கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 மாசம் லீவு, எக்ஸ்ட்ரா சம்பளம், தனி பிளைட். தந்த கேரள நபர், நல்ல முதலாளி.. உருகும் தொழிலாளர்கள்

Google Oneindia Tamil News

கொச்சி: கொரோனா தொற்றால் உலகில் பல லட்சம் மக்கள் வேலை இழந்து வரும் இந்த நேரத்தில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சவுதி அரேபியா தொழிலதிபர், தனது ஊழியர்களுக்கு மூன்று மாதம் விடுமுறை, ஒரு மாதம் கூடுதல் சம்பளம், தாய் நாடு திருப்ப தனி விமானம் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் அந்த நல்ல முதலாளி.

கொரோனா நோய் உலகின் 215 நாடுகளுக்கு பரவி உள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,ரஷ்யா உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் பல கோடி பேர் வேலை இழந்து பணம் இல்லாமல் நெருக்கடியில் உள்ளார்கள். எந்த அறிவிப்பும் கொடுக்காமல் நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்கி வருகின்றன.

உங்க மகளை நான் பாத்துக்கறேன்.. கவலைப்படாதீங்க.. என் மகளை நீங்க பாத்துக்கங்க.. உருக வைத்த தாய்மை! உங்க மகளை நான் பாத்துக்கறேன்.. கவலைப்படாதீங்க.. என் மகளை நீங்க பாத்துக்கங்க.. உருக வைத்த தாய்மை!

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

ஆனால் ஆழப்புலாவை சேர்ந்த ஹரிகுமார் என்பவர் தான் நடத்தி வரும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து மகிழ வைத்துள்ளார்கள். கேரளாவின் ஆழப்புலாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலை தெடி சென்று கடின உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்தவர் ஹரிகுமார். இவர் ஷார்ஜாவை தலைமையிடமாகக் கொண்டு எலைட் குரூப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சார்ஜாவில் எலைட் குரூப்

சார்ஜாவில் எலைட் குரூப்

இவர் இந்த கொடூரமான பேரிடரில் தனது ஊழியர்கள் யாரையும் கைவிடவில்லை. இந்த துயரத்திலும் அவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் உடனிருந்து செய்து வருகிறார். சார்ஜாவில் எலைட் குரூப்புக்கு சொந்தமாக 12 நிறுவனங்கள் உள்ளன. இதில் பணிபுரியும் பலரும் இந்தியர்கள் ஆவர். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்களை சொந்த செலவில் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளார் லைட் குரூப் நிறுவுனர் ஹரிகுமார் முடிவு செய்தார்.

இலவமாக விமான பயணம்

இலவமாக விமான பயணம்

அண்மையில் 120 தொழிலாளர்களை தனி விமானத்தில் தாய்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் . ஷார்ஜா விமான நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த 50 இந்தியர்களையும் அதே விமானத்தில் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார. யாரிடமும் டிக்கெட் கட்டணத்தை அவர் வசூலிக்கவில்லை.விமானத்தில் ஏறும் முன் பி.பி. இ உடைகள், மாஸ்க்குகள், சானிடைஸர்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 170 பேரை ஏற்றிக் கொண்டு அந்த தனி விமானம் நேற்று கொச்சி வந்தடைந்தது. கொச்சியிலிருந்தும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அவர்கள் நிம்மதியாக ஊர் போய் சேர்ந்தார்கள்.

மீண்டும் அழைப்போம்

மீண்டும் அழைப்போம்

எலைட் குரூப் தலைவர் ஹரிகுமார் இது பற்றி கூறுகையில், '' தாய்நாடு திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்று மாதம் விடுப்பு, கூடுதலாக ஒரு மாத சம்பளமும் அளித்துள்ளேன்.. இந்தியா திரும்பினாலும் எந்த நிதி நெருக்கடி ஏற்பட்டாலும், உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். கொரோனா அச்சம் விலகிய பிறகு, மீண்டும் அனைவரும் ஷார்ஜா அழைத்து வரப்படுவார்கள்" என்றார்.

நாங்கள் இருக்கிறோம்

நாங்கள் இருக்கிறோம்

கோவையிலும் எலைட் நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளதாக சொல்லும் ஹரிகுமார், அங்கே பணி புரிய விரும்புபவர்களுக்கு கோவையில் வேலை செய்ய ஏற்பாடு செய்து தரப்படும் என்றார். கொரோனாவால சோர்ந்து போன தொழிலாளர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த உதவிகளை செய்தோம் என்றார்.

English summary
A Sharjah-based Malayali businessman brought 120 of his staff to Kerala in a chartered flight on Sunday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X