Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Flashback 2022: சாதி, பெண் அவமதிப்பு.. அமைச்சர்களை சுற்றிச் சுழன்ற சர்ச்சைகள்.. மீண்டும் மீண்டுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் சர்ச்சைகளில் இடிபட்டுச் சிக்கினர் தமிழ்நாட்டிப் பல அமைச்சர்கள். திமுக அமைச்சர்களில் இந்தாண்டு சர்ச்சைகளுக்குத் தப்பியது வெகு சிலர் தான். சர்ச்சைகளில் அமைச்சர்கள் சிக்கிய சில சம்பவங்களை இங்கே அசைபோடுவோம்.

சுயமரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்காக முக்கால் நூற்றாண்டு காலமாகப் பாடுபடும் இயக்கமான திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், சாதி ரீதியாக, பெண்களுக்கு எதிரான் இழிவு தொடர்புடைய சர்ச்சைகளில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு முழுவதுமே அமைச்சர்களின் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. அவர்களில் சிலர், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி விழிபிதுங்கியதையும் பார்த்தோம்.

ராஜகண்ணப்பன்

ராஜகண்ணப்பன்

திமுக அரசில் போக்குவரத்துத்துறையின் அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தன்னை சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் புகார் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் ஆக்‌ஷன் எடுத்தார் முதல்வர் ஸ்டாலின். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றப்பட்டனர்.

பெண்ணை தலையில் தட்டிய அமைச்சர்

பெண்ணை தலையில் தட்டிய அமைச்சர்

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தன்னிடம் மனு கொடுக்க வந்த தனது மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை, கையில் இருந்த மனு காகிதத்தை வைத்து தலையில் அடிக்கும் காணொளி பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அமைச்சர் தன்னை அடிக்கவில்லை என்றும் அவர் தமக்கு உறவினர்தான் என்றும் உரிமையாகவே விளையாட்டுக்கு அடித்ததாகவும் அப்பெண் ஊடகங்களில் மறுப்பு தெரிவித்தார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். தன்னை சந்திக்க வந்த, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக எம்.பி தனுஷ்குமார் மற்றும் வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் உள்ளிட்டவர்களை, தனது வீட்டில் சோபா காலியாக இருந்தபோதும், அவர்களை அமர வைக்காமல் நிற்க வைத்துப் பேசி அனுப்பியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பொன்முடி - இரட்டை சர்ச்சை

பொன்முடி - இரட்டை சர்ச்சை

இந்த பிரச்னை முடிவதற்குள், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டம் ஒன்றில், அரசு பஸ்ஸில் பெண்கள் 'ஓசி' பயணம் செய்வதாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதற்கு முன்னதாக வேறொரு சர்ச்சையிலும் சிக்கி இருந்தார் அமைச்சர் பொன்முடி. அரசு விழா மேடையில் வைத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய சேர்மனிடம், நீங்க எஸ்.சி தானே என ஓப்பனாக கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

துரைமுருகன் கிண்டல்

துரைமுருகன் கிண்டல்

வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் துரைமுருகனிடம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்குவீர்கள் என கேட்டதற்கு, அவர் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்க சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என கிண்டலாக தெரிவித்ததும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, மூத்த அமைச்சரே இப்படி எடுத்தெறிந்து பேசுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனக் கணைகளைத் தொடுத்தன.

ஒருமையில் இல்லை, உரிமையில்

ஒருமையில் இல்லை, உரிமையில்

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மேயர் பிரியாவை அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் அதட்டலாகப் பேசினார். பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் மேயர் என்பதால் திமுக அவமதிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இதுகுறித்து மேயர் பிரியா, "அமைச்சர் என்னை ஒருமையில் பேசவில்லை, உரிமையில் பேசினார்" என்று விளக்கமளித்திருந்தாலும் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் நேரு

அமைச்சர் நேரு

மேலும், அமைச்சர் நேரு திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, டிஎஸ்பி ஒருவரைக் குறிப்பிட்டு, இவர் எனக்கு செக்யூரிட்டி எஸ்ஐயாக இருந்தவர். தற்போது டிஎஸ்பியாக இருக்கிறார். இவரது திறமை என்னவென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். இவர் நினைத்தால் ஒருவரை குற்றவாளி ஆக்கவும் முடியும். தப்பிக்க வைக்கவும் முடியும் எனப் பேசினார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணன்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஒருவரிடம் போனில் பேசும் உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனிதா ராதாகிருஷ்ணன் ஒன்றிய செயலாளரை மிரட்டிய நிலையில், பதிலுக்கு ஒன்றிய செயலாளரும் ஒருமையில் ஆபாசமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்த ஒன்றிய செயலாளரின் பதவி பறிக்கப்பட்டு, சில வாரங்களில் அவர் குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறையே பல சர்ச்சைகளைச் சந்தித்தது. பிரஸ் மீட்டில் அமைச்சர் ஒன்று அறிவிக்க, அதற்கு நேர்மாறாக ஒரு அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையில் இருந்து வெளிவரும். பின்னர் அந்த சர்குலர் திரும்பப் பெறப்படும், இதுபோன்ற நிகழ்வுகள் பல மாதங்கள் தொடர்ந்தன. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில், பொதுத்தேர்வு நிச்சயம் நடக்கும் என அமைச்சர் கூறியது பெற்றோர்களுக்கே பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆண்டு முழுவதுமே ட்ரெண்டிங்கில் இருந்தார். மதுரை விமான நிலையத்தில், அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் அடுத்தடுத்து ட்விஸ்ட்டுகளை ஏற்படுத்தியது. சக அமைச்சர்களையே விமர்சிக்கும் வகையில் பிடிஆர் பேசி வந்ததால், சீனியர்கள் பலரும் அப்செட் ஆகினர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினே அட்வைஸ் செய்து பிடிஆரை அமைதியாக இருக்கச் செய்தார்.

எ.வ.வேலு

எ.வ.வேலு

8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியவர்களை விமர்சிக்கும் விதமாக அமைச்சர் எ.வ.வேலு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சாலை நெருக்கடி காரணமாகச் சாலைகளை விரிவாக்கம் செய்ய பணிகளை மேற்கொண்டால், நிலமில்லாதவர்கள் கூட பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு என்னுடைய நிலத்தை எடுக்காதீர்கள் எனப் போராட வந்துவிடுகிறார்கள் எனக் கடுமையாகப் பேசியிருந்தார் எ.வ.வேலு. எதிர்க்கட்சியாக இருந்தபோது 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு இப்படி அதிகாரமாகப் பேசுகிறாரே என பலரும் விமர்சித்தனர்.

மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

திமுக மேடையில் தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் இருக்கும் நடிகைகளான குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கௌதமி ஆகியோரை ஆபாசமாக விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. அதற்காக அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அவர் பேசிய மேடையில் இருந்த அமைச்சர் மனோ தங்கராஜ், இதனை ஆட்சேபிக்காமல், ரசித்து கைதட்டிக் கொண்டிருந்தார் என குஷ்பு கடுமையாக கண்டனம் தெரிவித்து, மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். இது மனோ தங்கராஜுக்கு பெரிய தலைவலியாக அமைந்தது.

முதல்வர் ஸ்டாலின் வேதனை

முதல்வர் ஸ்டாலின் வேதனை

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினே, திமுக பொதுக்குழு கூட்டத்தின்போது, "காலையில் கண் விழிக்கும்போதே நம்மவர்கள் யாரும் புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட செய்துவிடுகிறது. என்னை மேலும் துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?" என வேதனையுடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+