கொச்சி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

23 மணி நேர அனுமதி.. காய்ச்சல் மாத்திரை, அரிசி கஞ்சி.. 24 ஆயிரம் பில் தீட்டிய தனியார் மருத்துவமனை

Google Oneindia Tamil News

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு 23 மணி நேர சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 23 மணி நேரத்தில் வெறும் அரிசி கஞ்சி கொடுத்துவிட்டு அதன் விலை ரூ 1,380 என ரசீதில் போட்டிருந்தது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியான சம்பவம் ஆகும்.

கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் தீவிரத்தால் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிக்கு இடம் கிடைக்காதவர்கள் தனியார் மருத்துவமனையை நாடுகிறார்கள்.

நேற்று கோவை விஷ்ணு பிரபு... இன்று மாஜி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன்.. திமுகவுக்கு தாவும் அதிமுக தலைகள்நேற்று கோவை விஷ்ணு பிரபு... இன்று மாஜி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன்.. திமுகவுக்கு தாவும் அதிமுக தலைகள்

ஆனால் அங்கு கட்டணக் கொள்ளை நடத்துவது ஒரு சில மாநிலங்களில் முறைப்படுத்தவில்லை. அது போல் கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இல்லத்தரசி ஒருவர் அங்கு கொடுக்கப்பட்ட கட்டண ரசீதை கண்டு அதிர்ந்தே போய்விட்டார்.

ஷபீனா

ஷபீனா

கொச்சியில் வடுதலாவை சேர்ந்தவர் ஷபீனா சாஜு. இவருக்கு கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் ஆளுவா அன்வர் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை

இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்றாகும். இங்கு 50 ஆயிரம் முன்பணம் கட்ட தயாராக உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மணி நேரம் ஆகியும் ஷபீனாவை கண்டுகொள்வார் யாரும் இல்லை.

வெறும் காய்ச்சல்

வெறும் காய்ச்சல்

அவர் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு வெறும் காய்ச்சலுக்கான மாத்திரையும் அரிசி கஞ்சியும் மட்டுமே வழங்கப்பட்டது. ஒரு மருத்துவர் கூட அவரை வந்து பார்க்கவில்லை. உடனே தனது உறவினர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்தினார். இதையடுத்து ஷபீனாவை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தனர்.

ஷபீனா டிஸ்சார்ஜ்

ஷபீனா டிஸ்சார்ஜ்

மருத்துவமனை பில்லை செலுத்தியவுடன் ஷபீனா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளித்த சிகிச்சையால் பூரண குணமடைந்த ஷபீனா எத்தேச்சையாக பழைய மருத்துவ ரசீதை எடுத்து பார்த்தார். அதை பார்த்த அவர் அதிர்ந்தார்.

Recommended Video

    மருத்துவமனையில் அதிக கட்டணம்.. PTR வைத்த கோரிக்கை.. உடனே களத்தில் இறங்கிய ஆட்சியர்
    ஷபீனா

    ஷபீனா

    23 மணி நேரம் மட்டுமே இருந்த ஷபீனாவுக்கு ரூ 24,760ஐ கட்டணமாக செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அந்த பில்லில் பிரேக்கப்பை பார்த்த போது பாதுகாப்பு கவச உடைகளுக்கு ரூ 10,416 போடப்பட்டுள்ளது. வெறும் அரிசி கஞ்சியே கொடுக்கப்பட்ட நிலையில் உணவு என போட்டு ரூ 1,380 போடப்பட்டது. காய்ச்சல் மருந்துக்கு ரூ 24 போடப்பட்டிருந்தது.

    திருப்பி தந்த மருத்துவமனை

    திருப்பி தந்த மருத்துவமனை

    இதனிடையே வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அந்த பணத்தை உறவினர்கள் செலுத்தியுள்ளனர். இந்த ரசீதை வைத்துக் கொண்டு ஷபீனா தரப்பு புகார் கொடுக்க இருந்தது. உடனே மருத்துவமனை நிர்வாகம் அவரை அழைத்து பேசி கட்டிய பணத்தை நேற்று இரவு திருப்பி கொடுத்தனர்.

    English summary
    Private Hospital in Kochi levied Rs 1,380 for Ric porridge for only 23 hours of covid treatment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X