சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டைம் நெருங்கிடுச்சு" போல.. செம கடுப்பில் பாஜக லீடர்கள்.. சுப்பிரமணிய சாமிக்கு மத்திய அரசு மெகா செக்

அரசு பங்களாவை சுப்பிரமணிய சாமியும் காலி செய்ய நேரிடுமா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பாஜகவை தொடர்ந்து கடுப்பேற்றியும், வெறுப்பேற்றியும் வரும் சுப்பிரமணியசாமி, அவரது அரசு பங்களாவை காலி செய்ய நேரிடுமோ? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.

பாஜகவில் இருந்தாலும், சேம் சைட் கோல் போட்டு கொண்டிருப்பவர் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி... ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று நீண்ட காலமாகவே எதிர்பார்த்து காத்திருந்தார்.

அதிலும் நிதியமைச்சர் பதவி மீது இவருக்கு ஒரு கண் 10 வருட காலமாகவே இருக்கத்தான் செய்தது.. ஆனால், மோடி அரசு அந்த பதவியை இவருக்கு தரவே இல்லை.

பாஜகவில் தேர்தல் நடைமுறை இல்லவே இல்லை.. பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவில் தேர்தல் நடைமுறை இல்லவே இல்லை.. பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

 டைரக்ட் அட்டாக்

டைரக்ட் அட்டாக்

இப்படி தனக்கு பதவி தராதது குறித்தும் ட்விட்டரில் எதிர்கருத்துதான் சொல்லியவாறே இருக்கிறார் சு.சாமி.. அதேபோல, நிதியமைச்சர் பதவியில் நிர்மலா சீதாராமனை நியமித்ததாலோ, என்னவோ, அவர் என்ன அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதையும் மறக்காமல் விமர்சித்தும் வருகிறார்.. எந்தவித நடவடிக்கையை நிர்மலா சீதாராமன் மேற்கொண்டாலும், அதற்கு எதிராகவே கருத்து சொல்வது சாமியின் ஆல்டைம் ஸ்பெஷலாட்டி!

நிர்மலா

நிர்மலா

ஒருமுறை இப்படித்தான் பொருளாதார தீர்வு குறித்து நிதியமைச்சர் சில திட்டங்களை அறிவித்தார்.. அதற்கு முதல் ஆளாக வந்து விமர்சித்த சு.சாமி, "ஒன்று துணிவு இருக்க வேண்டும், அல்லது புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். ஆனால் என்ன செய்றது? நம்ம கிட்ட இரண்டுமே இல்லையே" என்று அட்டாக் செய்திருந்தார். அதிலும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டம் நடத்தும்போதெல்லாம் இணையவாசிகள், ஆர்வத்துடன் காத்துக்கிடப்பது சு.சாமியின் கமெண்ட்களுக்காகத்தான்..

அட்டாக்

அட்டாக்

தொடர்ந்து நேரடியாகவே பாஜக மேலிடத்தை அட்டாக் செய்து பேசிவருவதால், இந்த முறையும் இவருக்கு எம்பி போஸ்டிங் தருவதற்கு, அமித்ஷா, மோடி இருவருக்குமே விருப்பமில்லை என்று சலசலக்கப்பட்டது.. எம்பி பதவி கிடைக்காது என்ற அரசல் புரசலாக செய்தி கசியவும், இன்னும் மோசமாக மத்திய அரசை விளாச ஆரம்பித்துவிட்டார் சு.சாமி.. அந்தவகையில், மேலிட தலைவர்களுடன் சுமூகமான உறவு, சு.சாமியிடம் இல்லை என்றே தெரிகிறது.. போதாக்குறைக்கு மம்தா போன்றவர்களுடன் நெருக்கம் காட்டி, பாஜகவை கடுப்பாக்கினார்..

 ஸ்டிரைட்டா கேஸ்

ஸ்டிரைட்டா கேஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லியில் இவருக்கு, எம்பி என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டது மத்திய அரசு... ஆனால் பங்களாவை காலி செய்ய முடியாது என்று சொன்ன சு.சாமி, ஸ்டிரைட்டாக டெல்லி ஹைகோர்ட்டுக்கே சென்றுவிட்டார்.. "இன்னமும்கூட என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கு, அதனால் அரசு பங்களாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வைத்தார்.. ஆனால், மத்திய பாஜகவோ இதை கண்டுகொள்ளவேயில்லை.

 நெருங்கிடுச்சே

நெருங்கிடுச்சே

சு.சாமியின் கோரிக்கைக்கு மறுப்பும், எதிர்ப்பு காட்டியது.. கடைசியில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஹைகோர்ட், 6 வாரங்களுக்குள் சுப்பிரமணியன் சுவாமி காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது... ஆனாலும் இதை எதிர்த்து அப்பீலுக்கு போயுள்ளார்.. இந்த கேஸ் வரும் 31-ந் தேதி விசாரணை வரப்போவதாக சொல்கிறார்கள்.. இதன் தீர்ப்பு எப்படி இருக்க போகிறதோ தெரியவில்லை..

 டைம் ஓவர் ஓவர்

டைம் ஓவர் ஓவர்

ஆனால், நேற்றுமுன்தினம்தான், அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த சசிகலா புஷ்பாவின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.. வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தெருவில் தூக்கி வீசினார்களாம்.. நோட்டீஸ் தந்து 2 வருஷமாகியும், வீட்டை காலி செய்யாமல் இருந்ததால் வெறுத்து போன மத்திய அரசு, சசிகலா புஷ்பாவின் வீடு புகுந்து, பொருட்களை தெருவில் வீசி, பங்களாவுக்கு சீலும் வைத்துள்ளது.. சு.சாமிக்கு டைம் இன்னும் 2 நாள்தான் இருக்கிறது.. அவரது பங்களா காலி செய்யப்படுமா? அல்லது விலக்கு அளிக்கப்படுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

English summary
Won't Subramanian swamy vacate the govt bungalow and Whats the central govt to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X