கோவையில் பயங்கரம்.. பள்ளி சென்ற 7 வயது சிறுமி கடத்தி கொலை.. கை,கால் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
Recommended Video

கோவை: கோவையில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியில் குடியிருந்து வருபவர் பிரதீப் மற்றும் வனிதா. துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு 5 மற்றும் 7 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள திப்பனூர் அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் குழந்தை காணாததைக் கண்டு பெற்றோர் அக்கம் பக்கம் தேடியுள்ளனர்.

போலீஸார் தேடல்
எங்கு தேடியும் கிடைக்காததைத் தொடர்ந்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் இரவு 2 மணி வரை தேடியுள்ளனர்.

போலீஸாருக்கு
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் காணாமல் போன குழந்தையின் வீட்டருகே உள்ள ஒரு வீட்டின் அருகே உள்ள சிறிய சந்தில் முகத்தில் டிசர்ட் சுற்றப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு
போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் குழந்தை இறந்த நிலையில் இருந்தது. இதையடுத்து உடற்கூறு பரிச்சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பரபரப்பு
சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மற்றும் தடய அறிவியல் துறையினர் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதா இல்லை வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 7 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications