பு வட்டாரங்கள், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை. அது சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். தவெக அதைத்தான் எதிர்பார்க்கிறது. அதை செய்ய மாட்டார்கள். அதோடு விஜய் பெயர் FIRல் இல்லை. கோர்ட் சொன்னால் விஜய் கைது செய்யப்படுவார். அரசு தானாக அவர் மீது நடவடிக்கை எடுக்காது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
எந்த முதல்வரும் செய்யாத மூவ்.. உள்ளாட்சித் துறையை முதல்வர் விஜய் தன்வசம் வைத்திருப்பது ஏன்? பின்னணி -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
நெல்லையில் தாமிரபரணி வரலாற்றுச் சுவடுகளை மறைத்து போஸ்டர்கள்.. தவெகவினர் செயலால் சர்ச்சை












Click it and Unblock the Notifications