திருவான்மியூர் டெப்போவில் அரசு பேருந்தை நள்ளிரவில் கடத்திய நபர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
சென்னை: சென்னை திருவான்மியூரில் இளைஞர் ஒருவர் அரசு பஸ்சை கடத்தி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கண்டக்டருன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பழிவாங்குவதற்காக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை கடத்தி சென்றுள்ளார். மேலும் பஸ்சை கடத்தி செல்லும் போது போதையில் இருந்ததால் அந்த பஸ் விபத்தில் சிக்கியதில், அந்த இளைஞர் போலீசிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள பஸ் பணிமனையில், அரசு பேருந்துகள் நேற்று இரவு வழக்கம்போல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அப்போது நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் குடிபோதையில் வந்துள்ளார். அந்த நபர் திடீரென பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றை எடுத்து சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் அந்த பஸ்சை அவர் எடுத்து சென்றார்.

பணிமனையில் இருந்த ஊழியர்கள் இதனை கவனிக்கவில்லை. வழக்கமான டிரைவர் தான்ன் பஸ்சை இயக்கி செல்வதாக நினைத்து கொண்டனர். இதற்கிடையே இந்த நிலையில் அந்த நபர் பஸ்சை சோழிங்கநல்லூர் வழியாக இயக்கி சென்றுள்ளார். அப்போது அந்த பஸ் தாறுமாறாக சென்றுள்ளது. மதுபோதையில் இயக்கியதால் பஸ் சாலையில் அங்கும் இங்குமாக சென்றது. இந்த நிலையில் சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி பஸ் நின்றது.
பஸ் மோதியதில் லாரி உள்ளே இருந்த டிரைவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வெளியே வந்து அரசு பஸ் டிரைவரை கீழே இறங்குமாறு கூறினார். மேலும் கண்ணு தெரியாதா என்று சத்தம்போட்டுள்ளார். அப்போது கீழே இறங்கிய போது அந்த நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி திருவான்மியூர் போலீசார் அங்கு வந்து பஸ்சை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அந்த நபர் சென்னை பெசண்ட் நகரை சேர்ந்த ஆபிரகாம் (வயது 33) என்பதும், பஸ்சை கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் கண்டக்டருடன் நடந்த தகராறு காரணமாக அவரை பழிவாங்கவே இந்த பஸ்சை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆபிரகராம் திருவான்மியூர் - ஊரப்பாக்கம் இடையே செல்லும் சென்னை மாநகர பஸ்சில் பயணம் செய்துள்ளார்.
அப்போது டிக்கெட் எடுக்கும்போது சில்லறை இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இதில் கண்டக்டருக்கும் ஆபிரகாமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பஸ்சில் பயணிகள் இருக்கும் போது ஆபிரகாமை கண்டக்டர் கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். பஸ்சில் பெண் பயணிகளும் இருக்கின்ற போது அவரை கடுமையாக திட்டி பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் அந்த கண்டக்டர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார், ஆபிரகாம். மேலும் அந்த கண்டக்டரை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார். இதனால் நேற்று நள்ளிரவில் மதுபோதையில் வந்து பஸ்சை கடத்தி சென்றுள்ளார். ஆபிரகாம் மெக்கானிக் என்பதால் பஸ்சை ஓட்டி சென்றுள்ளார். சுமார் 10 கிமீ தூரம் பஸ்சை இயக்கி சென்ற அவர் விபத்து நடந்ததன் காரணமாக போலீசில் மாட்டிக்கொண்டுள்ளார்.
நல்வாய்ப்பாக பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்து மற்ற நபர்கள் எப்படி எடுத்து செல்ல முடியும் என்பது குறித்து அரசு ஊழியர்கள் இதை கவனிக்காமல் என்ன செய்தனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். சென்னையில் அரசு பேருந்தை மதுபோதை நபர் கடத்தி சென்ற சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications